»   »  தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் ரகசிய நிச்சயதார்த்தம்? ஹேமமாலினி ட்வீட்டால் பரபரத்த பாலிவுட்

தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் ரகசிய நிச்சயதார்த்தம்? ஹேமமாலினி ட்வீட்டால் பரபரத்த பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 'தீபிகா உன்னுடைய நிச்சயதார்த்தத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்ற ஹேமமாலினியின் ட்வீட்டால் பாலிவுட் உலகமே பரபரத்துப் போயிருக்கிறது.

இந்தி நடிகை தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் காதல் பாலிவுட்டில் ரொம்பவே பிரசித்தம். நீண்ட நாட்களாக காதலித்து வந்தாலும் இருவரும் தங்கள் திருமணம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

Deepika Padukone-Ranveer Singh Secret Engagement?

இந்நிலையில் நடிகை ஹேமமாலினி "தீபிகா உன் நிச்சயதார்த்தற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் எதிர்கால வாழ்க்கை சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இதனால் தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் இருவரும் ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று எண்ணிய, ரசிகர்கள் தொடர்ந்து இருவரையும் வாழ்த்தத் தொடங்கினர்.

மேலும் ஹேமமாலினியின் ட்வீட் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவ பலரும் இதுகுறித்து, ஹேமமாலினியிடம் விசாரிக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தன்னுடைய ட்விட்டர் பக்கம் வந்த ஹேமமாலினி "என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னைப் பின்தொடரும் தீபிகாவிற்கு வாழ்த்துக் கூறினேன்.

தீபிகா படுகோனேவிற்கு அல்ல" என்று விளக்கம் கூறி தீபிகா படுகோனே பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

English summary
Deepika Padukone-Ranveer Singh Secret Engagement? Now Hema Malini Fullstops for All Rumors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil