For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Moon Knight: மார்வெலின் மூன் நைட் எப்படி இருக்கு? பார்க்கலாமா? வேண்டாமா? மொத்த கதையும் இதோ!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: ஓடிடி ரசிகர்களையும் மார்வெல் விட்டு விடக் கூடாது என்பதற்காக புதிய புதிய சூப்பர் ஹீரோ வெப்சீரிஸ்களை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறது.

  லோகி வெப்சீரிஸின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மூன் நைட் வெப்சீரிஸ் கடந்த 6 புதன்கிழமைகளாக பட்டையை கிளப்பி வந்தன.

  மார்ச் 30 முதல் மே 4 வரை இந்த 6 எபிசோடுகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. முதல் எபிசோடில் இருந்து 6வது எபிசோடு வரை என்ன நடந்தது என்பதை சுருக்கமாக இங்கே பார்ப்போம்..

  என்ன சொல்றீங்க...ஏகே 61ல் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கலியா...அப்புறம் ? என்ன சொல்றீங்க...ஏகே 61ல் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கலியா...அப்புறம் ?

  மார்வெலில் ஒரு அந்நியன்

  மார்வெலில் ஒரு அந்நியன்

  மார்வெல் திரையுலகில் ஒரு அந்நியன் சூப்பர்மேனாக வந்தால் எப்படி இருக்கும் அது தான் இந்த வெப்சீரிஸின் கதை. கோன்ஷு எனும் கிரேக்க கடவுள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மார்க்கை தனது அவதாரமாக மாற்றி அவன் மூலம் சில காரியங்களை செய்ய நினைத்தது. தவறு செய்பவர்களை கொல்வது தான் அதன் நோக்கம். முதல் எபிசோடில் ஸ்டீவன் கிராண்டாக வரும் ஹீரோ தனக்குள் மார்க் மற்றும் மூன்நைட் என இரு கதாபாத்திரங்கள் இருப்பதை அறிந்து கொள்கிறான்.

  விசித்திரமான வில்லன்

  விசித்திரமான வில்லன்

  கையில் தராசு பச்சைக் குத்தியிருக்க அமித் கடவுளின் ஆட்சியை மீண்டும் மலர செய்யப் போவதாக சொல்லிக் கொண்டு வில்லன் ஹாரோ பாவம் செய்பவர்களை கருவிலே அழிக்கும் கொடூரனாக அறிமுகமாகிறார். ஹாரோவிற்கும் ஸ்டீவனுக்கும் ஏற்படும் சந்திப்பு மற்றும் ஸ்டீவன் கிராண்ட் இடம் இருக்கும் அரிய பொருளான அமித் கல்லறை கண்டுபிடிக்கும் காம்பஸை தேடுவது என கதை நகர்கிறது.

  லைலா

  லைலா

  மார்க் தான் ரியல் என்றும் மார்க் உருவாக்கிய ஆல்டர் வெர்ஷன் தான் கிராண்ட் என்பதையும் மார்க்கின் மனைவி லைலாவின் சந்திப்பு ஸ்டீவன் கிராண்டுக்கு புரிய வைக்கிறது. மூன் நைட் ஷூட் நினைத்த மாத்திரத்திலேயே கான்ஷுவின் சக்தியால் வரும் நிலையில், எதிரிகளை பந்தாடுகிறார் மார்க். ஆனால், மார்க் மற்றும் ஸ்டீவனுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இருவரும் மாற்றி மாற்றி வந்து வில்லனை தடுக்க லைலாவுடன் இணைந்து எகிப்துக்கு செல்கின்றனர்.

  மனநல மருத்துவமனை

  மனநல மருத்துவமனை

  எகிப்தில் உள்ள அலெக்ஸாண்டரின் கல்லறையில் இருந்து அமித்தின் சிலையை மார்க் கைப்பற்றியதும், ஹாரோ அவனை சுட்டுக் கொல்கிறான். விழித்து எழுந்து பார்த்தால், ஹாரோ மனநல மருத்துவராகவும், மார்க் நோயாளியாகவும் இதெல்லாம் முற்றிலும் ஒரு கற்பனை என்பது போல காட்சிப்படுத்தி இயக்குநர் முகமது டயாப் ரசிகர்களை ரொம்பவே குழப்பி எடுத்து விட்டார்.

  கான்ஷுவுக்கும் ஹமித்துக்கும் சண்டை

  கான்ஷுவுக்கும் ஹமித்துக்கும் சண்டை

  4வது மற்றும் 5வது எபிசோடுகள் இப்படியே ரசிகர்களை எது தான்பா கதை என்றே புரியாமல் புலம்ப வைத்த நிலையில், குண்டடிப்பட்ட நிலையில், மார்க் மற்றும் ஸ்டீவ் நரகத்தில் இருந்து மீண்டும் வரும் வழியை முயற்சி செய்வதாக ரொம்பவே ரீல் சுற்றி உள்ளனர். அமித்தை ஹாரோ விடுதலை செய்ய கான்ஷுவை லைலா விடுதலை செய்கிறார். இரண்டு கடவுள்களுக்கும் செம சண்டை நடக்கும் போது, மீண்டும் உயிர்த்தெழும் மார்க், மூன் நைட்டாக மாறி ஹாரோவுடன் சண்டை போட்டு அவனையும் அமித்தையும் மந்திர சொற்களால் கட்டிப் போட்டு அடைக்கிறான். கான்ஷு அமித்தையும் ஹாரோவையும் கொல்ல கட்டளையிட, அதற்கு முன்னதாக போட்ட டீலை நினைவுப்படுத்தி கொல்ல வேண்டும் என்றால் நீயே கொன்று விடு, எங்களை விடுதலை செய் என மூன் நைட் சக்தி வேண்டாம் என அதை விட்டு விலகுகிறான் மார்க்.

  அடுத்த சீசனுக்கு அடி

  அடுத்த சீசனுக்கு அடி

  எல்லாமே சுபமாக முடிந்தது என்பது போல 6 சீசன்களில் விறுவிறுப்பாக சென்ற மூன் நைட் இனி அவ்வளவு தானா என ரசிகர்கள் நினைக்காமல் இருக்க போஸ்ட் கிரெடிட் சீனில் ஹாரோவை மனநல மருத்துவமனையில் நோயாளியாக மாற்றி, அவனை காரில் கடத்தும் கான்ஷு, மார்க் போனால் என்ன எனக்கு ஜேக் லாக்லி இருக்கிறான் என மீண்டும் மூன் நைட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆஸ்கர் ஐசாக்கையே கார் டிரைவராக காட்டுகின்றனர். மேலும், ஹாரோவை அவன் துப்பாக்கியால் சுட அடுத்த சீசன் எப்போ வரும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டி இந்த முதல் சீசனை முடித்துள்ளனர். லைலாவுக்கும் டாவரட் தேவதையின் சக்தி கிடைத்து அவரும் புதிய சூப்பர் ஹீரோவாக மாறி உள்ள நிலையில், அடுத்த சீசன் மேலும், விறுவிறுப்பை கூட்டும் என்பதில் சந்தேகமில்லை.

  English summary
  Moon Knight Season 1: Episode 1 to 6 Full roundup and post credits surprise are also here. Marvel’s another super hero webseries Moon Knight makes fans full of craze with its complicated story.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X