twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிக்கெட் கட்டணம் உயர்வு, 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

    |

    சேலம்: தமிழ்நாடு திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.

    பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தலைவர் சுப்பிரமணியம், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் இந்தக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் திரையரங்க கட்டணம் உயர்வு, ஓடிடி ரிலீஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

    3 கேர்ள்ஃபிரெண்ட்.. ராயல் என்ஃபீல்ட்ல டெலிவரி பாய் வேலை.. தனுஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்! 3 கேர்ள்ஃபிரெண்ட்.. ராயல் என்ஃபீல்ட்ல டெலிவரி பாய் வேலை.. தனுஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

    ஓடிடியால் பாதிக்கப்படும் திரையரங்குகள்

    ஓடிடியால் பாதிக்கப்படும் திரையரங்குகள்

    கொரோனாவுக்கு பின்னர் ஓடிடி தளங்களுக்கு கிடைத்த வரவேற்பால், திரையரங்குகளின் நிலைமை மோசமானது. கொரோனாவுக்கு முன்னரும் கூட டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம் போன்றவைகளால், தியேட்டர்களுக்கு மக்கள் செல்வது குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில், தற்போது ஓடிடி தளங்கள் அதிகரித்துவிட்டதால், திரையரங்குகளின் நிலை இன்னும் மோசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    திரையரங்க உரிமையாளர்களின் பொதுக்குழு கூட்டம்

    திரையரங்க உரிமையாளர்களின் பொதுக்குழு கூட்டம்

    இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில், திரையரங்குகளின் லைசென்ஸை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும். ஏசி இல்லாத தியேட்டர்களின் பராமரிப்புக் கட்டணம் 2 ரூபாயில் இருந்து 5 ரூபாயாகவும், ஏசி வசதி கொண்ட தியேட்டர்களுக்கு 4 ரூபாயில் இருந்து பத்து ரூபாயாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி

    திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி

    பொதுக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து சங்கத் தலைவர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "சினிமா தியேட்டர்களில் டிப்ளமோ படித்தவர்களை ஆபரேட்டர்களாக பணியமர்த்த அரசு அனுமதிக்க வேண்டும். பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 6 மாதங்களுக்குப் பின்னர் தான் ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளதாகக்" குறிப்பிட்டார்.

    முன்னணி நடிகர்கள் ஒப்பந்தம் போட வேண்டும்

    முன்னணி நடிகர்கள் ஒப்பந்தம் போட வேண்டும்

    அதேபோல் தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள், தியேட்டர்களில் வெளியான 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும் எனவும், இதற்காக அவர்கள் படத்துக்காக அக்ரிமெண்ட் போடும் போதே ஓடிடி.ரிலீஸ் குறித்து வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    டிக்கெட் கட்டணம் உயர்வு?

    டிக்கெட் கட்டணம் உயர்வு?

    தொடர்ந்து பேசிய அவர், பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் டிக்கெட் விலை 500 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுவதாகக் கூறினார். மேலும், தமிழகத்தில் தான் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளதாகவும், எனவே டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். இதனால், தமிழகத்தில் தியேட்டர் டிக்கெட் கட்டணம் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம்

    விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம்

    பெரும்பாலும் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் அனைத்தும், ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகின்றன. இதனால், ரசிகர்கள் திரையரங்குகளுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். மேலும் சில படங்கள் நேரடியாகவே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. இதனை குறிப்பிடும் விதமாக பேசிய சுப்பிரமணியம், "கமலின் 'விக்ரம்' படம் ஓடிடியில் ரிலீஸ் செய்திருந்தால், இப்படி ஒரு வெற்றியை பெற்றிருக்காது எனவும் அவர் கூறினார்.

    English summary
    Theatre owners thanked Bollywood actor Aamir Khan and also they demanded that the films of leading actors should be released in OTT after 8 weeks and ticket rate hikes
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X