போடு வெடிய.. சிவகார்த்திகேயனின் மதராஸி ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. இதோ வந்தது அப்டேட்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஐந்தாம் தேதி ரிலீசான மதராஸி திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக அப்படம் ஓரளவு ரெஸ்பான்ஸ் பெற்றாலும் வசூல் ரீதியாக டீசண்டான வரவேற்பையே பெற்றிருப்பதாக திரைத்துறையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் கரியரை அமரன் திரைப்படம் உச்சத்தில் கொண்டு சென்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்த அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அந்த படம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்றது. உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் அமரன் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் மதராஸி: அமரன் படம் கொடுத்த வெற்றி சிவகார்த்திகேயனுக்கு மேற்கொண்டு பொறுப்பை வழங்கியிருக்கிறது. அந்த வெற்றியை இனிவரும் படங்களில் தக்க வைக்க வேண்டும் என்ற முழுமனைப்போடு ஒவ்வொரு படத்திலும் அவர் உழைக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து இருந்தார் சிவகார்த்திகேயன். இதில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

Sivakarthikeyan s Madharaasi Movie Will Streaming in Amazon Prime OTT At October 3
Photo Credit:

முருகதாஸுக்கு முக்கியமான படம்: சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ஏ.ஆர். முருகதாஸுக்கும் இந்த படம் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது. ஏனெனில் கடந்த சில வருடங்களாக அவர் இயக்கிய படங்கள் தோல்வியையே சந்தித்தன. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்து; இனி முருகதாஸ் அவ்வளவுதான் என்ற நிலைமையை உருவாக்கியது. எனவே இந்த படத்தை ஹிட்டாக கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் முருகதாஸ்.

சுமாரான வரவேற்பு: மதராஸி திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி திரையரங்குகளில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. படம் தோல்வி அடையாமல் சுமாரான வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயனின் நடிப்பைவிடவும் வித்யூத் ஜம்வாலின் நடிப்பு ரசிகர்களால் அவ்வளவு கொண்டாடப்பட்டது. குறிப்பாக சண்டை காட்சிகள் எல்லாம் பக்காவாக இருந்தது என்று ரசிகர்கள் தங்களது கருத்தினை முன் வைத்தார்கள். ஏ.ஆர். முருகதாஸ் பொறுத்தவரை இந்தப் படத்தில் கம்பேக் கொடுத்துவிட்டார் என்றும் சமீபத்தில் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மதராஸி திரைப்படம் எவ்வளவோ பரவாயில்லை என்றும் கூறினார்கள்.

ஓடிடியில் ரிலீஸ்: இந்நிலையில் மதராஸி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படமானது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் ஸ்ட்ரீமாகும் என்று கூறப்படுகிறது. தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் போலவே ஓடிடியிலும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X