தள்ளிப் போகிறதா பிக்பாஸ் தமிழ் ஓடிடி...எப்போ ஆரம்பமாகிறது தெரியுமா ?

சென்னை : ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட பிக்பாஸ் தமிழ் ஓடிடி வெர்சன் தள்ளி போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு பிக்பாஸ் ஓடிடி வெர்சன் துவங்கும் புதிய தேதியும் வெளியாகி உள்ளது. இதனால் போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்கள் நிறைவடைந்தும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி துவங்கப்பட்டது. முந்தைய நான்கு சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது சமீபத்தில் நிறைவடைந்தது.

விரைவில் தமிழ் வெர்சன்

விரைவில் தமிழ் வெர்சன்

இதைத் தொடர்ந்து துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 இறுதி வாரத்தை அடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 ஃபினாலே நடத்தப்பட உள்ளது. இதனால் அடுத்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஏற்கனவே துவக்கி விட்டனர். பிக்பாஸ் ஓடிடி வெர்சன் ஏற்கனவே இந்தியில் துவங்கி நடத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் தமிழில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது.

உயர்த்தப்பட்ட நாட்கள்

உயர்த்தப்பட்ட நாட்கள்

12 அல்லது 13 போட்டியாளர்களுடன் துவங்கப்பட உள்ள பிக்பாஸ் தமிழ் ஓடிடி நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதலில் 45 நாட்கள் நடைபெறும் என சொல்லப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 75 நாட்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவங்க தான் போட்டியாளர்களா

இவங்க தான் போட்டியாளர்களா

வெற்றியாளர்கள் தவிர்த்து, ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் இந்த ஓடிடி வெர்சனில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி வனிதா விஜயக்குமார், ஜுலி, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி உள்ளிட்டோர் பிக்பாஸ் ஓடிடி வெர்சனில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கமலே தொகுத்து வழங்குகிறார்

கமலே தொகுத்து வழங்குகிறார்

பிக்பாஸ் தமிழ் ஓடிடி வரும் ஜனவரி 23ம் தேதி முதல் துவங்கப்படும் என்றும், இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்துவதற்காக டிவி சேனலில் ஒளிபரப்பான பிக்பாசை விட கூடுதல் சுவாரஸ்யங்களை சேர்க்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

Recommended Video

Bigg Boss OTT Tamil விரைவில்!!! | Kavin, Bala, Mahat, Namitha
துவங்கும் தேதி மாற்றமா

துவங்கும் தேதி மாற்றமா

ஆனால் லேட்டஸ்ட் தகவலின் பிக்பாஸ் தமிழ் ஓடிடி துவங்கப்படும் தேதி ஜனவரி 23ம் தேதிக்கு பதில் ஜனவரி 28ம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாம். அதிகரித்து வரும் கொரோனா பரவல் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி துவங்கப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X