Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலின் வந்த நேரத்தில் வீடுகளில் கறுப்புக்கொடி.. பரபரத்த கரூர்.. பின்னணி என்ன?
- Technology
இந்த Vivo போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா?
- Finance
வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து.. 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு!
- Automobiles
விநோத தோற்றத்தில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!
- Lifestyle
தவா மஸ்ரூம்
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஓடிடியில் விக்ரம் எப்போ ரிலீஸாகுது தெரியுமா? இந்த வாரம் இத்தனை படங்கள் ஓடிடி ரிலீஸா?
சென்னை: கமல் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ்களை அடித்து நொறுக்கி வரும் விக்ரம் திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான விடையை இங்கே பார்ப்போம்.
மேலும், இந்த வாரம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் என்ன என்ன படங்கள் ஓடிடியில் வெளியாகப் போகிறது என்பதையும் பார்ப்போம்.
தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓடிடியில் வீட்டுக்குள்ளே அமர்ந்து கொண்டு ஒரு மாதத்திற்குள் எல்லா புதுப்படங்களும் வெளியாகப் போகிறதே அப்போது பார்த்துக் கொள்ளலாம் என பெருவாரியான மக்கள் நினைக்கத் தொடங்கியது தான் ஓடிடியின் ரியல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
எவ்வளவு கார் இருந்தாலும் விஜய்க்கு பிடித்த வாகனம் இதுதானாம்.. அவங்க அம்மாவே சொன்ன தகவல்!

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்
மல்டிவர்ஸ் கான்ஸ்பெட்டில் உருவான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. மார்வெல் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா நடித்துள்ளனர். மேலும், முதல் ஸ்பைடர்மேனான டாபி மார்குயிர் மற்றும் அமேசிங் ஸ்பைடர்மேனான ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் 13ம் தேதி முதல் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் ஸ்ட்ரீமிங் ஆக போகிறது.

சிபிஐ 5 தி பிரைன்
மம்மூட்டி நடிப்பில் வெளியான சிபிஐ 5 தி பிரைன் திரைப்படம் ஜூன் 12ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. ஜூன் 14ம் தேதி அவதார புருஷா முதல் பாகம் மற்றும் இன்ஃபினைட் ஸ்டார்ம் உள்ளிட்ட படங்கள் அமெசான் பிரைமிலும் வெளியாக உள்ளன.

நயன்தாரா படம்
வரும் ஜூன் 17ம் தேதி நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ஓ2 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள படம் என்பதால், இந்த படத்திற்கு ஓடிடி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

ஃபிங்கர் டிப் சீசன் 2
ஜி5 ஓடிடி தளத்தில் அக்ஷரா ஹாசன், சுனைனா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஃபிங்கர் டிப் வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 17ம் தேதி ஜி5ல் வெளியாகிறது. இந்தமுறை பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

புஷ்கர் காயத்ரியின் சுழல்
அதே ஜூன் 17ம் தேதி அமேசான் பிரைமில் நடிகர் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் உருவாகி உள்ள வெப்சீரிசான சுழல் வெளியாகிறது. இயக்குநர் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த வெப்தொடருக்கான கதையை விக்ரம் வேதா இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி உள்ளனர்.

விக்ரம் ஓடிடி ரிலீஸ்
இத்தனை படங்கள், வெப்சீரிஸ்கள் என இந்த வாரம் வெளியானாலும் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடித்துள்ள விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ பாஸ் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஜூலை 1 அல்லது ஜூலை 8ம் தேதிக்குள் விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.