Don't Miss!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கவனம் ஈர்க்கும் ‘அயலி’ ட்ரைலர்
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக " அயலி " என்ற தொடரினை அறிவித்துள்ளது, விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ZEE5, தற்போது இந்த 2023 ஆம் ஆண்டில் மீண்டும் "அயலி " என்ற தொடரை அறிவித்துள்ளது, இதனை Estrella stories சார்பில் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி தயாரிக்க, இயக்குநர் முத்துக்குமார் இயக்குயுள்ளார்.. இது எட்டு தொடர்களாக வெளியாக உள்ளது. இதில் அபி நட்சத்திரா , அனுமோல், அருவி மாதவன் , லிங்கா மற்றும் சிங்கம்புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இது ZEE5 இல் ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும், 8 ஆம் வகுப்பு படிக்கும் தமிழ் செல்வி என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதை தான் அயலி. அதோடு, வீரப்பண்ணை கிராமத்தில் தற்போதுள்ள பழக்கவழக்கங்கள், பருவமடைந்தவுடன் பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற நடைமுறைகளை பற்றி இந்த கதை பேசுகிறது. இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள். இருப்பினும், வீரப்பண்ணை கிராமத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கு வழி காட்டக்கூடிய மாற்றத்தை கொண்டு வருவதில் அவள் வெற்றி பெறுவாளா?
இளைஞர்களின் மனக்கசப்பு, புத்திசாலித்தனம் மற்றும் சுதந்திரமான விருப்பத்தை எடுத்துக்காட்டும் ஒரு புதிய வயதுக் கதை தான் அயலி. பழங்கால பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் உடைத்து, தனது தேடலை அடைய போராடும் தமிழ்ச் செல்வியின் பயணத்தை இந்த கதை கூறுகிறது. பேப்பர் ராக்கெட்டின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, இந்த தொடரை பார்வையாளர்களுக்கு பெருமையுடன் அறிவித்தார். முக்கிய நடிகர்களுடன் கூடுதலாக, லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரின் சிறப்பு தோற்றத்திலும் இந்த அயலி உருவாகி உள்ளது. நட்சத்திர நடிகர்கள், சமூக செய்தி மற்றும் பொழுதுபோக்கு கதைக்களத்துடன், அயலி ஜனவரி 26 அன்று ZEE5 இல் திரையிடப்பட உள்ளது.
மம்முட்டியின் மாஸ்டர் பீஸ் சினிமா... நண்பகல் நேரத்து மயக்கம் ட்விட்டர் விமர்சனம்
ZEE5, இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், "கடந்த ஆண்டு விலங்கு, ஃபிங்கர் டிப் மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற தமிழ் ஒரிஜினல்களுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பிற்கு பிறகு, மற்றொரு பொழுதுபோக்கு மற்றும் வழக்கத்திற்கு மாறான தொடரான 'அயலி'யை நாங்கள் வெளியிட உள்ளோம். சமூகச் செய்தியுடன் கூடிய பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் எப்பொழுதும் பார்வையாளர்களை ஊக்குவிக்கும், கல்வியறிவு அளிக்கும், அறிவூட்டும், மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதை ZEE5 இல் உள்ள அனைவரும் நம்புகிறோம், அயலி அப்படிபட்ட கதை தான். பழங்கால பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவைத் துரத்தும் ஒரு இளம் பெண்ணின் கதை இது. இந்த கதை பல பெண்களை தங்கள் கனவுகளை நம்புவதற்கும் அதன் பின்னால் செல்வதற்கும் தூண்டும். நன்றி "
இயக்குனர் முத்துக்குமார் பேசுகையில், "இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் வெகுஜனங்களின் பார்வையை மாற்றும் கதைகளை வெற்றிகரமாக வழங்குகின்றன, மேலும் அந்த மாற்றத்தை பிரச்சாரம் போல் இல்லாமல் மக்களுக்கு கொடுக்க நாங்கள் எடுத்து இருக்கும் ஒரு உண்மையான முயற்சி தான் அயலி . இந்தத் தொடர் பெண்களின் கல்வி, அதிகாரம் மற்றும் கனவுகளை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வலிமையை கூறும் ஒரு கதையாக இருக்கும். இந்த அதிக மணி நேர கதையை சொல்வதற்காக எங்களுக்கு ஒரு தளத்தை கொடுத்த ZEE5-க்கு எங்களது நன்றியை கூறி கொள்கிறோம்."