Bigg Boss 9 - எனக்கு ஒரு மரியாதை இல்லையா டா.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகனால் வருத்தப்பட்ட விஜய் சேதுபதி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த சீசனிலிருந்து விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரது ஸ்டைல் ஆஃப் ஆங்கரிங் ஒருதரப்பினருக்கு பெரிய திருப்தியை தரவில்லை. ஆனால் போகப்போக சரி செய்துகொண்டார். இதனால் கமலைவிடவும் இவர் சிம்ப்பிளாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்ற ரெஸ்பான்ஸும் கிடைத்தது. தற்போது ஒன்பதாவது சீசனையும் அதே ஸ்டைலில் தொடங்கியிருக்கிறார்.
விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஏஸ் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ட்ரெய்ன் படம் வரவிருக்கிறது. இப்படி சினிமாவில் முழு கவனத்தை செலுத்திவந்த அவர் கடந்த வருடத்திலிருந்து சின்னத்திரையில் நடக்கும் நிகழ்ச்சியிலும் தனது பங்களிப்பை செய்ய ஆரம்பித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
பிக்பாஸில் சேது: அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத்தான் அவர் தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசனிலிருந்து இந்த பயணத்தை ஆரம்பித்த அவர் இந்த வருடமும் தொடர்கிறார். அவர் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் 9: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், அகோரி கலை என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெரிய பிரபல்யம் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு மாதிரியான விஜய் சேதுபதி: நிகழ்ச்சியானது நேற்று முதல் தொடங்கியது. இந்த சீசனில் ரூல்ஸ்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதியே வேறு மாதிரிதான் வந்திருப்பதாக தெரிகிறது. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரிடம் பக்குவமாகவும் அதேசமயம் ஸ்ட்ரிக்ட்டாகவும் சில விஷயங்கள் கூறியது, உங்களை கட்டிப்பிடித்துக்கொள்ளலாமா என்று துஷார் கேட்டபோது ஒரே வார்த்தையில் நோ என சொன்னது என்று புதிய பரிணாமத்தில் காட்சியளிக்கிறார் அவர். இந்நிலையில் நேற்று அவர் பேசிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ: அதாவது துஷார் வந்தபோது மேடையில் பேசிய சேது, 'என் மகனிடம் கேட்டால் நான் ஒரு எஸ்டிஆர் ரசிகன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். உடனே நான் ஏன் டா டேய் வீட்ல ஒரு ஆக்டர் நான் இருக்கேன். எனக்குனு ஒரு மரியாதை இல்லையா என்றுதான் கேட்பேன்" என்றார். இந்த வீடியோதான் இப்போது அதிகம் ஷேர் ஆகிவருகிறது. முன்னதாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபடி ஃபீனிக்ஸ் திரைப்படத்தில் நடித்து ஹீரோவாகியிருப்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











