Maareesan OTT - களைகட்டப்போகும் ஓடிடி தளம்.. வடிவேலுவின் மாரீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: வடிவேலுவும், ஃபகத் பாசிலும் இணைந்து நடித்த மாரீசன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றது.ஏற்கனவே அவர்கள் இணைந்து நடித்திருந்த மாமன்னன் படமும் ஹிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இப்போது அறிவித்திருக்கிறது.

வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ஏகப்பட்ட படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவருக்கு சில பிரச்னைகள் வந்தன. இதன் காரணமாக அவர் ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். அப்படி அவர் ஒதுக்கப்பட்டாலும் எந்த காமெடி சேனலானாலும், மீம் ஆனாலும் அதில் வடிவேலுதான் இருந்தார்.

ரீ என்ட்ரி: இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துகள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் மாமன்னன் திரைப்படம் மட்டும்தான் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் வடிவேலுவின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது.

Vadivelu s Maareesan will first stream on the Netflix OTT Platform on August 22nd
Photo Credit:

மாரீசன்: அந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான ஃபகத் பாசிலும் நடித்திருந்தார். இருப்பினும் அவரைவிடவும் வடிவேலுதான் அதிகம் ஸ்கோர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கு பிறகு மாரீசன் படத்தில் மீண்டும் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்தார். அந்தப் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தை தயாரித்திருந்தது.

இதிலும் வடிவேலு கலக்கல்தான்: இந்தப் படத்திலும் வடிவேலு மிகச்சிறப்பாகவே நடித்திருந்தார். அதேபோல் கதையையும் இயக்குநர் மிக நேர்த்தியாக கொண்டு சென்றிருந்தார். முக்கியமாக இந்தப் படத்தின் கதை; மறதி வியாதி கொண்ட ஒருவரிடமிருந்து திருடன் பணத்தை திருடுவதுதான் என்று பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் படத்தின் இரண்டாவது பாதியில் ட்விஸ்ட் வைத்து குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை இயக்குநர் பேசியிருந்தது அனைவரையுமே கவர்ந்தது.

ஓடிடியில் ரிலீஸ்: இந்நிலையில் மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் எப்படி படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்ததோ அதேபோன்ற ரெஸ்பான்ஸ் ஓடிடியிலும் கிடைக்கும் என்று ரசிகர்களும், படக்குழுவினரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X