For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Connect Review: மகளுக்குள் புகுந்த ஆவியை விரட்டினாரா நயன்தாரா? கனெக்ட் விமர்சனம் இதோ!

  |

  நடிகர்கள்: நயன்தாரா, வினய், சத்யராஜ், அனுபம் கெர்

  இசை: ப்ரித்வி சந்திரசேகர்

  இயக்கம்: அஸ்வின் சரவணன்

  Rating:
  3.0/5

  சென்னை: மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவிலும் ஹாலிவுட் தரத்தில் ஹாரர் படங்களை கொடுக்க முடியும் என நிரூபித்தவர் இயக்குநர் அஸ்வின் சரவணன்.

  அவர் இயக்கத்தில் நடிகை நயன்தாரா, வினய், சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள படம் தான் கனெக்ட்.

  கொரோனா காலத்தில் தனது மகளுக்கு பிடித்த பேயை எப்படி ஓட்டுகிறார் நயன்தாரா என்கிற ஒரு வரி கதையை திகில் கலந்து பயமுறுத்துகின்றனாரா இல்லையா? என்பதை வாங்க பார்க்கலாம்..

  நீங்களா ஒண்ணு நினைச்சி தியேட்டருக்கு வராதீங்க.. திடீரென முன் ஜாமின் வாங்கும் துணிவு இயக்குநர்! நீங்களா ஒண்ணு நினைச்சி தியேட்டருக்கு வராதீங்க.. திடீரென முன் ஜாமின் வாங்கும் துணிவு இயக்குநர்!

  கனெக்ட் கதை

  கனெக்ட் கதை

  நாடு முழுவதும் கொரோனா லாக்டவுன் போடப்பட்ட நேரத்தில் தனி தனியாக சிக்கிக் கொண்ட ஒரு கிறிஸ்தவ குடும்பத்தினர் வீடியோ கால் மூலம் கனெக்ட் ஆகின்றனர். மருத்துவரான வினய் கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வரும் நிலையில், அவரும் கொரோனா வைரஸ் தாக்கி இறந்து போகிறார். அப்பாவுடன் பேச வேண்டும் என மந்திரவாதியை அவரது மகள் அன்னா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹனியா நஃபிஸ் பயங்கர ஆவியின் பிடியில் மாட்டிக் கொள்கிறார். தனது மகளை சூசன் ரோலில் நடித்துள்ள நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த கனெக்ட் படத்தின் கதை.

  சீட் எட்ஜ் ஹாரர்

  சீட் எட்ஜ் ஹாரர்

  நயன்தாராவின் படமும் 9ம் நம்பருக்குள் வருவது போல உருவாக என்ன காரணம் என்று தான் தெரியவில்லை. ஆனாலும், 99 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த கனெக்ட் திரைப்படம் ஹாரர் விரும்பிகளுக்கான சரியான தீனியாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. படம் பார்க்க வரும் ரசிகர்களை பயமுறுத்தியே தீருவேன் என இயக்குநர் அஸ்வின் சரவணன் மெனக்கெட்டு இருப்பது நல்லாவே தெரியுது.

  நயன்தாராவின் போராட்டம்

  நயன்தாராவின் போராட்டம்

  ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாதவர் போல மாறிய நடிகை நயன்தாரா கொரோனா காலத்தில் கணவரை இழந்து தவிக்கும் காட்சிகள் மற்றும் மகளுக்கு பேய் பிடித்ததை உணர்ந்து அதில் இருந்து அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என ஒரு தாயாக போராடும் போராட்ட நடிப்பில் மிரட்டி எடுத்துள்ளார். ஏகப்பட்ட நீண்ட நேர சிங்கிள் ஷாட் காட்சிகளில் நிஜமாகவே தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார் நயன்தாரா.

  பிளஸ்

  பிளஸ்

  மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவு பேய் படத்திற்கு தேவையான லைட்டிங், வேகம், ஸ்லோ என ஸ்டெடி கேமராவை பயன்படுத்தி எடுத்திருக்கும் விதம் நிச்சயமாகவே பேய் படத்திற்கான திகிலுக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்கவில்லை. அதே அளவுக்கு இசையமைப்பாளர் ப்ரித்வி சந்திரசேகர் எழுப்பும் சப்தங்கள் ரசிகர்களை அலற வைத்துவிடுவது கன்ஃபார்ம். நயன்தாராவின் நடிப்பு, நயன்தாராவின் அப்பாவாக வரும் சத்யராஜின் நடிப்பு மற்றும் எக்ஸார்சிஸம் செய்ய வரும் ஃபாதராக அனுபம் கெர் குறைந்த காட்சிகளே என்றாலும் நிறைவான நடிப்பைத் தரும் வினய் என அனைவரும் படத்திற்கு பெரிய பிளஸ் ஆகவே உள்ளனர்.

  மைனஸ்

  மைனஸ்

  ஹாரர் படங்களுக்கே உரித்தான பெரிய பிரச்சனை இந்த நயன்தாரா பட்த்திலும் நிறையவே இருக்கு. பார்த்து புளித்துப் போன அதே பழைய டெம்பிளேட் பேய் படக் கதை தான் இந்த கனெக்ட் படத்திலும் இருப்பது ரசிகர்களை ஒரு கட்டத்துக்கு மேல் சோர்வை ஏற்படுத்துகிறது. வெறும் திகிலூட்டும் காட்சிகளை மட்டுமே வைத்து ரோலர் கோஸ்டர் ரைடாக படத்தை கொடுத்து விடலாம் என நினைத்து திரைக்கதையில் பல இடங்களில் இயக்குநர் அஸ்வின் சரவணன் கோட்டை விட்டுள்ளார். அதையும் சரி செய்து புது விதமான கதை மற்றும் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் எல்லாம் வைத்திருந்தால் நிச்சயம் இந்த கனெக்ட் ரசிகர்களை வெகுவாக கனெக்ட் செய்திருக்கும். பேய் பட விரும்பிகள் நிச்சயம் இந்த படத்தை தியேட்டரில் ஒரு முறை பார்த்து திகில் அடையலாம்!

  English summary
  Nayanthara's Connect Movie Review in Tamil (நயன்தாராவின் கனெக்ட் விமர்சனம்): Director Ashwin Saravanan who delivered Maya and Game Over previously now, ready to haunt fans with his Connect movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X