twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ரெண்டாவது ட்ரீட்: ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ செகண்ட் சீசன் கன்ஃபார்ம்

    |

    லண்டன்: உலகளவில் ஹாலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்.'

    Recommended Video

    Dairy Review | Camera Man-க்கு நல்ல சவால் | Cool Suresh Speech

    HBO தொலைக்காட்சியில் தொடர்ந்து 8 ஆண்டுகள் ஒளிப்பரப்பான கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    கேம் ஆஃப் த்ரோன்ஸின் முந்தைய கதையை விவரிக்கும் விதமாக தற்போது ஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடர் வெளியாகி வருகிறது.

    பா.ரஞ்சித் படத்திற்கு 'A’ சான்றிதழ்..அப்படி என்ன படத்தைய்யா எடுத்து வெச்சியிருக்காரு?பா.ரஞ்சித் படத்திற்கு 'A’ சான்றிதழ்..அப்படி என்ன படத்தைய்யா எடுத்து வெச்சியிருக்காரு?

    கேம் ஆஃப் த்ரோன்ஸ் அறிமுகம்

    கேம் ஆஃப் த்ரோன்ஸ் அறிமுகம்

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர், HBO தயாரிப்பில் 2011 முதல் ஆண்டுதோறும் ஒவ்வொரு பாகமாக வெளியானது. ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டின் எழுதிய A song of Ice and Fire' நாவல் தொகுப்பை தழுவி தான் இந்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' உருவானது. ஏழு தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய சாம்ராஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்பதே இந்தத் தொடரின் கதையாகும். இந்தத் தொடரில் ஏகப்பட்ட பாத்திரங்களும், அவர்களுக்கான பின்புலக் கதைகளும் உண்டு.

    கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த தொடர்

    கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த தொடர்

    டேவிட் பெனியோஃப். டி.பி.வெயிஸ் இருவரும் இயக்கிய கேம் ஆஃப் த்ரோன்ஸ்' டைட்டிலின் அர்த்தம், அரியணைக்கான ஆட்டம்.' அதை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தத் தொடருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரின் 8 சீசன்களும் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேக்கிங், பாத்திரங்கள் வடிவமைப்பு, திரைக்கதை, வசனம், பின்னணி இசை என அனைத்திலும் அல்டிமேட்டாக அசரடித்தது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்.'

    ஹவுஸ் ஆஃப் தி டிராகன்

    ஹவுஸ் ஆஃப் தி டிராகன்

    இதனையடுத்து, இந்தத் தொடரின் முந்தைய கதையை பின்னணியாகக் கொண்டு 'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' என்ற புதிய தொடரை, HBO தொலைக்காட்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் டார்கேனியர்கள் எப்படி போரில் வீழ்ந்தார்கள் என்பதை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. கடந்த வாரம் வெளியான முதல் எபிசோடை, 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    இரண்டாவது சீசனுக்கு ப்ரோமோ

    இரண்டாவது சீசனுக்கு ப்ரோமோ

    'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' தொடரின் முதல் எபிசோட் மிகப் பெரிய சக்ஸஸ் கொடுத்துள்ளது, மேலும் நாளை வெளியாகும் இரண்டாவது எபிசோட் பார்க்க ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர். இதனால் இந்த தொடரின் 2வது சீசனை தொடங்க HBO நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ப்ரோமோவை 'Fire reigns' என்ற கேப்ஷனுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. ஹவுஸ் ஆஃப் தி டிராகன் முதல் சீசனே இன்னும் முடியாத நிலையில், இரண்டாவது சீசன் பற்றிய அறிவிப்பு ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

    English summary
    House of the Dragon has been renewed for Season 2
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X