ஓடிடி ஹீரோ.. 15 வயதில் எம்மி விருது வென்ற ‘Adolescence’ பட ஹீரோ ஓவன்.. பாராட்டிய பிரியங்கா சோப்ரா!

மும்பை: 'அடோலசென்ஸ்' என்ற நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸில் சிறப்பாக நடித்ததற்காக, இளம் நடிகர் ஓவன் கூப்பர் எம்மி விருதை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த மதிப்புமிக்க விருதை வென்ற மிக இளவயது நடிகர் இவர்தான். இதனால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஓவன் கூப்பரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

சஞ்சய் லீலா பன்சாலியின் 'ஹீராமண்டி' தொடரில் நடித்த அதிதி ராவ் ஹைதரி, ஓவன் கூப்பரின் இந்த சாதனையைப் பாராட்டி, என்டர்டெயின்மென்ட் டுநைட் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவை மறுபகிர்வு செய்தார். அதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகச் ரெட் ஹார்ட் எமோஜிக்களைச் சேர்த்திருந்தார்.

நடிகை நேகா தூபியா, ஓவன் கூப்பரை "மிக இளவயது ஜாம்பவான்" என்று புகழ்ந்தார். யுஎஸ் வீக்லி வெளியிட்ட பதிவைப் பகிர்ந்த அவர், "Youngest Legend" என்று பதிவிட்டு, கைகளை உயர்த்திப் பாராட்டும் விதமான எமோஜியையும் குறிப்பிட்டிருந்தார்.

நடிகை பிரியங்கா சோப்ரா 15 வயது ஓவன் கூப்பரின் எம்மி வெற்றிக்காக தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இன்ஸ்டாகிராமில் ஓவன் கூப்பர் எம்மி விருதைப் பெறும் வீடியோவைப் பகிர்ந்த அவர், தனது அளவற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் வெளிப்படுத்தும் எமோஜிக்களுடன் பதிவிட்டிருந்தார்.

நெட்பிளிக்ஸ் தொடரான 'அடோலசென்ஸ்' மூலம் பிரபலமான இந்த இளம் நடிகர், ஒரு லிமிடெட் அல்லது ஆந்தாலஜி தொடரில் சிறந்த துணை நடிகருக்கான எமி விருதைப் பெற்றார். விருது மேடையில் அவர் பேசியபோது, குழுவினர், தனது பெற்றோர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

"உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நாடக வகுப்புகளில் சேர்ந்தபோது, அமெரிக்காவில் இப்படி ஒரு மேடையில் நிற்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் இன்று ஒரு விஷயம் நிரூபணமாகி உள்ளது. நீங்கள் உன்னிப்பாகக் கேட்டு, கவனம் செலுத்தி, உங்கள் கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியே வந்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒன்றுமில்லை, இப்போது இங்கே இருக்கிறேன். அவமானப்பட்டால் என்ன? எது வேண்டுமானாலும் சாத்தியம்" என்று ஓவன் கூப்பர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றியின் மூலம், மைக்கேல் ஏ. கூர்ஜியனின் சாதனையை ஓவன் கூப்பர் முறியடித்துள்ளார். கூர்ஜியன் 1994 ஆம் ஆண்டில் 23 வயதில் இந்த விருதை வென்ற மிக இளவயது வீரராக இருந்தார். டெட்லைன் (Deadline) தகவலின்படி, எந்தவொரு நடிப்புப் பிரிவிலும் எம்மி விருதை வென்ற மிக இளவயது ஆண் நடிகர் என்ற ஸ்காட் ஜேக்கபியின் சாதனையையும் ஓவன் கூப்பர் முறியடித்துள்ளார். ஜேக்கபி 1973 இல் 'தி சர்ட்டைன் சம்மர்' படத்திற்காக வென்றபோது அவருக்கு வயது 16. வெறும் 15 வயதில் இப்படியொரு சாதனையை படைத்த ஓவன் கூப்பரை உலகளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகை பிரியங்கா சோப்ரா ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், அவர் மனதார பாராட்டியது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்து அடுத்து பல விருதுகளும் ஓவன் கூப்பருக்கு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மீண்டும் அடலொசன்ஸ் வெப் தொடரை உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் எம்மி விருதுக்குப் பிறகு பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X