»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாடகத்தை சினிமா என்று சொல்லி காட்டுகிறார் டைரக்டர் விசு.

படத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் விசு படம் என்று தெரியும் வகையில் பெயர் வைத்து விட்டு அந்த நம்பிக்கை சற்றும் பொய்த்து விடாமல் அக் மார்க்குடும்பக் குழப்பத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார் விசு.

கதை ரொம்ப பழசு. ஆனால் வழக்கம் போல இடியாப்ப சிக்கல்கள் மூலம் கதையை நகர்த்தாமல் கொஞ்சம் லேசாகவே டீல் செய்திருக்கிறார் விசு.

இதுதான் கதை: கதாநாயகன் சிகாமணிக்கு (வழக்கம் போல் எஸ்.வி.சேகர்) வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள். மனைவி சொல்லைக் கேட்பதா,அம்மா சொல்வதைக் கேட்பதா, அக்கா சொல்வதைக் கேட்பதா என்ற குழப்பத்தில் தவிக்கிறான்.

நான் தான் வளர்த்தேன் என்று அடிக்கடி கூறி தம்பியை தன் பக்கம் வைத்துக் கொள்ள நினைக்கிறார் அக்கா (மனோரமா), கட்டியதால் கணவன் என்சொல்தான் கேட்க வேண்டும் என்று கூறும் மனைவி (கோகிலா கிடையாது - ஊர்வசி), கண்டிப்புடன் பேசும் அம்மா (சண்முக சுந்தரி), வேலையில்லாமல்வெட்டிப் பேச்சு பேசும் அக்கா வீட்டுக்காரர் (அத்திம்பேராக கிரேஸி மோகன்), அப்பாவி அப்பா (சுந்தர்ராஜன்), பக்கத்து வீட்டுக்காரனோடுஓடிப் போகத் துடிக்கும் மகள் என ஒரு பத்து பாகிஸ்தான்களுக்கு மத்தியில் குடியிருக்க முடியாமல் வீட்டை விட்டு ஜகா வாங்குகிறான் சிகா.

கல்யாண மண்டபம் நடத்தும் விசுவிடம் வேலைக்கு சேருகிறான். தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று பொய் சொல்கிறான். அங்கு தனது வீட்டுஞாபகத்தில் அவன் செய்யும் சேட்டைகளைக் கண்டுபிடிக்கும் வாட்ச்மேன் வடிவேல் (உஹஹஹஹஹா குமரிமுத்து), முதலாளியிடம் அதைத் தெரிவித்து சிகாமணிக்குகல்யாணம் ஆகியிருக்க வேண்டும் என்று சந்தேகத்தைக் கிளப்புகிறான்.

இதையடுத்து அவனிடம் முதலாளி விசு விசாரிக்கிறார். அப்போது தனது வீட்டுக் குழப்பத்தை விவரிக்கிறான் சிகாமணி.

சிகாமணி வீட்டுக் குழப்பங்கள் பெரிய சிக்கலாக இருப்பதை உணர்ந்த முதலாளி விசு, அதைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி ஒவ்வொருமுடிச்சாக அவிழ்க்கிறார். அத்தனை குழப்பத்தையும் தீர்த்து வைத்த பின்னர் சிகாமணி குழப்பங்களிலிருந்து ரிலீசாகிறான்.

படம் என்னவோ எஸ்.வி.சேகரை மையமாக வைத்தே செல்கிறது. ஆனால் கடைசியில் எஸ்.வி.சேகர் மூலம் முதலாளி விசுவின் பிரச்சினையும் தீருகிறது.30 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தனது ஊனமுற்ற மனைவியை, சிகாமணியின் மனைவி கொடுக்கும் தகவலை வைத்து கண்டுபிடிக்கிறார் விசு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil