மாஸ்டர் ஃபர்ஸ்ட் ஹாஃப் எப்படி இருக்கு? ட்விட்டரில் தெறிக்கும் விமர்சனம்.. தரமான இன்டெர்வெல்லாம்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீசாகாது, ஒடிடியில் தான் வெளியாகும் என பரவிய வதந்திகளுக்கு எல்லாம் எண்ட் கார்டு போடப்பட்டுள்ளது.

நேற்று முன் தினமே கிட்டத்தட்ட ஒரு மணி நேர காட்சிகள் வெளியான நிலையில், மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் எப்படி இருக்கு என ட்விட்டரில் நெட்டிசன்களின் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

தெறிக்கும் ஃபர்ஸ்ட் ஹாஃப்

மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாக படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு FDFS கொண்டாட்டத்தால், தியேட்டர் அதிபர்களும் சந்தோஷமடைந்துள்ளனர். மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் பாசிட்டிவ் கமெண்ட்டுகளுடன் தெறிக்கின்றன.

விஜய் ஆக்டிங் வேற லெவல்

தியேட்டரில் மாஸ்டர் படத்தை பார்த்து வரும் ரசிகர்கள், அதன் காட்சிகளை சமூக வலைதளங்களில் சிறு சிறு க்ளிப்களாக போட்டு, படம் வேற லெவல் என்றும், முதல் பாதி வெறித்தனமாக உள்ளது என்றும், ஜேடி கதாபாத்திரத்தில் இதுவரை பார்க்காத தளபதி விஜய்யை ரசிகர்கள் நிச்சயம் எக்ஸ்பீரியன்ஸ் செய்வார்கள் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பட்டாசா இருக்கு

ஏ சென்டர் ரசிகர்களுக்கான படமாக ஆரம்பிக்கும் மாஸ்டர் இடைவேளைக்குள் ஏ, பி மற்றும் சி சென்டர் ரசிகர்களையும் மகிழ்விக்கும் விதமாக அனைத்து விதமான மசாலாக்களுடன் வெடித்து சிதறுகிறது. முதல் பாதி படம் பட்டாசா இருக்கு என இந்த நெட்டிசனும் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

அனிருத் பின்னிட்டாரு

தரையில் செல்போன் விழுந்து கிடக்க மாஸ்டர் படத்தின் இடைவேளை போடப்படும் காட்சியை பகிர்ந்து, முதல் பாதி படம் வெறித்தனமாக இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் அண்ணா, நிச்சயம் இதை உங்களிடம் எதிர்பார்க்கல, இசை மற்றும் பிஜிஎம்மில் ராக்ஸ்டார் அனிருத் சும்மா பின்னிட்டாரு என புகழ்ந்துள்ளார் இந்த நெட்டிசன்.

அதிக எமோஷனல்

மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாதி படம் அதிக எமோஷனலுடன் முடிகிறது. இரண்டாம் பாதி எப்படி தெறிக்கப் போகிறது என்பதை காண ஆவலுடன் வெயிட்டிங் என ஓப்பன் பண்ணா யூடியூப் விமர்சகர் அபிசேக் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாஸ்டரில் அஜித்

மாஸ்டர் படத்தில் நாயகி மாளவிகா மோகனனுக்கு தளபதி விஜய் காதல் கோட்டை கதையை சொல்லும் இடம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் படத்தில் தல அஜித்தின் ரெஃபரன்ஸை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ் காட்டி உள்ளார் என்றும் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெளுத்து வாங்கும் விஜய்சேதுபதி

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதே அளவுக்கு நடிகர் விஜய்சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய்சேதுபதியின் நடிப்பு மற்றும் வசனங்கள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ளன. முத்துப்பாண்டிக்கு அப்புறம் பவானியை யாரும் மறக்க மாட்டாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X