For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Penguin Review: மொத்த படத்தையும் ஒத்தை ஆளாகத் தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்!

  By
  |

  Rating:
  3.0/5
  Star Cast: கீர்த்தி சுரேஷ், லிங்கா, மதம்பட்டி ரங்கராஜ்
  Director: ஈஸ்வர் காத்திக்

  காணாமல் போன மகனைத் தேடும் கர்ப்பிணித் தாய், மகனையும் அவன் காணாமல் போனதற்குப் பின்னுள்ள முடிச்சையும் அவிழ்த்தால், அதுதான் பெண்குயின்!

  நிறைமாதக் கர்ப்பிணி ரிதம், ஆறுவருடத்துக்கு முன் காணாமல் போன மகன் மீதான கவலையில் இருக்கிறார்.

  ACTRESS KEERTHY SURESH |ஒரு scene நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் | V-CONNECT | FILMIBEAT TAMIL

  அவனை எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை. அவருக்கு ஆதரவாக முதல் கணவன், இரண்டாவது கணவன், தோழிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர், டாக்டர் ஆகியோர் இருக்கிறார்கள்.

  ப்ளிஸ்.. திரும்ப வாங்க.. நடிகர் சுஷாந்துக்காக கண்ணீர்விட்டு அழுத நடிகை.. வைரலாகும் டிக்டாக் வீடியோ!

  எப்படி கண்டுபிடிக்கிறார்

  எப்படி கண்டுபிடிக்கிறார்

  இதற்கிடையே தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போகிறது. ஆனாலும் ரிதம் தனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறாள். நினைத்த மாதிரியே ஒரு நாள் அவள் எதிரில் வந்து நிற்கிறான் மகன். ஆனால், மொத்தமாக வேறொருவனாக. அவனை கடத்தியது யார்? எதற்காக இந்த கடத்தல் என்ற கேள்வி எழ, தனது செல்ல நாய் உதவியுடன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.

  கர்ப்பிணி கீர்த்தி சுரேஷ்

  கர்ப்பிணி கீர்த்தி சுரேஷ்

  சார்லி சாப்ளின் மாஸ்க் அணிந்தபடி குடையுடன் வரும் அந்த கில்லர் காட்சியோடு தொடங்குகிறது, படம். ஆனால் அந்த மிரட்டல், கடைசி வரை சென்றிருக்க வேண்டாமா? மொத்த படத்தையும் ஒத்தை ஆளாக தாங்கி நிற்கிறார் கீர்த்தி சுரேஷ். நிறைமாதக் கர்ப்பிணி ரிதமாக வயிற்றை பிடித்துக்கொண்டு நடப்பது, குழந்தையை தேடித் தவிப்பது, திடீரென ஒரு நாள் மகன் எதிரில் வந்து நிற்கும்போது கண்ணீர்விட்டு கதறுவது, கிளைமாக்ஸில் அந்த அதிர்ச்சியை எதிர்கொள்வது என, தான் தேசிய விருது நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அவர் நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சி.

  நித்யா கிருபா

  நித்யா கிருபா

  அவரது முதல் கணவராகவும் அஜய்யின் அப்பாவாகவும் வரும் லிங்கா, இரண்டாவது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், டாக்டர் டேவிட்டாக வரும் மதி, தோழி நித்யா கிருபா, போலீஸ் இன்ஸ்பெக்டர் திலக் ராம்மோகன் ஆகிய அனைவரும் சரியான தேர்வு. காணாமல் போகும் மகனாக வரும் மாஸ்டர் அத்வைத், அமைதியான நடிப்பில் பயம் கொள்ள வைக்கிறார்.

  ரசிக்க வைக்கின்றன

  ரசிக்க வைக்கின்றன

  சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும் கதையோடு நம்மை அழகாக இழுத்து செல்கிறது. கடத்தல்காரன் இடதுகை பழக்கமுள்ளவன், அதட்டினால் சொன்னதைக் கேட்கும் மகன், தொடர்ந்து வரும் அந்த மாஸ்க் மனிதன் என்ன சின்ன சின்ன புத்திசாலித்தனக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

  நாடகத்தனம்

  நாடகத்தனம்

  இதுதான் நடக்கும் என்பதை முன்பே யூகித்துவிடக் கூடிய பலவீனமான திரைக்கதை, ஏற்கனவே சில படங்களில் பார்த்துவிட்ட காட்சி அமைப்புகள், படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கின்றன. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அந்த கேம், சரியான நாடகத்தனம். இருந்தாலும் கர்ப்பிணி தாய் பெண்குயினாக கண் முன் நிமிர்ந்து நிற்கிறார் கீர்த்தி சுரேஷ்!

  English summary
  Penguin story about a pregnant woman goes in search of her first child, who has been missing for six years.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X