OTT & Theatre Release: செப்டம்பர் 19ந் தேதி.. ஜாலியோ ஜிம்கானா தான்.. தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ்!

சென்னை: வெள்ளிக்கிழமை வந்தாலே சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். என்னென்ன புது புது படங்கள் வருகின்றன. அதில் எந்த படத்தை பார்க்கலாம் என ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிடுவார்கள். அந்த வகையில், இந்த வாரம் தியேட்டரிலும் ஓடிடியிலும் ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.

தண்டகாரண்யம்: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 'தண்டகாரண்யம்' திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் 19ந் தேதி திரைக்கு வரவுள்ளது.

OTT Theatre movies OTT
Photo Credit:

சக்தி திருமகன்: விஜய் ஆண்டனி தயாரித்து, அவரே நடித்துள்ள திரைப்படம் சக்தித் திருமகன். இப்படத்தை அருவி, வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்துள்ளார். மேலும், வாகை சந்திரசேகர், செல் முருகன், கிரண், கண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கிஸ்: தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனரான சதீஷ், கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் .டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.

ஹவுஸ் மேட்ஸ்: டி.ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ். கடந்த ஆகஸ்ட் 1 திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தினை எஸ்கே பிக்சர்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 19ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்திரா: சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, மெஹ்ரீன், அனிஹா, சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாக திரைப்படம் 'இந்திரா'. சீரியல் கில்லர் பற்றிய விருவிருப்பான கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் கடந்த மாதம் 22ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், தற்போது இப்படம் செப்டம்பர் 19 ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

OTT Theatre movies OTT
Photo Credit:

போலீஸ் போலீஸ்: மிர்ச்சி செந்தில், சுஜிதா தனுஷ், ஜெயசீலன் தங்கவேல், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்செண்ட் ராய் என மற்றும் பலர் நடித்துள்ள வெப் தொடர் தான் போலீஸ் போலீஸ். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸான 'ஆஃபிஸ்' மற்றும் 'ஹார்ட்பீட் சீசன்2' ஆகிய தொடர்களில் வரிசையில் 'போலீஸ் போலீஸ்' செப்டம்பர் 19 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

டகுவான் டா முண்டா 3: குழந்தைப் பருவத்தை ஒரு அனாதை இல்லத்தில் கழித்த போதிலும், யோதா குத்துச்சண்டை சாம்பியனாக ஆசைப்படுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவன் கனவை பறிந்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறான். அதைத்தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, யோதா தூய்மையானவராகவும் உறுதியானவராகவும் மாறி, ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரியை எதிர்த்துப் போராடுகிறான். இயக்குநர் Happy Rode இயக்கிய இந்த திரைப்படம் செப்டம்பர் 19ந தேதி ZEE5 ஓடிடியில் வெளியாக உள்ளது. 'இஸ் சீசன் 2' ஆஹா ஓடிடி தளத்திலும், 'தி டிரையல் சீசன் 2' ஜியோ ஹாட்ஸ்டாரிலும், 'ஜென் வி சீசன் 2' பிரைம் வீடியோ ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X