இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்… ஓடிடி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் என்ன?

சென்னை: ஒவ்வொரு வாரம் திரையரங்குகள், ஓடிடி தளங்களில் படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன.

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால், கடந்த இரு வாரங்களாக பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

தீபாவளியும் நெருங்கி வருவதால் இந்த வாரம் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகிறது.

தியேட்டர் ரிலீஸ்

தியேட்டர் ரிலீஸ்

செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் படம் தொடர்ந்து இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருவதால், பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி ரிலீஸும் களைக்கட்ட உள்ளது. இந்நிலையில், இந்த வாரம் தமிழில், ரிப்பீட் ஷூ, ஆற்றல், சஞ்ஜீவன், முகமறியான் ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் இன்று ( அக் 14) வெளியாகியுள்ளன.

காட்ஃபாதர், காந்தாரா

காட்ஃபாதர், காந்தாரா

அதேபோல், தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெற்றிப் பெற்ற 'காட்ஃபாதர்' திரைப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மோகன் ராஜா இயக்கிய இந்தப் படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், கன்னடத்தில் மிகப் பெரிய பெற்றுள்ள 'காந்தாரா' படமும் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை (அக் 15) வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும், இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு இந்த வாரம் வெளியாகிறது.

ஓடிடி ரசிகர்களுக்கு என்ன ஸ்பெஷல்

ஓடிடி ரசிகர்களுக்கு என்ன ஸ்பெஷல்

ஓடிடி ரசிகர்களுக்கு ஏற்கனவே சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இந்த வாரம் விருந்தாக வெளியாகிவிட்டது. இந்த வாரம் 13ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான அதர்வாவின் டிரிக்கர், வைபவ் நடித்துள்ள பஃபூன் ஆகிய படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகின. அதர்வா நடித்துள்ள ட்ரிகர் படம் ஆஹா ஓடிடியிலும், பபூன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது.

செல்லோ ஷோ

செல்லோ ஷோ

ஓடிடி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுவது வெப் சீரிஸ்கள் தான். அந்த வகையில் இந்த வாரம் தாய்லாந்து வெப் சீரிஸ்ஸான Beyond Evil' நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதேபோல், 'The Playlist', 'Mismatched' ஆகிய வெப் சீரிஸ்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகின்றன. முக்கியமாக இந்தியாவில் இருந்து ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ள 'செல்லோ ஷோ' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. குஜாரத்தி மொழித் திரைப்படமான செல்லோ ஷோ தான் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்கர் போட்டியில் கலந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X