தீராத பகையுடன் காத்திருக்கும் ஆன்மா… அரண்மனை 3 டிரைலர்… எப்படி இருக்கு ?

சென்னை : ஆர்யா நடித்து சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை3 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

அரண்மனை 3

அரண்மனை 3

அரண்மனை 1 மற்றும் அரண்மனை 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி அரண்மனை 3 திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதுவரை சாக்லேட் பாயாக நடித்து வந்த ஆர்யாவை இந்த படத்தில் முதன் முதலாக பேயாக நடிக்க வைத்துள்ளார் சுந்தர் சி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஆயுத பூஜைக்கு

ஆயுத பூஜைக்கு

இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தையொட்டி வெளியாகவுள்ளது. அரண்மனை 3 படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைக் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

திகிலை கிளப்பிய டிரைலர்

திகிலை கிளப்பிய டிரைலர்

இந்நிலையில் இத்திரைப்படத்தில் டிரைலர் வெளியாகி உள்ளது. அந்த டிரைலரில் அடர்ந்த காட்டில் பறவைகள் பயத்துடன் படபடத்து பறக்கின்றன. அந்த அடர்ந்த காட்டில் இரண்டு பெண்கள் பயத்துடன் நடந்து கொண்டே, இந்த காட்டில் ராணியின் ஆவியிருப்பதாக சொல்றாங்க என்று சொல்ல...அந்தரத்தில் தொங்கியபடி கால் தெரிய திகிலை கிளப்பியது டிரைலர்.

தீராத பகையுடன்

தீராத பகையுடன்

அண்மனையில் ஓர் ஆன்மா தீராத பகையுடன் சுற்றி வருகிறது. தனது பகையை தீர்ந்துக்கொள்ள அரண்மனையில் இருப்பவர்களை ஏதோ ஒருவகையில் பயமுறுத்தி பகையை தீர்க்க தக்கநேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

பேயாட்டம் ஆரம்பம்

பேயாட்டம் ஆரம்பம்

அந்த அரண்மனையில் இருப்பவர்கள் மந்திர தகடு, தாயத்து போட்டு பூட்டியை அறையை யாரோ ஒருவர் திறந்து விட அந்த ஆன்மாவின் பேயாட்டம் தொடங்குகிறது. சத்யாவின் மிரட்டலான பின்னணி இசையில் டிரைலர் மிரட்டுகிறது. இரண்டரை நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலரில் பல ட்விஸ்ட்டுகள் வந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகுறவைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X