இணையத்தில் தீயாய் பரவும் நங்கேலி மார்பை அறுக்கும் காட்சி.. சாதிய வன்மத்தை சாடும் நெட்டிசன்கள்!

சென்னை: அமேசான் ஓடிடி தளத்தில் வினயன் இயக்கத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு திரைப்படம் இந்த மாதம் வெளியானது.

நடிகை கயாடு லோஹர் நங்கேலியாக அந்த படத்தில் நடித்திருந்தார். தோள் சீலை புரட்சிக்கு வித்திட்ட நங்கேலியின் மிரட்டலான காட்சிகளை நெட்டிசன்கள் தற்போது தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும், சாதிய வன்மம் எந்தளவுக்கு மக்களை பாதித்துள்ளது என்பதையும், இன்றும் சாதிய பிரச்சனைகளை கிளப்புவர்கள் மனிதர்கள் தானா? என விளாசி வருகின்றனர்.

சாதி மத பிரச்சனை

சாதி மத பிரச்சனை

சுதந்திரம் கிடைக்காத முன்பு தான் தனி டம்ளர், எங்க கிணத்துல தாழ்த்தப்பட்ட சாதியினர் தண்ணிக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லி பிரச்சனைகள் பல நடந்தன. ஆனால், சுதந்திரத்துக்கு முன்னதாக மொத்த பேரும் அடிமைகளாக இருந்தனர். ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு விடுதலை அடைந்தாலும், இன்னமும் சாதி, மத பிரச்சனையில் இருந்து மனிதர்கள் விடுதலை அடையவே இல்லை.

மக்களால் உருவாக்கப்பட்டவை

மக்களால் உருவாக்கப்பட்டவை

சாதியும் மதமும் மனிதர்களால் மனிதர்கள் சீர் பட வாழ்வதற்காக வகுக்கப்பட்டவை. ஆனால், சிலரின் சுயநலத்திற்காக சில மக்களை தாழ்த்தப்பட்ட சாதியினராக பிரித்து அவர்களை இன்னமும் அடிமைகளாக வைப்பது கொடுமை. கல்வி அறிவு பெற்றும் இன்னமும் ஏன் இப்படிப்பட்ட செயல்களை மனிதர்கள் செய்து வருகின்றனர் என்கிற கேள்வியை நங்கேலி மார்பை அறுக்கும் அந்த காட்சியை தீயாக ஷேர் செய்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

மாராப்பு அணிய வரி

மாராப்பு அணிய வரி

தாழ்த்தப்பட்ட சாதி பெண்கள் தங்களின் மானத்தை காக்க மாராப்பு அணியக் கூடாது என்றும், அப்படி அணிய வேண்டும் என்றால் அதற்கு முலை வரி (breast tax) கட்ட வேண்டும் என கேரளாவில் நிலவிய அதிகபட்ச கொடுமையை எதிர்த்து புரட்சி வெடிக்க செய்த நங்கேலியின் காட்சியை பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் தத்ரூபமாக படமாக உருவாக்கி சாதிய வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினயன்.

தீயாக பரவும் காட்சிகள்

தீயாக பரவும் காட்சிகள்

இந்நிலையில், நடிகை கயாடு லோஹர் நங்கேலியாக நடித்து தனது மார்பகத்தை அறுக்கும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. அமேசான் பிரைம் ஓடிடி தளம் என்பதால் எந்தவொரு சென்சாரும் இன்றி அந்த காட்சிகள் சிஜி உதவியுடன் எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதனை ஷேர் செய்து சாதிய வன்மத்திற்கு எதிராக நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X