For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கியர் மாத்துவாங்கன்னு பார்த்தா..வண்டியவே மாத்துறாங்க… House of the Dragon-ஐ கலாய்த்த எஸ்.ஆர். பிரபு!

  |

  சென்னை: ஹவுஸ் ஆஃப் தி டிராகன் வெப்சீரிஸை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பங்கமாக கலாய்த்து போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

  HBO தயாரிப்பில் உருவாகி உள்ள ஹவுஸ் ஆஃப் தி டிராகன் வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகி வருகின்றன. இதுவரை 6 எபிசோடுகள் வெளியாகி உள்ளன.

   LOTR: என்ன சொல்றீங்க 5000 கோடி பட்ஜெட்டா.. ரிங்ஸ் ஆஃப் பவர் வெளியான 2 எபிசோடுகள் எப்படி இருக்கு? LOTR: என்ன சொல்றீங்க 5000 கோடி பட்ஜெட்டா.. ரிங்ஸ் ஆஃப் பவர் வெளியான 2 எபிசோடுகள் எப்படி இருக்கு?

  கேம் ஆஃப் த்ரோன்ஸ் ப்ரீக்வெல்

  கேம் ஆஃப் த்ரோன்ஸ் ப்ரீக்வெல்

  9 ஆண்டுகள் ரசிகர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸ். அதன் ஒவ்வொரு எபிசோடுக்கும் ரசிகர்கள் அப்படி வெயிட் செய்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு அந்த வெப்சீரிஸ் முடிவுக்கு வந்த நிலையில், இனிமேல் அந்த டிராகனை பார்க்க முடியாத என ஏங்கிய ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஹவுஸ் ஆஃப் தி டிராகன் எனும் ப்ரீக்வெலை HBO வ்ழங்கி வருகிறது.

  ஒரே புஷ் புஷ் தான்

  ஒரே புஷ் புஷ் தான்

  இதுவரை 6 எபிசோடுகள் வெளியாகி உள்ளன. அப்பப்போ அந்த டிராகனை குதிரை போல ஓட்டி வரும் காட்சிகளை காட்டுவதை விட எந்தவொரு பெரிய விஷயத்திற்கும் அதனை பயன்படுத்தவில்லை. மேலும், கதை ஆரம்பித்தது முதல் ஒரே 'புஷ் புஷ்' என ஒவ்வொரு பெண்களாக குழந்தையை பெற்றெடுக்கும் காட்சிகள் தான் இடம்பெற்று வருகின்றன என உலகளவில் அந்த வெப்சீரிஸை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

  ரொம்ப மோசமா போகுது

  ரொம்ப மோசமா போகுது

  ராஜாங்க வெப்சீரிஸ் என ஆர்வத்தோடு சென்று பார்த்த ரசிகர்களுக்கு என்னடா ஒரே கள்ளக் காதல் வெப்சீரிஸாக இருக்கே என முகத்தை சுழிக்கும் அளவுக்கு அந்தப்புற காட்சிகளாகவே உள்ளன. போதா குறைக்கு ஏகப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் தலை விரித்து ஆடுகின்றன. ஓடிடியில் அதெல்லாம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்ட நிலையில், பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான கதையை கூட ஏன் கொடுக்க மறுக்கின்றனர் என்கிற கேள்வி தான் தற்போது ஹவுஸ் ஆஃப் தி டிராகன் வெப்சீரிஸுக்கு எதிராக திரும்பியுள்ளது.

  தண்ட செலவு

  தண்ட செலவு

  பிரம்மாண்டமாக எடுக்கிறேன் என்கிற பெயரில் பல கோடிகளை கொட்டி படமாக்கும் படக்குழு திரைக்கதைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள ரிங்ஸ் ஆஃப் ஃபயர் வெப்சீரிஸிலும் இதுவரை எந்தவொரு ஃபயரும் இடம்பெறவில்லை என குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

  நடிகர்கள் மாற்றம்

  நடிகர்கள் மாற்றம்

  ஹவுஸ் ஆஃப் தி டிராகன் 6வது எபிசோடை பார்த்தவர்கள் ஒரு நிமிடம் முன்னாடி எபிசோடை மிஸ் பண்ணிட்டோமான்னு நினைக்கும் அளவுக்கு திடீரென முக்கிய கதாபாத்திரமான ரெனேராவையே மாத்திட்டாங்க. கே கணவரை திருமணம் செய்து கொண்டு எப்படி இவர் இத்தனை குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த பாடிகார்ட்டுக்கும் இவருக்கும் நடந்த சம்பவம் என்ன ஆச்சு? வயதான ரெனேரா என்ன இப்படி தாய்க் கிழவி மாதிரி இருக்காரேன்னு கிண்டல் செய்து வருகின்றனர்.

  வண்டியவே மாத்துறாங்க

  வண்டியவே மாத்துறாங்க

  "கியர் மாத்துவாங்கன்னு பார்த்தா..வண்டியவே மாத்துறாங்க... என்ன சொன்னாலும் கேப்போங்கற ஆணவம்யா உங்களுக்கு...!! #HouseOfTheDragon" என ஒட்டுமொத்த ரசிகர்களின் குரலாக பொங்கி எழுந்திருக்கிறார் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு. வெயிட் பண்ணுங்க பாஸ் முதல் சீசன் முடிவதற்குள் கதைக்கு வந்துடுவாங்க என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

  English summary
  Dream Warrior Pictures producer SR Prabhu trolls HBO webseries House of the Dragon for its sudden change of characters in the 6th episode . Several HOD fans also feels like him and commenting about the webseries not going in good pace till now in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X