»   »  கெத்து - விமர்சனம்

கெத்து - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன்


ஒளிப்பதிவு: சுகுமார்


இசை: ஹாரிஸ் ஜெயராஜா


தயாரிப்பு: ரெட் ஜெயன்ட்


இயக்கம்: திருக்குமரன்


ஓகே ஓகேவுக்குப் பிறகு தொடர்ந்து சவலையான திரைக்கதைகளில் நடித்து சோர்ந்த உதயநிதி, கெத்தான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.


கதை இரண்டு கோடுகளாகப் பயணிக்கிறது. இந்தியாவின் முதன்மை விஞ்ஞானியைக் கொல்ல முயற்சிக்கும் கூலி கொலைகாரன் விக்ராந்த் ஒரு ட்ராக்.


Geththu Review

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் சுற்றி வரும் எமி ஜாக்சனுக்கு உதவும் உதயநிதி ஸ்டாலினின் அப்பா சத்யராஜ் மீது திடீரென ஒரு கொலைப் பழி விழுகிறது. ஜெயிலுக்குப் போகிறார். இந்தக் கதை இன்னொரு ட்ராக்.


இந்த இரண்டு கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அந்தப் புள்ளியில் கூலிக் கொலைகாரன் சிக்குகிறானா? சத்யராஜ் தப்பிக்கிறாரா? என்பது இறுதிக் காட்சி.


Geththu Review

இப்படி ஒரு கதையை முடிவு செய்த பிறகு, திரைக்கதையை எத்தனை பரபரப்பாக அமைத்திருக்க வேண்டும்?


அங்குதான் ஸ்லிப்பாகியிருக்கிறார் புதியவர் திருக்குமரன்.


Geththu Review

ஆரம்ப பாதி சற்றே நிதானமாக நகர, இரண்டாவது பாதியில் கொலைகாரனை நெருங்கும் காட்சிகளில் எந்த விறுவிறுப்பும் இல்லாமல் போகிறது.


பிளேயரில் ரெகார்ட்டை போட்டுவிட்டு அந்த ஒலிச் சத்ததில் கொலை செய்யும் காட்சியெல்லாம் எம்ஜிஆர் காலத்திலேயே மலையேறிவிட்டதே... இந்தத் தலைமுறைக்கு இது புதுசாகத் தெரியும் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ... அல்லது அவருக்கே கூட ரெகார்ட் ப்ளேயர் புதிய அனுபவமோ!


Geththu Review

உதயநிதிக்கு ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாகவே கைவருகின்றன. ஆனால் உதயநிதியை இப்படிப் பார்ப்பதை விட சந்தானத்துடன் கூட்டணி போட்டு கலாட்டா காமெடி செய்வதைப் பார்க்கத்தான் பிடிக்கிறது. உதைக்கவும் வாங்கவும் ஆயிரம் ஹீரோக்களிருக்கிறார்கள் உதய்.. இன்னும் நாலு படங்கள் சிரிக்கச் சிரிக்க பண்ணுங்க... ஆக்ஷனை அப்புறம் கவனிக்கலாம்!


எமி ஜாக்சன் ரொம்பவே அந்நியமாக இருக்கிறார். அவருக்கும் ஹீரோவுக்கும் கெமிஸ்டிரி, பிசிக்ஸ் எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை!


Geththu Review

சத்யராஜ் நடிப்பு கன கச்சிதம். ஆனால் வயசுக்கு மீறிய அந்த ரொமான்ஸ் சில்மிஷங்கள் பார்க்கச் சகிக்கலை.


கஷ்டப்பட்டு காமெடி செய்யும் வேலை இல்லை கருணாகரனுக்கு. உதயநிதியின் போலீஸ் நண்பராக வந்து நம்மைக் காப்பாற்றுகிறார்.


விக்ராந்த்தை இப்படியொரு கூலிக் கொலைகாரனாகப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. பொருத்தமாகவும் உள்ளது. இந்த ரூட்டையே பிடிச்சுக்கங்க விக்ராந்த்!


இயற்கையும் கேரளாவும் போல அத்தனை பாந்தமாக செட் ஆகியிருக்கின்றன இசையும் ஒளிப்பதிவும். அதிலும் அந்த க்ளைமாக்ஸில் குமுளி என்று காட்டும் இடத்தின் அழகு, பரபர சஸ்பென்ஸையும் தாண்டி மனசை சில்லிட வைக்கிறது. பாடல்கள் அருமை. பின்னணி இசை? அதற்கு ஹாரிஸை குற்றம் சொல்லிப் பலனில்லை.


ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு உரிய எல்லாமே கெத்தில் இருக்கின்றன... ஆனால் இருக்க வேண்டிய இடத்தில், அளவில் அவை இல்லை என்பதுதான் குறை!

English summary
Udhayanidhi's latest out Geththu is a suspense action thriller but fails to make the viewers to move the tip of their seat.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil