ஓடிடியில் வெளியான கல்யாணி பிரியதர்ஷனின் லோகா.. ஓவர் ரேட்டட் என ஓட்டும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் இதற்கு முன் வெளியான மோகன்லால், மம்முட்டி என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் இந்த ஆண்டு வெளியான லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம் பின்னுக்குத்தள்ளி 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை ஈட்டி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

லோகா திரைப்படம் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான நிலையிலும், அதன் ஓடிடி ரிலீஸை பொறுமையாக வெளியிடவே விரும்புவதாக தெரிவித்த தயாரிப்பாளர் துல்கர் சல்மான் தீபாவளிக்கு கூட லோகாவை வெளியிடாமல் இன்று வெளியிட்டுள்ளார்.

Overrated Kalyani Priyadharshan s Lokah Chapter 1 Chandra roasted after its OTT release

ஜியோ ஹாட்ஸ்டாரில் நள்ளிரவு 12 மணிக்கு நீலியின் ஆட்டத்தை பார்க்க ரெடியா என அறிவிப்புக வெளியான நிலையில், காட்டேரி படத்தை மிட் நைட்ல பார்த்தா நல்லா திகிலா இருக்கும்னு நினைத்து பார்த்த ஓடிடி ரசிகர்கள் தற்போது படத்தில் ஒண்ணுமே இல்லை ஓவர் ரேட்டட் என சோஷியல் மீடியாவில் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

பெங்களூருவை தப்பா காட்டியிருக்காங்க: ஓடிடியில் லோகா திரைப்படம் வெளியான நிலையில், படம் ஆரம்பித்து 30 நிமிடங்கள் கூட ஆகவில்லை, பெங்களூருவை தப்பா காட்டியிருக்காங்க, இந்துக்கள் பெண்களை கொடுமைப்படுத்துவார்கள் என மோசமாக சித்தரித்துள்ளனர். இந்த படத்தை மலையாளிகள் எப்படி கொண்டாடுனாங்க என இந்த நெட்டிசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நல்லவேளை தியேட்டருக்கு போகல: துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி, டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான லோகா திரைப்படத்தை நல்லவேளை திரையரங்கு சென்று பார்க்கவில்லை என இந்த ரசிகர் போட்டு பொளந்துள்ளார்.

மிகப்பெரிய மோசடி: துல்கர் சல்மான் லோகா படத்தை வைத்து மிகப்பெரிய மோசடி செஞ்சிட்டாரு என்றும் இது வெறும் சுமார் மூஞ்சு குமார் படம் தான். 2ம் பாதி எல்லாம் ஏனோதானோன்னு எடுத்து வச்சிருக்கானுங்க இதுல அடுத்தடுத்த பாகங்கள் வேற வரப்போகுதா என வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஓவர் ரேட்டட்: இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று லோகா படத்தை பெரும் பில்டப் செய்து 300 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம் என சொன்னது எல்லாம் ரொம்பவே ஓவர் ரேட்டட் தான் அப்படி லோகா படத்தில் ஒன்றுமே இல்லை என இந்த நெட்டிசன் கழுவி ஊற்றியுள்ளார்.

தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்: கல்யாணி பிரியதர்ஷன் வரும் கிளியே கிளியே பாடல் காட்சியை தியேட்டரில் போய் பார்த்திருந்தால் அந்த எக்ஸ்பீரியன்ஸ் தெரிந்திருக்கும் என்றும் ஹாலிவுட் படத்துக்கு நிகராக மலையாளத்தில் இப்படியொரு படத்தை இயக்குநர் குறைந்த பட்ஜெட்டில் கொடுத்து அசத்தியுள்ளார். பொறுமையாக ஓடிடியில் பார்த்துவிட்டு ஓவர் ரேட்டட் என புலம்ப வேண்டாம் என கல்யாணி பிரியதர்ஷன் ரசிகர்கள் காட்டேரியாக மாறி பதிலுக்கு கடிக்க ஆரம்பித்துள்ளனர். ஓடிடியில் வெளியான லோகா படம் உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு கமெண்ட் பண்ணுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X