twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நித்தம் ஒரு வானம் விமர்சனம்: அசோக் செல்வனின் 3 விதமான காதல் கதைகள் எப்படி இருக்கு?

    |

    நடிகர்கள்: அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா
    இசை: கோபி சுந்தர்
    இயக்கம்: ரா. கார்த்திக்

    Rating:
    3.5/5

    சென்னை: அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் தான் எழுதிய ஒரு அழகான காதல் நாவலை அப்படியே படமாக்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கவித்துமாகவும் கலர்ஃபுல்லாகவும் இருக்கு இந்த படம்.

    அதில், கதைமாந்தர்களாக அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, ஜீவா, காளி வெங்கட் மற்றும் அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    தான் படிக்கும் இரு டைரிகளின் கடைசி பக்கம் இல்லாமல் போக, அந்த கதையில் உள்ள நிஜ மாந்தர்களை தேடிச் செல்லும் பயண காதல் கதையாக உருவாகி உள்ள நித்தம் ஒரு வானம் சாதித்ததா? சொதப்பியதா என்பது குறித்து இங்கே விரிவாக அலசுவோம் வாங்க..

    என்னை டார்க்கெட் பண்றிங்க..ஓவரத்தான் போறிங்க..விக்ரமனிடம் கொந்தளித்த மணிகண்டன்!என்னை டார்க்கெட் பண்றிங்க..ஓவரத்தான் போறிங்க..விக்ரமனிடம் கொந்தளித்த மணிகண்டன்!

    என்ன கதை

    என்ன கதை

    சிறு வயதில் இருந்தே அப்பா, அம்மாவுடன் கூட நெருக்கமாக இல்லாமல் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மன நிலையோடே எல்லாவற்றிலும் 100 சதவீதம் பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என வளர்ந்து வருகிறார் அசோக் செல்வன். புத்தகம் படிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். ஒரு கட்டத்தில் ஒரு பெண் மீது ஆசை கொள்ள திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன. திருமணத்திற்கு முதல் நாள் இரவு அந்த பெண் தனது முதல் காதல் பற்றி சொல்ல அதை கேட்கும் அசோக் செல்வன் அந்த பெண்ணுக்கு மெளனம் பேசியதே படத்தில் சூர்யா கொடுப்பது போல ஒரு அட்வைஸ் கொடுக்க அந்த பெண் காதலனை தேடி சென்று விடுகிறது.

    மன அழுத்தம்

    மன அழுத்தம்

    மணப்பெண் காதலனை தேடிச் செல்ல தான் காரணமாக இருந்தாலும், தனது திருமணம் தடைபட்டு விட்டதே என்கிற மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் அசோக் செல்வனை குணப்படுத்தும் மருத்துவராக வருகிறார் அபிராமி (விருமாண்டி நாயகி). அசோக் செல்வனைபுரிந்து கொண்டு அவர் 2 டைரிகளை கொடுத்து படிக்கச் சொல்கிறார். இரு டைரிகளிலும் வெவ்வேறு விதமான காதல் கதை. அந்த காதல் கதையின் ஹீரோவாக தன்னையே நினைத்துக் கொள்கிறார் அசோக் செல்வன். அவர் படிக்க படிக்க காட்சிகளாக திரையில் அந்த இரு காதல் கதைகளும் நம் கண் முன்னே அழகாக விரிகின்றன.

    கடைசி பக்கம் இல்லை

    கடைசி பக்கம் இல்லை

    ஒரு பக்கம் ஷிவாத்மிகா உடன் கல்லூரி காதல் போர்ஷன் சில்லுனு ஒரு காதல் படம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் கிராமத்தில் அபர்ணா பாலமுரளியுடன் ஒரு கதை ஓடிக் கொண்டிருக்கிறது. திடீரென கதையில் ட்விஸ்ட் போல அந்த இரு கதைகளின் கடைசி பக்கமும் இல்லை. மீண்டும் டென்ஷன் ஆகி அபிராமியிடம் கிளைமேக்ஸை கேட்க, அதை தேடி நீயே போ என சொல்ல, சண்டிகருக்கும் கல்கத்தாவிற்கும் அசோக் செல்வன் பயணப்பட அவருடன் சேர்ந்து பயணிக்கிறார் இன்னொரு ஹீரோயின் ரிது வர்மா.

    கிளைமேக்ஸ் என்ன ஆச்சு

    கிளைமேக்ஸ் என்ன ஆச்சு

    இரண்டு கதையிலும் தன்னை பொறுத்திப் பார்த்த அசோக் செல்வனுக்கு அங்கே இருக்கும் நிஜம் சற்றே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தருகிறது. அந்த இருவரது காதல் கதையும் ஹேப்பி என்டிங் ஆனதா? அசோக் செல்வன் யாரை திருமணம் செய்து கொண்டார் என்கிற ட்விஸ்ட் உடன் நித்தம் ஒரு வானம் அழகான கவிதையாக முடிகிறது.

    பலம்

    பலம்

    எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அப்படியே நடிக்கும் அசோக் செல்வன் இந்த கதைக்கு மிகப்பெரிய பலம். அதிலும், அந்த இரு டைரியிலும் வரும் கதாபாத்திரமாக மாறி ஒட்டுமொத்தமாக 3 வேடங்களில் இந்த படத்தில் வெரைட்டி காட்டி நடித்திருக்கிறார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளிக்கு இணையாக ஷிவாத்மிகாவும் நடிப்பில் மிரட்டி உள்ளார். விது அய்யனாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டுகிறது. எந்த இடத்திலும் கதை புரியாமல் போய் விடக் கூடாது என்கிற கவனத்துடன் எடிட் செய்திருக்கும் அண்டனியின் எடிட்டிங் அபாரம்.

    பலவீனம்

    முதல் பாதி ஏகப்பட்ட கேள்விகளையும், நாயகன் உடன் இணைந்து அவர் செய்யப் போகும் பயணத்திற்கும் நம்மை தயார் படுத்திய நிலையில், இரண்டாம் பாதியில் வரும் அபர்ணா பாலமுரளியின் போர்ஷனின் நீளம் படத்திற்கு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. சில காட்சிகள் ஏற்கனவே பார்த்து பழகிய தமிழ் சினிமா பாணியில் இருப்பதை இயக்குநர் தவிர்த்து இருக்கலாம். பாடல்கள் கேட்ட உடனே பிடிக்கும் ரகத்தில் இல்லாமல், கதைக்கு வேகத்தடையாக உள்ளன. இப்படி இருக்கும் சில குறைகளை தவிர்த்து விட்டு இந்த படத்தை பார்த்தால், நிச்சயம் புதிய அனுபவமாகவே இருக்கும்!

    English summary
    Nitham Oru Vaanam Movie Review in Tamil (நித்தம் ஒரு வானம் விமர்சனம்): Ashok Selvan, Ritu Varma, Aparna Balamurali and Shivathmika starrer different love story movie will definitely makes fans a happy vibe after went out from theaters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X