என்னது...அதுக்குள்ள பீஸ்ட் ஓடிடி ரிலீசா...எப்போ, எங்கு பார்க்கலாம் தெரியுமா?

சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் படம் தியேட்டரில் ரிலீசாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்பெல்லாம் ஒரு படம் தியேட்டரில் ஓடவில்லை என்றால், அதை உடனடியாக ஏதாவது ஒரு சேனல் வாங்கி, அதை டிவியில் போட்டு விடுவார்கள். ஆனால் இப்போது ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே அதன் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பல கோடி கொடுத்து முக்கிய ஓடிடி தளங்கள் வாங்கி விடுகின்றன. இதனால் படம் தியேட்டரில் கலெக்ஷன் பார்த்து பிளாக் பஸ்டர் படமாக இருந்தாலும் சரி, ஃபிளாப் ஆனாலும் சரி அதை 3 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்வது வழக்கமாகி விட்டது.

ஓடிடி.,க்கு வந்த வலிமை

ஓடிடி.,க்கு வந்த வலிமை

அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு, 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் தான் நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்பாகவே வலிமை படம் 5 மொழிகளில் ஜீ 5 சேனலில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஓடிடி.,யிலும் அதிக நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை வலிமை பெற்றுள்ளது.

பீஸ்ட் ஓடிடி.,க்கு வருதா

பீஸ்ட் ஓடிடி.,க்கு வருதா

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படமும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இல்லை பீஸ்ட் படம் ஃபிளாப் ஆகி உள்ளது என பல விதமான கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இருந்தாலும் படம் ரிலீசாகி 3 நாட்களிலேயே ஓடிடி ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது தான் காரணமா

இது தான் காரணமா

ஏற்கனவே பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு விஜய் ரசிகர்களே அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் ரிலீசான அடுத்த நாளே கேஜிஎஃப் 2 ரிலீசானதால், பீஸ்ட் படம் அடி வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. கேஜிஎஃப் 2 படம் பார்க்க ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால், இரண்டே நாட்களில் பீஸ்ட் படத்தை தூக்கி விட்டு, பல தியேட்டர்களில் கேஜிஎஃப் 2 திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பீஸ்ட் தியேட்டர்கள் குறைந்ததால் ஓடிடி.,யில் ஓட்டி விடலாம் என படக்குழு நினைத்திருப்பதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் ஓடிடி ரிலீஸ் எப்போ

பீஸ்ட் ஓடிடி ரிலீஸ் எப்போ

பீஸ்ட் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் நெக்ஸ்ட் தளம் 40 கோடிக்கு வாங்கி உள்ளது. இதே போல் தென்னிந்திய டிஜிட்டல் உரிமத்தை 45 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் வாங்கி உள்ளது. சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளங்களில் மே 11 ம் தேதி பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் தியேட்டரில் ரிலீசாகி மூன்று வாரங்கள் ஆக வேண்டும் என்பதற்காக தான் படக்குழுவினர் காத்திருக்கிறார்களாம். விரைவில் பீஸ்ட் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பை சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளங்கள் வெளியிட உள்ளனவாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X