twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Ram Setu Review: லாஜிக்கும் இல்லை.. மேஜிக்கும் இல்லை.. ஆளவிடுங்க அக்‌ஷய்.. ராமர் பாலம் விமர்சனம்!

    |

    Rating:
    2.5/5

    நடிகர்கள்: அக்‌ஷய் குமார், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நாசர்

    இசை: டேனியல் ஜார்ஜ்

    இயக்கம்: அபிஷேக் ஷர்மா

    சென்னை: அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான ராம் சேது திரைப்படம் தீபாவளி கழித்து அதுவும் கிரகண நாளில் ஏன் தான் வெளியிட்டார்கள் என்றே தெரியவில்லை.

    படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கிரகணம் பிடித்ததை போலவே இருந்தது ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றி விட்டது.

    எடுத்துக் கொண்ட கதைக்கு வேறலெவலில் பிரம்மிப்பூட்டும் திரைக்கதையையும் விஷுவலையும் அமைக்காமல் விட்ட நிலையில், படம் சொதப்பி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. வாங்க ராம் சேது எனும் ராமர் பாலம் படத்தின் விமர்சனத்தை விரிவாக பார்ப்போம்..

    ராம் சேது கதை

    ராம் சேது கதை

    இயக்குநர் அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார், நாசர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மற்றும் சத்யதேவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள படம் தான் ராம் சேது. ராமர் பாலம் இயற்கையாக அமைந்த ஒன்றா அல்லது ராமாயண காலத்தில் ராமர் வானரங்களின் உதவியோடு கட்டிய பாலமா? என்கிற வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புனைவு கதை தான் இந்த ராம் சேது.

    லாஜிக் எத்தனை கிலோ

    லாஜிக் எத்தனை கிலோ

    அக்‌ஷய் குமார் ஆண்டுக்கு 5 ஃபிளாப் படங்களை கொடுக்க வேண்டும் என்றே நடித்து வருகிறாரா? இல்லை அவர் நடிப்பதால் படங்கள் ஃபிளாப் ஆகின்றனவா என்பதே புரியாத புதிராகவே உள்ளது. ஆனாலும், அடுத்தடுத்த படங்களுக்கு எப்படிதான் தயாரிப்பாளர்கள் கிடைக்கின்றனர் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாகவே நீள்கிறது. ஆர்யான் (அந்த பெயரிலும் உள்குத்து இருக்கா) எனும் விஞ்ஞானியாக ராம் சேது பற்றிய உண்மையை கண்டறியும் பொறுப்பு அக்‌ஷய் குமாருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், லாஜிக் என்றால் எத்தனை கிலோ என்கிற ரீதியில் தான் இயக்குநர் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.

    மேஜிக்கும் இல்லை

    மேஜிக்கும் இல்லை

    இந்த புராண புனைவு கதைக்கு லாஜிக் பார்க்க வேண்டாம் என்று பார்த்தாலும் டிரெஷர் ஹண்ட் படம் போல மேஜிக்குகளை தரமாக வைத்து ரசிகர்களை வியக்க வைத்தாலே பாராட்டுக்கள் குவிந்திருக்கும். ஆனால், அந்த இடத்திலும் படக்குழு ரொம்பவே கோட்டை விட்டு விட்டது. அதிலும் அந்த ஹெலிகாப்டர் உடைந்து நொறுங்கி பிளாஸ்ட் ஆன பின்னர் எல்லாம் 6,7 பேர் எழுந்து வரும் காட்சிகள் எல்லாம் காமெடியின் உச்சம்.

    டம்மி வில்லன்

    டம்மி வில்லன்

    ராம் சேது பாலம் உருவாகமல் தடுப்பது ஒரு கப்பல் கம்பெனி முதலாளி என நாசரை வில்லனாக இந்த படத்தில் போட்டு இருக்கின்றனர். ஆரம்பத்தில் டெரராக வரும் நாசர் கதாபாத்திரம் அதன் பிறகு டம்மி வில்லனாக மாறுவது தான் ரசிகர்களை கதையோடு ஒட்டவே வைக்கவில்லை. இதையே ராஜமெளலி எடுத்திருந்தால், அக்‌ஷய் குமாரை ராமராகவும், நாசரை 10 தலை கொண்ட ராவணாகவே காட்டியிருப்பார் என தியேட்டரிலேயே ரசிகர்கள் கத்தும் அளவுக்கு படம் உள்ளது.

    பிளஸ்

    பிளஸ்

    ராம் சேது படத்தின் திரைக்கதை ரொம்பவே பலவீனமாக இருந்தாலும், அதனை முடிந்த வரை காப்பாற்ற நாயகன் அக்‌ஷய் குமார் போராடி உள்ளார். ஏபி எனும் கதாபாத்திரத்தில் வரும் சத்யதேவின் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை சற்றே கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்து படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைகிறது. ராவணனின் அரண்மனையை கண்டு பிடிக்கும் காட்சிகள் சிறப்பு.

    மைனஸ்

    மைனஸ்

    விஷுவல் எஃபெக்ட்ஸ் அதிகம் தேவைப்படும் ஒரு கதைக்கு பட்ஜெட்டே இல்லாமல் டிடி தொலைகாட்சியில் ஒளிபரப்பான சக்திமான் காலத்து சிஜி எல்லாம் செய்து ஒட்டுமொத்த படத்தையும் வீணடித்து விட்டனர். அதிலும் அயன்மேன் ஷூட் போன்ற ஒரு ஷூட்டை அக்‌ஷய் குமார் போட்டுக் கொண்டு கடலில் இறங்கும் காட்சி எல்லாம் நமக்கு சிவகாமி கம்ப்யூட்டர் பொம்மை தான் ஞாபகத்துக்கு வருகிறது. படத்தின் கிளைமேக்ஸும் ரசிகர்களை குழப்பும் வகையில் உள்ளதை தவிர்த்து இருக்கலாம்.

    English summary
    Ram Setu Movie Review in Tamil (ராமர் பாலம் விமர்சனம்): Akshay Kumar doing scientist role in this film and Nasser doing a Villain role. Ram Setu struggles in screenplay portion disturbed the audiences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X