வந்திடுச்சு மார்ச்...ஓடிடியில் ரிலீசாக காத்திருக்கும் தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா ?
சென்னை : பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் துவங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ளதால், மார்ச் மாதத்தில் ஓடிடி.,யில் என்னென்ன தமிழ் படங்கள் எல்லாம் ரிலீசாக போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா, லாக்டவுன் காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி.,யில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ஓடிடி ரிலீசுக்கு இருக்கும் மவுசு கொஞ்சமும் குறையவில்லை. அப்படி மார்ச் மாதத்தில் எந்ததெந்த தமிழ் படங்கள், எந்தெந்த ஓடிடி தளத்தில் ரிலீசாக போகிறது என்ற முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.
சன் நெக்ஸ்ட் - நாய் சேகர்
சோனி லைவ் - கடைசி விவசாயி
நெட்ஃபிளிக்ஸ் - 83 தி ஃபிலிம், ராக்கி
அமேசான் பிரைம் - எஃப்ஐஆர்
ஜீ5 - வீரமே வாகை சூடும், வலிமை, என்ன சொல்ல போகிறாய்
ஹாட்ஸ்டார் - தேள், மாறன்
சிம்ப்ளி சவுத் - வீரபாண்டியபுரம்
இந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் கன்ஃபார்ம் செய்யப்பட உள்ளதாம். லேட்டஸ்ட் தகவலின் படி அஜித் நடித்துள்ள வலிமை படம் மார்ச் 25 ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் விஷாலின் வீரமே வாகை சூடும் மார்ச் 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ் , தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் மார்ச் 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.
இதே போல் 83 படம் மார்ச் 3வது வாரத்தில் டிஜிட்டலில் மட்டுமின்றி டிவியிலும் வெளியிடப்பட உள்ளதாம். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











