twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எலி - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    2.5/5
    Star Cast: வடிவேலு, சதா, ஆதித்ய மேனன்
    Director: யுவராஜ் தயாளன்

    எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: வடிவேலு, சதா, ஆதித்ய மேனன், பிரதீப் ராவத், மகாநதி சங்கர்

    ஒளிப்பதிவு: பால் லிவிங்ஸ்டன்

    இசை: வித்யாசாகர்

    தயாரிப்பு: சிட்டி சினி கிரியேஷன்ஸ்

    இயக்கம்: யுவராஜ் தயாளன்

    தனது மறுபிரவேசப் படமான தெனாலிராமனில் விட்டதைப் பிடிக்க, அதே இயக்குநரின் துணையுடன் எலி அவதாரமெடுத்திருக்கிறார் காமெடிப் புலியான வடிவேலு.

    இயக்குநரை வடிவேலு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையா.. அல்லது காமெடிப் புலியான வடிவேலுவை இயக்குநர் சரியாக உபயோகப்படுத்த தவறிவிட்டாரா? அட இருவரிடமுமே சரக்கு அவ்வளவுதானா? என்றெல்லாம் கேட்க வைக்கிறது இந்த எலி.

    60களில் நடக்கும் கதை. சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்ட காலகட்டம். அந்த நேரத்தில் சிகரெட் கடத்தலில் நம்பர் ஒன்னாகத் திகழும் பிரதீப் ராவத்தைப் பிடிக்க திட்டமிடுகிறது போலீஸ்.

    தனது குழுவுடன் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து சாமர்த்தியமாகத் தப்பி வரும் வடிவேலுவை உளவாளியாகப் பயன்படுத்தி, ராவத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது.

    வடிவேலும் உளவாளி எலியாக, ராவத் கூட்டத்துக்குள் சாமர்த்தியமாகப் புகுந்துவிடுகிறார். இறுதியில் அந்த எலி வில்லனைக் காட்டிக் கொடுத்ததா... சிக்கிக் கொண்டதா என்பது க்ளைமாக்ஸ்.

    60களில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தில் இருந்த 'மதராஸை'க் காட்ட ரொம்பவே பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம், ஏதோ ஒரு பழைய ஈஸ்ட்மென்ட் கலர் படம் பார்க்கும் உணர்வைத் தருகின்ற பல காட்சிகள். அதுவும் வடிவேலுவைக் கடத்தும் ஒரு காட்சி. பிரதீப் ராவத்தின் கோட்டை, உள்ளே சீட்டாடிக் கொண்டிருக்கும் அடியாட்களையெல்லாம் பார்க்கும்போது குடியிருந்த கோயில் நினைவுக்கு வருகிறது.

    Eli Review

    இந்தக் கதையில் யாராவது ஒரு ஆக்ஷன் ஹீரோ நடித்து, வடிவேலு பிரதான காமெடியனாக இருந்திருந்தால் படத்தின் ரேஞ்சே வேறு. ஆனால் 2.15 மணிநேரப் படத்தில் அத்தனை காட்சிகளிலும் வடிவேலுவே வருவது அலுப்பைத் தருகிறது.

    தெனாலிராமனில் வடிவேலுவும் - யுவராஜ் தயாளனும் செய்த அதே தவறு இந்தப் படத்திலும். படம் முழுக்க வடிவேலு இருக்கிறார். ஆனால் சிரிப்பு எங்கோ ஓரிரு இடங்களில் மட்டுமே எட்டிப் பார்க்கிறது. குறிப்பாக படம் துவங்கும் முன் போடப்படும் குடி-புகைக்கு எதிரான பிரச்சார கார்டில்!

    இவரை ஊமை என்று நினைத்து கைதிகள் ஊமைப் பாஷை பேசுவதும், நிஜமான ஊமைகளிடம் இவர் மாட்டிக் கொள்வதும் அரதப் பழசான காமெடிகள்.

    Eli Review

    உடனிருக்கும் காமெடியன்கள் ஒருவர் கூட சோபிக்கவில்லை. பாவா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், வெங்கல்ராவ் போன்றவர்களை ஓரிரு காட்சிகளில் ஓரம்கட்டியிருக்கிறார்கள்.

    சதா வருகிறார். இரண்டு பாடல்களுக்கு நடனமாடுகிறார். பார்க்க பவாயில்லை என்று சொல்லுமளவுக்கு மேக்கப். கண்டிப்பாக இனி கொஞ்ச நாளைக்கு வடிவேலு டூயட் பாடக் கூடாது, பெண் வேஷத்தில் வரக் கூடாது என்று தடை போட வேண்டும்.

    Eli Review

    படத்தில் வரும் மேரே சப்னோ கி ராணி.. பாடல் பெரிய இளைப்பாறல். பின்னணி இசை என்ற பெயரில் பழைய ஜேம்ஸ் பாண்ட் பட ட்ராக்கைப் போட்டிருக்கிறார் வித்யாசாகர். பழைய காலப் படம் என்று ஒளிப்பதிவாளருக்கு ஒவ்வொரு காட்சியின் போதும் சொல்லிக் கொண்டே இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அரதப் பழசாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    படத்துக்குப் படம் பாடி லாங்குவேஜை மாற்றி, குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்த அந்த கைப்புள்ளயும், குளத்துப் பாண்டியும், ஸ்டைல் பாண்டியும் இன்னும் கண்முன் வலம் வருகிறார்கள். இன்னும் நம்பிக்கையிருக்கிறது காமெடிப் புயல், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

    English summary
    Vadivelu's fourth attempt as hero Eli is a not much impressive one. All his efforts gone in vain due to pathetic making and presentation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X