OTT: அமானுஷயம், திகில் அனுபவத்தை கொடுத்த ஜென்ம நட்சத்திரம்.. ஓடிடியில் வெளியானது!

சென்னை: ஒரு நொடி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணி வர்மன் ஜென்ம நட்சத்திரம் படத்தை இயக்கி உள்ளார். ஒரு நொடி படத்தில் ஹீரோவாக நடித்த தமன் அக்ஷன் இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். மல்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தின் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஜென்ம நட்சத்திரம் படத்தின் கதையில் ஹீரோயினுக்கு அமானுஷ்யமான விஷயங்கள் கனவில் வருகிறது. ஹீரோவிற்கு சினிமாவில் நல்ல இயக்குனராக வேண்டும், தனது முதல் படத்தை தான் நினைத்தது போல் எடுக்க வேண்டும் என வாய்ப்பு தேடி வருகிறார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம், அரசியல்வாதியிடம் டிரைவராக வேலை செய்யும் காளி வெங்கட், அவரின் மகளுக்கு மருத்துவ அறுவை சிகிச்சைக்காக ரூ. 40 லட்சம் தேவைப்படுகிறது. இந்த பணத்தை அரசியல் வாதியிடம் கேட்கும் காளி வெங்கட்டுக்கு அவமானம் ஏற்படுகிறது. இதனால் அரசியல்வாதியின் கருப்பு பணத்தை கடத்தி விடுகிறார் காளி வெங்கட், இதை தெரிந்து கொண்ட அரசியல்வாதியின் ஆட்கள் காளி வெங்கட்டை கொன்று விடுகின்றனர். காளி வெங்கட் சாவதற்கு முன் கடத்திய பணத்தை தான் புதுசேரி செல்லும் வழியில் ஒரு பழைய கட்டிடத்தில் மறைத்து வைத்துள்ளதாக ஹீரோ மற்றும் நண்பர்களிடம் சொல்லி விட்டு, தனது மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கூறிவிட்டு இறந்து விடுகிறார்.

Jenma Natchathiram OTT
Photo Credit:

ஜென்மநட்சத்திரம்: ஹீரோவும் நண்பர்களும் அந்த பழைய கட்டடத்திற்கு செல்கிறார்கள். ஆனால், அந்த பங்களாவில் இருக்கும் தீய சக்தி பல வேண்டாத வேலைகளை செய்கிறது. இதில் ஒருவர் ஒருவராக பலியாகின்றனர். கடைசியில் அந்த பணம் ஹீரோ கையில் கிடைத்ததா...காளி வெங்கட் மகளின் உயிர்
காப்பாற்றப்பட்டதா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை. மணிவர்மன் இயக்கத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 18ந் தேதி இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆங்கிலத்தில் வெளிவந்த ஓமன் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ஜென்ம நட்சத்திரம். அதனை தமிழ் ஆடியன்ஸுக்கு பிடிப்பது போல், எமோஷ்னளுடன் கலந்த ஹாரர் ட்ராமாவாக எடுத்து பாராட்டை பெற்றுள்ளார் இயக்குநர். இத்திரைப்படம் இன்று பிரைம் வீடியோ மற்றும்டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Read more about: ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X