Don't Miss!
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Sports
இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாக். முடிவே எடுக்காமல் திரும்பி வந்த ஜெய்ஷா.. என்ன நடந்தது
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காளி - எப்படி இருக்கு படம்?
Recommended Video

சென்னை: தன்னை பெற்ற தாய், தந்தையைக் கண்டுபிடிப்பதற்காக போராடும் இளைஞனின் பயணமே காளி படத்தின் மையக்கரு.
நடிகர்கள் - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயபிரகாஷ், மதுசூதனன் ராவ், இயக்கம் - கிருத்திகா உதயநிதி. தயாரிப்பு - பாத்திமா விஜய் ஆண்டனி,

அமெரிக்காவில் வசதியாக வாழும் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பரத் (விஜய் ஆண்டனி). அவருக்கு தினமும் ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு பாம்பை பார்த்து மாடு மிரண்டுபோய் அங்கு விளையயாடிக் கொண்டிருக்கும் சின்ன பையனை நோக்கி ஓடி வருகிறது. இதைப்பார்க்கும் சிறுவனின் தாய், பதறிப்போய் ஓடி வருகிறார். இந்த கனவுக்கும், தனக்கும் என்ன தொடர்பு என விஜய் ஆண்டனி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவரது தாய்க்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. அப்போது தான் தெரிய வருகிறது தான் ஒரு தத்துப்பிள்ளை என்று.
இதையடுத்து, தனது பூர்விகத்தை அறிந்து கொள்வதற்காக, தாய், தந்தையைத் தேடி இந்தியா வருகிறார் விஜய் ஆண்டனி. தமது தாய் பற்றிய விவரம் மிக எளிதாக அவருக்கு கிடைத்து விடுகிறது. அந்த விவரத்துடன் தாயை தேடிச் செல்கிறார். ஆனால் அவரது தாய் கனவில் வரும் சம்பவத்தின் போது மாடு முட்டி இறந்துவிட்டது தெரிய வருகிறது. இதையடுத்து தமது தந்தை பற்றி அறிந்து கொள்வதற்காக, தாயின் சொந்த ஊரான கனவுக்கரைக்கு விரைகிறார். கிராம மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ள மருத்துவராக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கு சேவை செய்து கொண்டே தந்தையையும் கண்டுபிடிக்க முயல்கிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார், அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
வழக்கமான தமிழ் சினிமா தான். ஆனால் வித்தியாசமான திரைக்கதை மூலம் அதை சொல்ல முயன்றிருக்கிறார் கிருத்திகா. அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார் என்பதை கடைசி வரை சஸ்பென்சாக வைத்திருப்பதும் நல்ல திரைக்கதை யுத்தி. விஜய் ஆண்டனி தமது தந்தையை தேடும் முயற்சியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாவற்றிலும் அவரையே பயன்படுத்தி இருப்பது புதிய முயற்சி. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதேபோல அமெரிக்காவில் வசதியாக வாழும் ஒரு பெரிய டாக்டர், தன்னுடைய பூர்வீகத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்து இந்தியா வருவதற்கு சொல்லப்பட்ட காரணம் அவ்வளவு வலுவாக இல்லை. அதுவும் எந்த ஒரு வசதியும் இல்லாத கிராமத்திற்கு வந்து பொதுசேவை செய்வதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.
அமெரிக்க டாக்டர், தாய், தந்தையை தேடும் இளைஞர், பிளாஷ்பேக் காட்சிகளில் ரொமான்ஸ் நாயகன், ஆக்ஷன் ஹீரோ என அனைத்து பரிமாணங்களையும் சரியாக செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அளவுக்கு அதிகமாகவும், இல்லை குறைவாகவும் இல்லை. ஆனால் எல்லா கேரக்டர்களையும் நானே தான் பண்ணுவேன் என அடம் பிடிப்பது சரிதானா பாஸ்.

அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு நாயகிகள். அனைவருக்குமே ஒரே வேலை தான். விஜய் ஆண்டனியுடன் டூயட் பாடுவது, காதலிப்பது, இவ்வளவு தான் வேலை என்பதால் சுலபமாக செய்திருக்கிறார்கள்.
காமெடிக்கு நான் பொறுப்பு என அசரடிக்கிறார் யோகிபாபு. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்புவெடி தான். செம டைமிங் ரைமிங் காமெடி. வேல ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் என இரண்டு வில்லன்கள். ஹீரோவுக்கே முழு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளதால், பெரியதாக வேலை இல்லை இவர்களுக்கு. முக்கியமான கதாபாத்திரத்தில் நாசர் மற்றும் ஜெயப்பிரகாஷ். வழக்கம்போல் திறம்பட செய்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல் எல்லாமே கேட்கும் ரகம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை என எல்லாமே ஒ.கே. தான்.
திரைக்கதைக்கு செலுத்திய கவனத்தை, கதையிலும் செலுத்தியிருந்தால், காளி இன்னும் கொஞ்சம் உக்கிரமாக இருந்திருக்கும்.