twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Dune Review: 10 ஆஸ்கர் நாமினேஷன்கள்.. விருதுகளை அள்ள காத்திருக்கும் டூன்.. எப்படி இருக்கு?

    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்: டிமோதி சாலமட், ஜெண்டாயா, ஜேசன் மோமோ, படிஸ்டா

    இசை: ஹான்ஸ் ஸிம்மர்

    இயக்கம்: டெனிஸ் வில்லென்யூ

    ரேட்டிங்: 3.5/5.

    லாஸ் ஏஞ்சல்ஸ்: வரும் திங்கட்கிழமை மார்ச் 28ம் தேதி காலை 5 மணி முதல் இந்திய ரசிகர்கள் ஆஸ்கர் விருது விழாவை கண்டு ரசிக்கலாம்.

    இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு 10 பிரிவுகளில் நாமினேட் ஆகி உள்ளது டூன் திரைப்படம்.

    மார்ச் 25ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த படம் வெளியானது. டூன் திரைப்படம் எப்படி இருக்கு? எந்த எந்த பிரிவுகளில் ஆஸ்கரை அள்ளும் என்கிற சின்ன அலசலை இங்கே பார்ப்போம்.

    சூடு பறக்கும் செட் வொர்க்.. சூர்யா படத்திற்காக தீவிரமாக வேலை செய்யும் பாலா.. எங்கே தெரியுமா?சூடு பறக்கும் செட் வொர்க்.. சூர்யா படத்திற்காக தீவிரமாக வேலை செய்யும் பாலா.. எங்கே தெரியுமா?

    ஸ்டார் வார்ஸ் படங்களுக்கே காட்ஃபாதர்

    ஸ்டார் வார்ஸ் படங்களுக்கே காட்ஃபாதர்

    ஸ்டார் வார்ஸ் படங்கள் உருவாக காரணமே இந்த டூன் படத்தின் கதை தான் என்கின்றனர். டூன் நாவலை மையமாக வைத்து தான் ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட அனைத்து வேற்று கிரக வாசிகள் படங்களும் ஹாலிவுட்டில் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அதன் ரியல் வெர்ஷனான டூன் படத்தின் முதல் பாகம் வெளியாகி ஆஸ்கர் போட்டியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது.

    டூன் கதை என்ன

    டூன் கதை என்ன

    ஒரு மெய்க்காவலர் நம்மை காக்க வருவார் என வேற்று கிரக பாலைவனத்து மக்கள் காத்துக் கிடக்க எம்பரரின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசான அட்ரைடிஸின் வாரிசான பால் அட்ரைடிஸ் தான் அந்த ரட்சகர் என்பதை முதல் பாகத்தில் பொறுமையாக ஒவ்வொரு பிரம்மாண்ட காட்சியாக கண்களுக்கு முன்னே விரிக்கின்றனர். டூன் எனும் வேற்று கிரகத்தில் 10 ஆயிரமாவது ஆண்டில் நடைபெறும் ஒரு பெரிய அரசியல் சதுரங்கம் தான் இந்த படத்தின் கதை.

    மணலில் கலந்திருக்கும் ஸ்பைஸ்

    மணலில் கலந்திருக்கும் ஸ்பைஸ்

    படத்தில் மசாலா சேர்க்க வேண்டும் என இப்படி கதையிலேயே ஸ்பைஸை சேர்த்து விட்டனர். மணல் முழுக்க கலந்திருக்கும் அந்த ஸ்பைஸை எடுத்து வியாபாரம் செய்தால் தான் எம்பரருக்கு கப்பம் கட்ட முடியும் என அரசர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஆனால், சூழ்ச்சி காரணமாக பலத்த பாதுகாப்புள்ள அந்த கோட்டை எதிரிகளின் படைகளால் தகர்க்கப்படுகிறது. அரசரையும் வில்லன் கடத்தி செல்ல அவனை கொல்ல அரசர் தற்கொலை படையாக மாறும் போது வில்லன் தப்பிக்க வசதியாக அவன் கால்கள் வெகு நீண்டமாக திமிங்கல வால் போல இருப்பதை முன்னரே காட்டி விடுகின்றனர்.

    ஜெண்டாயா

    ஜெண்டாயா

    மார்வெல் ஸ்பைடர்மேன் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஜெண்டாயாவை வைத்துத் தான் படம் முழுக்க புரமோஷன் செய்தனர். ஹீரோ பாலின் கனவில் அடிக்கடி வந்து அவரது மரணத்தை காட்டி பால் ஊற்றி போகும் ஜெண்டாயா கடைசியாக அப்பாவையும் நாட்டையும் இழந்து விட்டு மணலில் வாழும் மக்களின் கூட்டத்தில் அம்மாவுடன் பால் இணையும் போது அந்த பிரம்மாண்ட மண் புழுவின் பல்லால் ஆன கத்தி என கூறப்படும் வாளை ஜெண்டாயா கொடுத்து விட்டு ஹீரோவை வழி நடத்திச் செல்ல முதல் பாகம் நிறைவடைகிறது.

    பரபரப்பு இல்லாத பிரம்மாண்டம்

    பரபரப்பு இல்லாத பிரம்மாண்டம்

    ஹெலிகாப்டர் என்பதை தாப்டர் என அழைக்கின்றனர். தும்பி பூச்சி போல பல றெக்கைகளுடன் வெறும் பெயருக்காக அந்த தாப்டர் உருவாக்கப்பட வில்லை என்பதை உணர்த்த அந்த புழுதிப் புயலில் ஹீரோ அவர் அம்மாவுடன் தப்பித்துச் செல்லும் போது அனைத்து றெக்கைகளும் உடைந்து கடைசியில் எப்படி தப்பிக்கின்றனர் என்பதை காட்சிகளில் மிரட்டி இருப்பார்கள்.

    சிஜி கிடையாது

    சிஜி கிடையாது

    மேட்மேக்ஸ் படம் போலவே இந்த படத்தையும் அதிக அளவு சிஜி இல்லாமல் பிரம்மாண்ட செட்களை போட்டே தத்ரூபமாக படமாக்கி உள்ளனர். ஸ்டார் வார்ஸ், அவதார் என ஏகப்பட்ட வேற்றுகிரக வாசிகள் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு கதை பெரிதாக தெரியாது என்றாலும், படத்தின் பிரம்மாண்டம் நிச்சயம் மிரட்டும். ஆர்ஆர்ஆர் படமெல்லாம் இரண்டாம் பாதியில் சற்று தொய்வை தருகிறது என்றெல்லாம் சொல்பவர்களால் இது போன்ற படங்களை பார்க்கவோ புரிந்து கொள்ளவோ முடியாது.

    10ல் எத்தனை

    10ல் எத்தனை

    விஷுவல் எஃபெக்ட்ஸ், மிரட்டும் பிஜிஎம், சிறந்த திரைக்கதை, கிரெய்க் ஃபேசரின் ஒளிப்பதிவு, டென்னிஸ் வில்லென்யூவின் இயக்கம், சிறந்த எடிட்டிங் என குறைந்த பட்சம் 3 முதல் 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை இந்த படம் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வெஸ்ட் சைட் ஸ்டோரி உள்ளிட்ட பல சிறந்த படங்களும் போட்டியில் உள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை டூனின் ஆஸ்கர் வெற்றி எப்படி என்பது தெரிந்து விடும். அமேசான் பிரைமில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இருக்கும் இந்த படத்தை இந்த வீக்கெண்ட் கண்டிப்பாக பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

    English summary
    Dune Review in Tamil: 10 Oscars Nomination Dune is a mind blowing one and Mad Max fury fans definitely will enjoy this gem in Amazon Prime now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X