Ott This Week - வீக் எண்ட் செலிபிரேஷனுக்கு ரெடியா?.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் படங்கள் இவைதான்

சென்னை: தியேட்டர்களில் படங்கள் ரிலீஸாகும்போது ரசிகர்களுக்கு எப்படி ஒரு கொண்டாட்ட மனநிலை இருக்குமோ அதேபோல்தான் வாராவாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களின்போது இருக்கும். வீட்டில் இருந்தபடி குடும்பத்தோடு சேர்ந்து வீக் எண்டில் ஜாலியாக ஓடிடியில் படம் பார்த்து ரிலாக்ஸ் ஆகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் படங்கள் குறித்து பார்க்கலாம்.

சினிமா பார்ப்பது என்பது அனைவருக்குமே சலிக்காத ஒன்று. அதனால்தான் உலகம் முழுவதும் இத்தனை வருடங்கள் கழித்தும் சினிமா என்னும் கலை அழியாமல் இருக்கிறது. இப்போது வெப் சீரிஸ்களின் வருகையும் அதிகரித்திருக்கின்றன. அதிலும் ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு சினிமா, வெப் சீரிஸ்களை ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்தோடு பார்த்துவருகிறார்கள். தியேட்டருக்கு குடும்பத்தோடு ஒரு படம் பார்க்க சென்றால் ஆயிரம் ரூபாய்வரை செலவு ஆகிறது.

ஓடிடிக்கு நல்ல ரெஸ்பான்ஸ்: அதே பணத்துக்கு ஓடிடி சந்தா கட்டினால் மாத கணக்கில் தனக்கு பிடித்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் தனது குடும்பத்தோடு கண்டு களிக்கலாம். தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகுதான் ஓடிடியில் ரிலீஸாகின்றன. இருப்பினும் வெயிட் செய்து அதில் பார்க்கும் ரசிகர்களும் அதிகரிக்க செய்திருக்கிறார்கள்.

Here are Details about Upcoming OTT Release This Week Movies Tamil Oct 1 To Oct 7 2025

இந்த வார ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்க்கலாம். சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் மதராஸி திரைப்படம் கடந்த மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. தற்போது அந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிக்கொண்டிருக்கிறது. காந்தி கண்ணாடி திரைப்படமும் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமாகிறது. இரண்டு படங்களுக்கும் இங்கும் நல்லபடியே ரெஸ்பான்ஸ் கிடைத்துவருகிறது.

சாகசம்: மலையளத்தில் பிபின் கிருஷ்ணா இயக்கத்தில் பாபு ஆண்டனி, நரேன், கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சாகசம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியிருக்கிறது. அதேபோல் கீர்த்தி ரெட்டி, ஸ்ரீலீலா நடித்திருக்கும் கன்னட படமான ஜூனியர் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது. இந்தப் படத்தில்தான் வைரல் வைய்யாரி என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா சூப்பர் ஆட்டம் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃப்ளிக்ஸில் வெப் சீரிஸ்: வெப் சீரிஸை பொறுத்தவரை ஷரத்த ஸ்ரீநாத், சந்தோஷ் பிராதப் உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'தி கேம் யூ நெவர் ப்ளே அலொன்' என்ற வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. மேலும் பாலிவுட்டை பொறுத்தவரை, 13th: Some Lessons Aren't Taught in Classrooms என்ற வெப் சீரிஸ் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் தவிர்த்து, ஷ்ஷ் வெப் சீரிஸின் இரண்டாவது பாகம், நாளை நமதே ஆகியவை ஆஹா தமிழில் ஸ்ட்ரீமாகிற்து.

More from Filmibeat

Read more about: this week ott ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X