Don't Miss!
- News
அதிகாலையில் நடந்த துயரம்..போர் விமானங்கள் விபத்து எப்படி நடந்தது? நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்... ஹாலிவுட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆக்சன் ட்ரீட்
சென்னை:
திரையரங்குகளைத்
தொடர்ந்து
இந்த
வாரம்
ஓடிடியில்
வெளியாகும்
படங்கள்
மீதான
எதிர்பார்ப்பு
ரசிகர்களிடம்
அதிகரித்துள்ளது.
திரைப்படங்கள்
தவிர
நேரடியாக
ஓடிடியில்
வெளியாகும்
வெப்
சீரிஸ்கள்
குறித்த
தேடல்களும்
ரசிகர்களிடத்தில்
அதிகரித்துள்ளன.
இந்த
வாரம்
எந்தெந்த
ஓடிடி
தளங்களில்
என்னென்ன
படங்கள்
வெளியாகின்றன,
வெப்
சீரிஸ்கள்
ரிலீஸ்
போன்ற
தகவல்களை
இப்போது
பார்க்கலாம்.
இந்த
வாரம்
ஓடிடியில்...
உதயநிதியின்
கலகத்
தலைவன்
முதல்
ஹாலிவுட்டின்
அந்தப்
படம்
வரை

தமிழில் சசிகுமாரின் காரி
இந்த வாரம் தமிழில் சசிகுமாரின் காரி திரைப்படம் மட்டுமே வெளியாகிறது. நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் பெரியளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவான காரி படத்தில், சசிகுமாருடன் பார்வதி அருண், ஜேடி சக்ரவர்த்தி, சம்யுக்தா, ராம்குமார், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹேமந்த் இயக்கியுள்ள இந்தப் படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

மலையாளத்தில் இரண்டு திரைப்படங்கள்
மலையாளத்தில் அமலா பால் நடித்த 'தி டீச்சர்' திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. விவேக் இயக்கத்தில் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தி டீச்சர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 23ம் தேதி வெளியாகவுள்ளது. அதேபோல், அக்டோபர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஜெய ஜெய ஜெய ஹே' படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. பாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை விபின் தாஸ் இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுக்குமே ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

டோலிவுட், பாலிவுட் ரசிகர்களுக்கான அப்டேட்
அதேபோல், தெலுங்கில் மசூதா, இது மரேடுமில்லி பிரஜனீகம் ஆகிய படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன. சாய் கிரன் இயக்கத்தில் நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியான மசூதா, ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், ஆஹாவில் வெளியாகிறது. மேலும், 'இது மரேடுமில்லி பிரஜனீகம்' என்ற தெலுங்கு படமும் இந்த வாரம் ஜி 5 ஓடிடியில் வெளியாகிறது. ஏ.ஆர் மோகன் இயக்கிய இந்தத் திரைப்படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியில் தாரா வெஸ் பிலால் திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

ஹாலிவுட் ரசிகர்களுக்கு அதிரடி ட்ரீட்
இந்த வாரம் ஓடிடி ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான திரைப்படம் என்றால் அது டாப் கன் மேவ்ரிக் தான். திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது டாப் கன் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளதால், ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் நாயகன் ரிட்டர்ன்
அதேபோல், ஜேம்ஸ்பாண்ட் 007 புகழ் டேனியல் கிரேக் நடித்துள்ள Glass Onion: A Knives Out Mystery திரைப்படமும் இந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. டிடெக்டிவ் திரில்லர் படமான இது ரசிகர்களுக்கான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என்பது நிச்சயம். அதேபோல் வெப் சீரிஸில் Jack Ryan season 3 இந்த வாரம் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகிறது. ஜான் கிராசின்ஸ்கியின் ரசிகர்கள் இந்த சீசனுக்காக தவம் கிடக்கின்றனர். இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கவிருப்பது ஹாலிவுட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.