For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பல காயங்களுக்கு பின் வரும் துணிச்சலே 'ச்சப்பக்'

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள் : தீபிகா படுகோனே, விக்ராந்த் மாசே, விஷால், மாதுர்ஜீத்

  இசை : இஷான் மற்றும் லாய்

  இயக்கம் : மேக்னா குலசர்

  மும்பை : தீபிகா படுகோனே துணிச்சலாக ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து இருக்கும் படம் தான் ச்சப்பக் .இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி ஆசிட் வீச்சின் கொடூரம் பற்றி எடுத்துரைக்கும் பல படங்கள் வந்து இருக்கின்றன .கடைசியாக பிகில் படத்தில் கூட இந்த பிரச்சினையை அனிதா என்கிற கதாபாத்திரம் மூலம் பேசியிருப்பார் இயக்குனர் அட்லி . அது மட்டும் அல்லாமல் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வந்த படம் தான் "வழக்கு என் 18/9 " இந்த படத்திலும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையை அவ்வளவு எதார்த்தமாக , உண்மையாக, பல விதமான உணர்வுகளுடன் பதிவு செய்து இருப்பார்.

  ச்சப்பக் படத்தை இயக்கி இருக்கிறார் பெண் இயக்குனரான மேக்னா குல்சார் .படத்தில் தீபிகா படுகோனே ,விக்ராந்த் மாசே ,மாதூர்ஜித் சார்கி ,வைபவி உபத்யாயா மற்றும் பாயல் கபூர் நடித்து உள்ளனர் .

  Acid attack with pain and misery is chhapaak

  இந்த படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணான 'லஷ்மி அகர்வாலின்' உண்மை வாழ்கையை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும் .இந்த படத்திற்காக பிரத்யேகமாக ஆசிட் வீச்சால் பாதிக்க பட்டதை போலவே மேக்கப் போட்டு நடித்து இருக்கிறார் தீபிகா படுகோனே .

  ஆசிட் வீச்சால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள் அது தலைப்பு செய்தியாக மாறுகிறது .அங்கிருந்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறாள் . அவள் ஆசிட் வீச்சுக்கு பின் மற்ற பெண்களை போல வீட்டில் பதுங்கி இருக்காமல் எழுந்து போராட துவங்குகிறாள் .மருத்துவமனை கோர்ட் என மாறி மாறி அழைகிறார்கள் .நீதிக்காக போராடுகிறாள் , அதன் இடையே அவளுக்கு பல அறுவைசிகிச்சைகள் நடைபெறுகிறது .அவள் முகம் ஓரளவுக்கு சரியாகிறது ஆனால் அது அவளின் பழைய முகம் இல்லை. தற்போது முன்பை விட தீவிரமாய் முயற்சி செய்கிறாள்.பலருக்கு இதை பற்றி தெரியவருகிறது அந்த வழக்கை அவள் வென்றாளா இறுதியில் என்ன என்பதே ச்சப்பக் படத்தின் கதை .

  Acid attack with pain and misery is chhapaak

  இந்த படத்தின் ஓட்டம் எங்கும் சோர்வடையவில்லை ,பல இடங்களில் ஆச்சரிய படும் நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார் தீபிகா படுகோனே .விக்ராந்த் மாசே ஒரு என்.ஜி.ஓ உதவியாளராக நடித்து இருக்கிறார் .படத்தின் இயக்குனரே பெண் என்பதால் படத்தில் உணர்வு பூர்வமான காட்சிகள் சிறந்த முறையில் படமாக்கபட்டு இருக்கிறது .

  மேலும் இந்த படத்தின் கதையோட்டத்தில் வரும் பாடல்கள் உணர்ச்சிபூர்வமாகவும் , மனோ ரீதியாக பாதிக்க பட்ட சமூகத்தின் குற்றங்களை கலந்து மிக அழகான முறையில் படமாக்க பட்டு இருக்கிறார் இயக்குனர் மேக்னா.ச்சப்பக் படத்தின் திரைக்கதை மற்றும் அதை சுவாரஸ்யமான முறையில் படாமக்கிய விதம் அனைத்தும் சிறப்பு .மொத்தத்தில் படம் கட்டாயம் பார்க்க கூடிய படம் .

  படத்தின் கதை நமக்கு சொல்வது பல பிரச்சனைகள் ஒருவரை சூழும் போது அங்கு கிடைக்கும் கோபமும் துணிச்சலும் கட்டாயம் நீதியை பெற்று தரும் என்பதே ஆகும் .படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அந்த பெண் துணிச்சலுடன் எடுக்கும் பாதையே அவரின் வெற்றி ஆகும் அவளது விலங்கை அவளுடைய துணிச்சலே உடைக்கிறது என்பதும் ஆகும்.

  Acid attack with pain and misery is chhapaak

  இப்படி ஒரு படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தைரியத்துடன் நடித்த தீபிகாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றன. இப்படி பட்ட ஒரு கதையை முழு திரைக்கதையுடன் அழகாக எடுத்த இயக்குனர் மேக்னாவிற்கும் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்பு ராஷி என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  படத்தில் தீபிகா படும் அவலம் நீதிமன்றதிற்கு சென்று தண்டனை வாங்கி தருவது வேலைக்கு செல்வது முதலில் இப்படி பட்ட முகத்துடன் தைரியமாக வெளியே சென்று இந்த உலகத்தை ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணும் ஒரு கம்பீரமான பெண் ஆக வரும் தீபிகா நம்மிடையே படம் முடியும் வரை உடன் நிற்கிறார்.

  படத்திற்கு முக்கிய பங்கு இசை, அதனை ஷங்கர் மகாதேவன் உடன் எப்பொழுதும் பணியாற்றும் இசான் மற்றும் லாய் உடன் இணைந்து அற்புதமாக நிகழ்த்தியுள்ளார். படத்தில் மற்றுமொரு முக்கிய பங்கு ஒளிப்பதிவாளருக்கு உண்டு அதனை மிகச் சிறப்பாக கையாண்டு உள்ளார் மாலய் பிரகாஷ்.

  பள்ளி சீருடையில் தீபிகா மிகவும் அழகாகவும் , பொலிவாகவும் இருக்கிறார். அப்படி பட்ட அழகு மிக கொடூரமான ஒருவனது செயலால் பாதிக்கப்படும் பொழுது நம் அனைவரது மனதிலும் ஒரு பரிதவிப்பும் படபடப்பும் ஏற்படுகிறது . இந்த படம் சொல்ல வந்த மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் அமிலம் விற்கப்படுவதிலும் , வாங்கப்படுவதிலும் அரசாங்கம் நிறைய சட்டங்கள் கொண்டுவர வேண்டும். அது மட்டும் இன்றி தண்டனைகளும் மிக கடுமையாக இருக்க வேண்டும் என்பது தான்.

  Acid attack with pain and misery is chhapaak

  அமில வீச்சு என்பது 99.9% பெண்கள் மட்டும் தான் அதிகம் பாதிக்க படுகின்றன. சில பெண்கள் காதலனால் , சிலர் ஜாதி , இனம் என்ற பிரச்சனையினால் , இன்னும் சிலர் கடும் கோவத்தில் பழி வாங்கும் நோக்கத்தில் இப்படி பட்ட செயலில் இறங்குகின்றன.

  அமிலம் என்ற எண்ணம் முதலில் மனிதனின் மூலையில் தோன்றி , பின் அவன் கைக்கு வந்து அதற்கு பிறகு அவன் செய்யும் செயல் என்று ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது - மனோரீதியாக பாதிக்க பட்ட சமூகம் தான் இப்படிப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்களை உருவாக்குகிறது.

  தீபிகா படுகோனின் அசாத்திய நடிப்பில்.. சாபாக்.. ஒரு உண்மை சம்பவம்

  இந்த படம் பல பெற்றோர்களுக்கும் , பாதிக்க படாமல் இருக்க அரசாங்கத்துக்கும் ஒரு பாடமாகவும் இந்த திரைப்படம் பதிவு செய்கிறது.

  Acid attack with pain and misery is chhapaak

  ச்சப்பக் என்றால் ஆங்கிலத்தில் ஸ்பிளாஷ் என்று பொருள் . தெறிக்க விட்ட ஒரு திரவ பொருள் வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். மனித எண்ணங்களிலும் நல்லதே துளிர்க்க வேண்டும் தெறிக்க வேண்டும் என்பது அனைவரது ஆசையும்.

  English summary
  A brave story of a woman's grit and indomitable spirit is Chhapaak . life has lots of sudden shocks with mixed feelings and in this movie a nineteen-year-old girl takes a turn when she is subjected to a horrific acid attack. after that what she gives the society and what she gets from the society is chhapaak .
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X