Just In
- 3 hrs ago
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்
- 5 hrs ago
என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு!
- 5 hrs ago
அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை பார்த்தவன் – இயக்குநர் சுரேஷ் சண்முகம் பேட்டி!
- 8 hrs ago
கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- News
பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC
- Automobiles
ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!
- Finance
1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..!
- Sports
இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு
- Lifestyle
மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Naadodigal 2 Review: சமுதாய கனி சமுத்திரகனி சவுக்கடி கொடுக்கும் படமே நாடோடிகள் 2
சென்னை: நாடோடிகள் படம் 2009ல் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது .இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சமுத்திரகணி எடுக்க போகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனே ரசிகர்களுக்கு உற்சாகமாகிவிட்டது ,ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம் மிக தாமாதமாக தற்போது தான் வெளியாகி இருக்கிறது .
நடிகர் சமுத்திரகணிக்கும் இயக்குனர் சமுத்திரகணிக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை ,துடிப்பான வசணங்களுடன் ரசிகர்களை அனுகுவது தான் சமுத்திரகணி அவர்களிடம் எப்போதும் இருக்கும் தந்திரம். அதையே இந்த படத்தில் வேறு ஒரு கதை களத்தின் மூலம் அனுகி இருக்கிறார் .
நாடோடிகள் 2 கதை என்று எடுத்து கொண்டால் பல சமூக சிக்கல்கள் ,அதை எதிர்த்து போராடும் ஒரு இளைஞர் குழு . தோழர் , சகோ என்று வார்த்தைகள் அடிக்கடி பயன் படுத்தும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள். அங்கிருந்து தான் கதை நகர்கிறது. அங்கு ஒரு பிரச்சனை அடுத்து ஒரு பிரச்சனை என பல பிரச்சனைகளை நாயகன் சசிகுமார் எப்படி தன் கருத்து பேச்சுகளின் மூலமாகவும் தனது சண்டையிடும் திறமை மூலமாகவும் எதிர்த்தார் என்பது தான் கதை .
படத்தின் நிறை என்று சொன்னால் படம் எடுத்து கொண்ட களம் என்றே சொல்லலாம் .மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் பின்னனி இசை ,நாடோடிகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சம்போ சிவ சம்போ பாடல். அந்த பாடல் இந்த படத்திலும் ஒரு காட்சியில் வருகிறது உண்மையிலே அந்த இடம் ரசிகர்களின் கைதட்டை அள்ளி விடுகிறது .படத்தில் வரும் போராட்ட காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
எப்போதும் தனது படங்களில் சமுக பிரச்சினைகளை முன் வைக்கும் சமுத்திரக்கனி இந்த படத்திலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு உள்ளார். மிக முக்கியமாக பக , பக , பக என்ற சத்தம் , வார்த்தை உச்சரிப்பு , போராட்டத்தின் உச்சம் என்று இந்த பாடல் தியேட்டர் விட்டு வெளியே வந்தாலும் நம் காதுகளில் கேட்டு கொண்டு இருக்கும்.
படத்தின் நாயகன் பல இடங்களில் திரையரங்கில் அமர்ந்திருக்கும் ரசிகர்களை பார்த்து தான் பேசுகிறார் என்பது போலே தோன்றும் ,ஆரம்ப கட்ட சமுத்திரகணி படங்களில் இந்த விஷயம் கைதட்டுகளை அள்ளி இருந்தாலும் கால சுழற்சியில் மாறாமல் இப்படியே சமுத்திரகணி திரைக்ததை அமைப்பது ரசிகர்களை கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது
அதுல்யா ரவி இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பை வெளிபடுத்தி உள்ளார்.
பரணி நமோ நாராயண மற்றும் தோழர் தோழர் என்று படத்தில் வரும் நபர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தங்களால் என்ன கொடுக்க முடியுமோ அதனை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
சசிகுமார் அடித்து கார் பறப்பது , இரண்டு பஸ்களை வைத்து ஸ்டண்ட் செய்தது கொஞ்சம் ஓவர் சினிமாத்தனம் தெரிந்தது. இதையெல்லாம் செய்யாமல் இருந்துருந்தால் படம் இன்னும் சூப்பர் . நடிகர் சந்திரபாபு நிஜ வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவம் , அந்த 7 நாட்கள் படத்தின் கிளைமாக்ஸ் , பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் வரும் இனவெறி என்று எல்லாம் ஒட்டுமொத்தமாக கலந்து அற்புதமாக திரைக்கதை அமைத்து புதிய பரிமாணத்தில் கொடுத்த சமுத்திரகனிக்கு பாராட்டுக்கள்.
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு படி படி என்று சொல்லும் போது எழுதப்பட்ட வசனங்கள் , தியேட்டரில் சிரிப்பு சத்தம்.
கடந்த பாகத்தை போல நமோ நாராயனன் இதிலும் காமெடியில் கலக்கி உள்ளார். சசிகுமாரை காதலிக்கும் பெண்ணாக அஞ்சலி வருகிறார். புரட்சியுடன் காதலை கலந்த விதம் மிக அழகு.
படத்தில் முக்கியயமாக உடுமலை பகுதியில் நடந்த ஆனவக்கொலை , ஜாதி வெறி , கலப்பு திருமணம் பற்றி மெதுவாக சென்று பட்டும் படாமல் காட்சிகளை நகர்த்தி வித்யாசமாக முடித்தது பாராட்டத்தக்கது.
மூன்றாம் பாலினம் , அரவாணி என்று சொல்ல பட்ட காலகட்டங்களை தகர்த்து வெற்றி பெற்ற ஒரு போலீஸ் அதிகாரியாக அந்த நபர் ஜெயிக்கும் தருணம் உணர்ச்சி பூர்வமானது. படத்தில் பல விஷயங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்ததில் சமுத்திரக்கனி நமக்கு கூற வருவது பாரதியின் வரிகள் தான். "ஜாதிகள் இல்லையடி பாப்பா" . ஜாதிகளே இல்லாத ஒரு குழு தன் வெற்றிக்கொடியை பறக்க விடும் காட்சி நல்ல சிந்தனை.
சமுதாயத்தின் சீர்கேடுகளை படம் எடுத்தால் பார்க்க நல்லா தான் இருக்கும் ஆனா படம் நல்லா ஓடுமா என்பதை பற்றி எந்த விததிலும் கவலை படாமல் சொல்ல வந்த விஷயங்களை திரும்ப திரும்ப ஆணித்தனமாக ஒவ்வொரு படத்திலும் சொல்லிகொண்டே இருக்கும் சமுதாய கனி சமுத்திரகனி அவர்கள் சிந்தனை வெற்றி பெறட்டும் என்று வாழ்த்துவோம்