For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Movie Review : சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 எப்படி இருக்கு ?

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள் :

  ஆர்யா ,
  ஆண்ட்ரியா
  ராஷிக்கண்ணா
  யோகி பாபு
  விவேக்
  மனோபாலா

  இசை : சி சத்யா

  இயக்கம் : சுந்தர் சி

  சென்னை : குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் .

  Recommended Video

  ARANMANAI 3 Review - Arya, Sundar C | Poster Pakiri review | Filmibeat Tamil

  அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3 திரைப்படம் உருவாக்கப்பட்டு ரிலீஸ் ஆகி உள்ளது. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா இசையமைத்து உள்ளார் .

  ஜோதிகா எக்ஸ்பிரஷன்லேயே கொன்னுட்டாங்க.. கருத்துதான் தாங்க முடியல.. உடன்பிறப்பே டிவிட்டர் விமர்சனம்! ஜோதிகா எக்ஸ்பிரஷன்லேயே கொன்னுட்டாங்க.. கருத்துதான் தாங்க முடியல.. உடன்பிறப்பே டிவிட்டர் விமர்சனம்!

  ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  வெகுஜன மக்களை

  வெகுஜன மக்களை

  பேய்கதைகளை காமெடி படங்களாக மாற்றி கோலிவுட்டில் பல நூறு படங்கள் வெளியாகி விட்டன. ஆனால் அதில் ஏதோ ஒன்றிரண்டு தான் வெகுஜன மக்களை ஈர்க்கிறது. வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்‌ஷன் ஆகியப் படங்களின் தோல்விக்குப் பிறகு வெளியாகியிருக்கும் சுந்தர் சியின் அரண்மனை 3, சுந்தர் சி-யை காப்பாற்றியதா ? என்பதை பார்ப்போம் .

   உடல் வாகை பார்க்கும் பொழுது

  உடல் வாகை பார்க்கும் பொழுது

  அரண்மனை 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சார்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார் ஆர்யா என்பது அந்த உடல் வாகை பார்க்கும் பொழுதே தெரிகிறது. ஆர்யாவின் மொத்த காட்சிகளை இந்த படத்தில் விறல் விட்டு எண்ணி விடலாம் . மிக மிக சொற்பான காட்சிகள் மட்டுமே வந்து தனது ரசிகர்களை ஏமாற்றி விட்டார் .

  25வது படம்

  25வது படம்

  இசையமைப்பாளராக இசை அமைத்து 25வது படம் என்ற இலக்கை தொட்டு விட்டார் சி சத்யா . பின்னணி இசை அமைப்பதில் அதிக நாட்கள் தேவைப்பட்டது. லாக்டவுன் நாட்களை பயன்படுத்தி அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளார் சத்யா.அரண்மனை படம் மற்ற பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகத்தில் எமோஷனல் சீன்கள் அதிகமாக இருக்கின்றன.அதற்க்கு ஏற்ற வாறு பி ஜி எம் கொடுத்து உள்ளார் சத்யா குஜராத்தில் கிட்டத்தட்ட 40 நாட்கள் மேலாக தங்கியிருந்து படப்பிடிப்பு முடித்து உள்ளார்கள் . பல நடிகர்கள் விவேக் என்ற - ஒரு மறக்கமுடியாத கலைஞனுடன் நடித்த அந்த நாட்கள் என்றென்றும் நினைவில் நிற்பவை என்று பல மேடைகளில் சொல்லி புலம்பி உள்ளார்கள் . விவேக் கடைசியாக நடித்து கொடுத்த படங்களில் அரணமனை 3யும் ஒன்று .

  பேயுடன் தான் வாழ்வேன்

  பேயுடன் தான் வாழ்வேன்

  அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா ராஷி கண்ணா ,சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.கதாநாயகிகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கதாநாயகன் ஆர்யாவுக்கு இல்லை என்பதுதான் இந்தபடத்தில் வருத்தம். யோகி பாபு விவேக் மனோபாலா என்ற மூன்று பேரும் சேர்ந்து அடிக்கும் காமெடி பன்ச்சுகள் எங்கும் எடுபடவில்லை. ஒரு பெரிய அரண்மனை அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் பேய் , பேயுடன் தான் வாழ்வேன் என்று அடம்பிடிக்கும் ஒரு குடும்பம். பேய்யை பிடித்தார்களா பேய் இவர்களை பிடித்ததா என்கின்ற மிக பழமையான பார்த்து பார்த்து சலித்து போன இந்த கான்செப்ட்டை மீண்டும் திரையில் பார்ப்பது மிகவும் அலுப்பு தட்டுகிறது.

  ஹாரர் கிளாமர் காமெடி

  ஹாரர் கிளாமர் காமெடி

  பேய் பிடிப்பது, சாமி வர வைப்பது, சாமியார் பூஜை செய்வது, இறந்த உடலுக்கு உயிர் தருவது, யாகம் நடத்துவது, பூஜை என்ற பெயரில் வினோதமான காரியங்களை செய்து ஆடியன்சை முட்டாள் ஆக்குவது,போன்ற திரைக்கதைகள் எப்பொழுது நிறுத்தப்படும் என்று தெரியவில்லை. இருப்பினும் அரண்மனை 1 அரண்மனை 2 போன்ற சுந்தர் சியின் முந்தைய படைப்புகள் ஹாரர் கிளாமர் காமெடி என்கின்ற ஒரு பயங்கர புது கான்செப்ட்டை வைத்து வெற்றி பெற்றார். ஏதோ ஒரு நம்பிக்கையில் அரண்மனை3 படமும் வெற்றிபெறும் என்று நினைத்தாரோ என்னவோ அதே காட்சிகளை கொஞ்சம் நடிகர்களை மட்டும் மாற்றி படம் எடுத்துள்ளார் . ஆனால் ஹாரர் எடுபடவில்லை கிளாமர் கைகொடுக்கவில்லை காமெடி ஒட்டவில்லை.

  பேய்களே வந்து பார்த்தால்

  பேய்களே வந்து பார்த்தால்

  படத்தின் என்ட் டைட்டில் ஓடும் பொழுது ராஷி கண்ணா மற்றும் ஆர்யா நடனமாடும் ஒரு கவர்ச்சிகரமான பேய் பாடல் மட்டும் தான் இந்த படத்துக்கு ஆறுதல் பரிசு . மற்றபடி புதுமை என்று எதுவும் சொல்வதற்கு இல்லை. இப்படிப்பட்ட பேய் படங்களை பேய்களே வந்து பார்த்தால் கூட என்னை விட்ருங்க பா என்று கதறும் அளவுக்குத்தான் திரைக்கதை அமைந்திருக்கிறது. சுந்தர் சி பல புதிய முயற்சிகள் எடுத்து அடுத்த படைப்புகளில் தன்னை நிரூபித்து ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார்.பொறுத்து இருந்து பார்ப்போம் .

  English summary
  aranmanai 3 directed by sundar c got released in theaters and as per the festival season many audience started watching this movie in their selected bucket list. arya has played the lead role and rashi kanna is the heroine. c sathya has done the music for this film and its 25th film for him as a musician.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X