Sumathi Valavu OTT: ஓடிடியில் வெளியாகும் 'சுமதி வளவு' .. எதில், எப்போது பார்க்கலாம்?

சென்னை: மலையாளத்தில் 'மடப்பள்ளி' என்ற பெயரிலும், தமிழிலும் 'சுமதி வளவு' என்ற பெயரில் வெளியான ஒரு திகிலூட்டும் நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில், அன்னா ராஜன், ஷாஹின் சித்தி, மற்றும் சித்தா இக்குவாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், வாட்டர்மேன் பிலிம்ஸ் எல்எல்பி மற்றும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்தை விஷ்ணு சாய் சங்கர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ரஞ்சன் ராய் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில், 'சுமதி வளவு' என்று அழைக்கப்படும் ஒரு சாலை வளைவைச் சுற்றியே கதை அமைந்துள்ளது. அந்த சாலை வளைவில் சுமதி என்ற பெண்ணின் ஆவி வசிப்பதாகவும், அந்த பாதையை கடக்க முயற்சிக்கும் எவரையும் அந்த ஆவி கொன்றுவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. கிராம மக்கள் இந்த கதையை நம்புவதால், அந்த சாலையில் யாரும் பயன்படுத்துவதே இல்லை. ஆனால், படத்தின் நாயகனான அர்ஜுன் அசோகன், அந்த சாலைக்கு செல்ல வேண்டி சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த மர்மமான வளைவில் உண்மையில் ஆவி இருக்கிறதா.. அந்த வழியாக சென்ற அர்ஜூன் அசோக்கிற்கு என்ன ஆச்சு என்பது படத்தின் கதை.

Sumathi Valavu OTT Zee5
Photo Credit:

சுமதி வளவு: படத்தின் முதல் பாதி, ரசிகர்களை கவரும் வகையில் இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை தள்ளாடுகிறது. இந்த படத்தை இயக்குநர் ஒரு குறும்படமாக எடுத்து இருந்தால் நன்றாக இருக்கும், இதை முழுநீளத் படமாக எடுத்து தவறு செய்துவிட்டார் என படம் பார்த்தவர்கள் இணையத்தில் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரம், அர்ஜுன் அசோகன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். படம் தியேட்டரில் மந்தமான விமர்சனங்களை பெற்ற போதிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் ''சுமதி வளவு 2: தி ஆரிஜின்'' என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் 'சுமதி வளவு' வருகிற 26ந் தேதி முதல் ஜீ5 தளத்தில் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

More from Filmibeat

Read more about: zee5 ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X