Vash Level 2 Review: மாணவிகளை வசியம் பண்ணி மந்திரவாதி படுத்தும் பாடு.. குலை நடுங்க வைக்கும் குஜராத்தி படம்!

சென்னை: அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்த சைத்தான் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தை பார்த்தால் அதன் தொடர்ச்சி என்பது தெளிவாக புரியும். மேலும், சைத்தான் திரைப்படமே 2023ம் ஆண்டு குஜராத் மொழியில் வெளியான வஷ் திரைப்படத்தின் தழுவல் தான் என்பது புரிய வரும்.

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மாநில படங்களுமே இந்தியளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனால், வட இந்தியாவை எடுத்துக் கொண்டால் பாலிவுட் என்றும் இந்தி படங்கள் என்று மட்டுமே ரசிகர்களுக்குத் தெரியும்.

Vash Level 2 Review in Tamil A spine chilling Netflix Watch for this week is here
Photo Credit:

ஆனால், இந்தி படங்களை விட குஜராத்தி மொழிப் படங்கள், போஜ்புரி படங்கள், வங்க மொழிப் படங்கள் என வட இந்தியாவில் பல தரமான மொழிப் படங்கள் அவ்வப்போது வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகின்றன. அந்த வரிசையில், இந்த வஷ் லெவல் 2 திரைப்படமும் இடம்பிடித்துள்ளது. வஷ் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி உள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

வஷ் லெவல் 2 கதை என்ன?: குஜராத்தி மொழியில் கிரிஷ்ணதேவ் யாக்னிக் இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான வஷ் படத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் உருவாகியுள்ளது. பெண்கள் படிக்கும் பிரபல தனியார் பள்ளியில், உணவு அருந்தும் வேலையில், கேட்டீனில் அமர்ந்திருக்கும் மாணவிகள் திடீரென வெறி பிடித்தது போல மாறி மாடியில் இருந்து தற்கொலை செய்துக் கொள்ள முயல்கின்றனர். ஒரு மாணவி விழுந்த நிலையில், பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் அந்த மாணவிகளை தடுக்க முயற்சிக்கின்றனர். அருகே வந்தால், விழுந்துவிடுவோம் என்றும் எங்களை எல்லாம் ஒருவர் கட்டுப்படுத்தி வைத்துள்ளார் என்றும் கூறும் மாணவிகள் அழுதுகொண்டே அவர்களை செக்யூரிட்டி காப்பாற்ற வரும் போது விழுந்து உயிரிழக்கின்றனர்.

Vash Level 2 Review in Tamil A spine chilling Netflix Watch for this week is here
Photo Credit:

மீதமுள்ள சில மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் நாங்களும் விழுந்துவிடுவோம் என சொல்லிவிட்டு அவர்களும் விழுந்து சாகின்றனர். இந்த விவகாரம் பெரிய பேசுபொருளாக மாறுகிறது. காவல்துறை அதிகாரி ஒருவர் பள்ளிக்கு வந்து மாணவிகளை கட்டுப்படுத்த நினைக்கிறார். பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே மாணவிகளை காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

வஷ் படத்தில் வரும் மந்திரவாதி பிரதாப்பை தேடி அவரது தம்பி ராஜ்நாத் (ட்விஸ்ட் என்னவென்றால் குஜராத்தி நடிகர் ஹித்தேன் குமார் தான் பிரதாப்பாக முந்தைய படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் தம்பியாகவும் நடித்துள்ளார்) அழைந்து திரிந்து வரும் நிலையில், அண்ணனை கண்டுபிடிக்க இந்த பள்ளி மாணவிகளை இப்படி நடத்துகிறார்.

பிரதாப்பை நாக்கை அறுத்து வீட்டு சிறையில் அடைத்து வைத்த ஹீரோ அதர்வா தனது மனைவி மற்றும் மகனை இழந்து தவித்து வருகிறார். 12 ஆண்டுகளாக பிரதாப்பின் வசியத்தால் அவனது பிடியிலேயே தவித்து வரும் மகள் ஆர்யாவை மீட்க துடிக்கும் அதர்வா இந்த பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து, அங்கே சென்று வில்லனை சந்திக்க, கடைசியில் என்ன ஆனது என்பது தான் இந்த வஷ் லெவல் 2 படத்தின் கதை.

Vash Level 2 Review in Tamil A spine chilling Netflix Watch for this week is here
Photo Credit:

வேறலெவல் மிரட்டல்: பள்ளியில் மாணவிகள் மூச்சை நிறுத்தி உயிரிழப்பது, பெற்றோர்களையே சுட்டுக் கொல்வது, பேய் பிடித்தது போல போலீஸாரை அட்டாக் செய்வது என காட்சிகள் வேறலெவலில் மிரட்டலாக எடுத்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணதேவ் யக்னிக். பள்ளி முதல்வராக நடிகை மோனல் கஜ்ஜார் அட்டகாசமாக நடித்துள்ளார்.

இத்தனை மாணவிகளை ஜாம்பிக்களை போல மாற்றி இயக்குநர் முதல் பாதி முழுவதும் குலை நடுங்க வைத்து விடுகிறார். எப்படி ஹீரோ அதர்வா இந்த 2வது வில்லனை சமாளிக்கப் போகிறார் என்றும் எதற்காக ராஜ்நாத் அவரது அண்ணன் பிரதாப்பை தேடுகிறார் என்கிற திரைக்கதை சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்து ரசிகர்களை சீட் நுனியில் கடைசி வரை இயக்குநர் கட்டிப்போட்டு வைத்துவிடுகிறார்.

பார்க்கலாமா? வேண்டாமா?: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் குஜராத்தி மொழியில் தான் இந்த படம் இருந்தாலும் ஆங்கில சப்டைட்டில் உள்ளது. நல்ல சினிமாவுக்கு மொழியே தேவையில்லை என்பது போல காட்சிகளே பிரம்மிப்பை கூட்டுகிறது. சைத்தான் 2 படத்தில் மீண்டும் அஜய் தேவ்கன், மாதவனின் ஆட்டத்தை பார்ப்பதற்கு முன்பாக வஷ் லெவல் 2 படத்தையே ரசிகர்கள் ஓடிடியில் பார்த்துவிடலாம். கிளைமேக்ஸ் சற்றே சிம்பிளாக முடிந்தது போன்ற உணர்வை கொடுத்தாலும், இது ஒரு நல்ல ஓடிடி வாட்ச் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X