Iravin Nizhal twitter review...பார்த்திபனின் இரவின் நிழல்...சாதித்ததா? இருளில் மூழ்கியதா?

நடிகர்கள் : பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத்

எழுத்து, இயக்கம் : பார்த்திபன்

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை : ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு பிறகு மற்றொரு புதிய முயற்சியாக பார்த்திபன் இயக்கி உள்ள படம் இரவின் நிழல். இன்டிபென்டன்ட் த்ரில்லர் படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

அவர் காலை தொட்டு கும்மிடனும் இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா |Iravin Nizhal *Kollywood

ஆசியா மட்டுமின்றி உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டுள்ள படமாக இரவின் நிழல் உள்ளது. ஆசிய சாதனை புத்தகத்திலும் இந்த படம் இடம்பிடித்துள்ளது. இந்த படம் சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

முதலில் ஜுன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இந்த படம் பிறகு ஜுலை 15 ம் தேதிக்கும், ஜுலை 27 ம் தேதிக்கும் மாற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் அன்சென்சார்ட் ப்ரீமியர் ஷோ இன்று திரையிடப்பட்டது. இதன் விமர்சனங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.

எடிட்டரே இல்லாத படம்

எடிட்டரே இல்லாத படம்

எடிட்டரே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள முதல் படம் இது தான். இந்த படத்தின் எடிட்டர் பார்த்திபன் தான். அதுவும் கதையில் மட்டுமே அவர் திருத்தங்களை செய்துள்ளார்.இந்த படத்தில் லீட் ரோலான நண்டு என்ற ரோலில் பார்த்திபன் நடித்துள்ளார். இளம் நடிகையான பிரிகிதாவின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளி குவித்து வருகிறது.

இது தான் படத்தின் கதை

இது தான் படத்தின் கதை

50 வயது மனிதன், குற்றங்கள் நிறைந்த தனது வாழ்க்கை மற்றும் அதில் நிறைந்துள்ள பாவங்களை திரும்பிப் பார்ப்பது தான் இரவின் நிழல் படத்தில் கதை. வழக்கமாக பார்த்திபன் படங்களில் பல புதிய முயற்சிகளை கையாண்டிருப்பார். பல கருத்துக்களையும் படம் முழுவதும் வைத்திருப்பார். அதை இரவின் நிழல் படத்திலும் பார்த்திபன் கொஞ்சமும் குறைவில்லாமல் செய்துள்ளார்.

திரைக்கதை எப்படி

திரைக்கதை எப்படி

சினிமா பைனான்சியர், அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை த்ரில்லிங்காக சொல்லி இருக்கும் படம் தான் இரவின் நிழல். திரைக்கதை கொஞ்சம் ஸ்லோ என்றாலும் புத்துணர்ச்சி தருவதாக, புதிதாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இரவின் நிழல், ஒரு வாழ்நாள் அனுபவம் என படம் பார்த்த அனைவரும் கமெண்ட் செய்துள்ளனர்.

படத்தின் ப்ளஸ் என்ன

படத்தின் ப்ளஸ் என்ன

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்க்கலாம். அர்ப்பணிப்பு உணர்வின் உச்சம். வலிகள் அதிகம் உள்ளது. படத்தின் முதல் 30 நிமிடங்கள் படம் உருவாக்கப்பட்ட விதம் தொடர்பான மேக்கிங் வீடியோவை காட்டுகிறார்கள். அதைத் தொடர்ந்து 100 நிமிடங்கள் சிங்கிள் ஷாட் படம். முதல் 30 நிமிடத்திலேயே படம் பார்க்கும் அனைவரையும் மிரள வைத்துள்ளனர். பார்த்திபனின் படைப்பு திறன் முழுமையாக வெளிப்பட்டுள்ள படம். ஒரு மனிதனின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டி உள்ள படம். கண்ணீர், ரத்தம், வலி கலந்து உணர்வு ரீதியாக படத்தை எடுத்துள்ளனர்.

என்ன ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள்

என்ன ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள்

படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் பின்னணி இசை, படத்தின் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. த்ரில்லிங் நிறைந்ததாக இருந்தாலும் படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளனர். பார்த்திபனின் வித்தியாசமான முயற்சி, திறமையின் வெளிப்பாடு, படம் இயக்கி உள்ள விதம் ஆகியவற்றிற்கு ஆடியன்ஸ் கொடுத்துள்ள ரேட்டிங் 5 க்கு 4 முதல் 4.5 புள்ளிகள் கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X