War 2 OTT Release: கூலி படத்துடன் மோதிய வார் 2.. ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: யஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் ஆகஸ்ட் 14ந் தேதி கூலி திரைப்படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் 'வார் 2'. இப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார். தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் 'வார்'. இந்தப் படத்தில் டைகர் ஷெராஃப், வாணி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து வார் 2 திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில், ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருந்தார். 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் பெரும் அடிவாங்கியது.

War2 OTT Hrithik Roshan 2
Photo Credit:

வார் 2: தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் வார் 2வில் நடித்துள்ள காரணத்தால் ஆந்திரா, தெலுங்கானாவில் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்கிலும் 'வார் 2' தோல்வி அடைந்தது. 2014 ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 'ரபாசா' என்ற படம் வெளியாகி பெரும் தோல்வியை தழுவியது. அதற்குப் பிறகு அவரது நடிப்பில் மாபெரும் தோல்விப் படம் என்றால் அது 'வார் 2' தான். இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் ஜூனியர் என்.டி.ஆர் பேசியதை வைத்து பலரும் இணையத்தில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். 'வார் 2' படத்தின் தெலுங்கு உரிமையை மிகப்பெரிய தொகைக்கு நாக வம்சி வாங்கி வெளியிட்டார். படம் சரியாக போகாததால், அவருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை இப்படம் கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

படத்தின் கதை: எதிரியாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய வில்லனை எதிர்த்து போராடுகின்றனர். அந்த போராட்டத்தில் இவர்கள் வென்றார்களா... இல்லையா.. என்பது தான் படத்தின் கதை. கூலி படத்துடன் வார் 2 திரைப்படம் வெளியானது இந்திய அளவில் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இதனை தென்னிந்திய vs வட இந்திய சினிமாவின் போட்டியாக பார்த்தனர். கூலி திரைப்படம் வெளியானதால், வார் 2 படத்திற்கு தமிழகத்தில் தியேட்டர்கள் குறைவாகவே கொடுக்கப்பட்டன. எது எப்படி இருந்தாலும், கூலி மற்றும் வார் 2 இரண்டு படங்களுமே சுமாராகத்தான் இருந்தது.

ஓடிடி ரிலீஸ்: 'வார் 2' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளம் பெற்றுள்ளது. நெட்ஃபிக்ஸ் சந்தாதாரர்கள் இத்திரைப்படத்தை 8 வாரங்களுக்குப் பிறகு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தங்கள் வீடுகளில் இருந்தே படத்தை பார்க்கலாம். ₹400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், இதுவரை ₹300 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது வேலை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மந்தமாக உள்ளது. வார நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: hrithik roshan ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X