twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Michael Review: பொறுமையை ரொம்ப சோதிக்கிறாங்க.. சந்தீப் கிஷன், விஜய்சேதுபதியின் 'மைக்கேல்' விமர்சனம்!

    |

    நடிகர்கள்: சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி
    இசை: சாம் சி.எஸ்
    இயக்கம்: ரஞ்சித் ஜெயக்கொடி

    Rating:
    2.5/5

    சென்னை: புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கவுசிக், கெளதம் மேனன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    90களில் நடக்கும் ஆக்‌ஷன் படமாக ரெட்ரோ ஃபீலிங்கில் மைக்கேல் படத்தின் மேக்கிங் மிரட்டுகிறது.

    ஆனால், அதே சமயம் ஆமை போல மெதுவாக நகரும் திரைக்கதையும் வலுவில்லாத மற்ற கதாபாத்திரங்களும் மைக்கேல் படத்தை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்கிற விரிவான விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

    'மைக்கேல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! 'மைக்கேல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

    மைக்கேல் கதை

    மைக்கேல் கதை

    மும்பையில் பிரபல தாதாவாக வலம் வரும் குருவை (கெளதம் மேனன்) எதிர்பாராத விதமாக ஆதரவற்ற இளைஞரான மைக்கேல் காப்பாற்றுகிறார். பின்னர், குரு அவரை டெல்லிக்கு அனுப்பி வைக்க அங்கே தாதா குருவின் மகள் தீராவுக்கும் (திவ்யான்ஷா கவுசிக்) மைக்கேலுக்கும் காதல் ஏற்படுகிறது. 90களில் ரெட்ரோ லுக்கில் நடக்கும் இந்த கேங்ஸ்டர் கதையில் விஜய்சேதுபதி எங்கே இருந்து வருகிறார். மைக்கேலுக்கும் விஜய்சேதுபதி கதாபாத்திரத்துக்கும் என்ன பிரச்சனை. குருவை முதலில் கொல்லத் திட்டம் போட்டது யார்? என பல ட்விஸ்ட்களை வைத்து இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி உருவாக்கி உள்ளார்.

    முரட்டுத்தனமான உடம்புடன்

    முரட்டுத்தனமான உடம்புடன்

    2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரஸ்தானம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சந்தீப் கிஷன் தமிழில் யாருடா மகேஷ் படம் மூலம் அறிமுகமானார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மாநகரம் திரைப்படம் தமிழில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மாயவன் படத்தில் நடித்திருந்த நிலையில், மைக்கேல் படத்தில் முரட்டுத்தனமான உடம்புடன் ரத்தமும் வியர்வையும் சிந்தி மைக்கேல் கதாபாத்திரத்திற்கு எந்தளவு வலு சேர்க்க முடியுமோ அந்த அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார் சந்தீப் கிஷன்.

    வெயிட்டான ரோல்

    வெயிட்டான ரோல்

    கெளதம் மேனன், வரலக்‌ஷ்மி சரத்குமார், அனுசுயா பரத்வாஜ் என ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தாலும், அத்தனை பேரையும் தனது அசால்ட்டான நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் வழக்கம் போல விஜய்சேதுபதி. விஜய்சேதுபதியின் வித்தியாசமான கதாபாத்திரம் இந்த படத்துக்கு பெரிய பிளஸ் என்றே சொல்லலாம்.

    பிளஸ்

    பிளஸ்

    ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக் 90 காலக்கட்டத்தை அப்படியே செம ரிச்சாக திரையில் கொண்டு வந்து நிறுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். அதே போல சாம் சி.எஸ். அமைத்துள்ள பின்னணி இசை மிரட்டுகிறது. சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி, கெளதம் மேனன் என முன்னணி நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஆர்ட் வொர்க்குகளும் அருமையாக உள்ளன.

    மைனஸ்

    மைனஸ்

    ஆனால், அதே சமயத்தில் வித்தியாசமாக படம் எடுக்கும் முயற்சியில் திரைக்கதையில் வேகத்தை தவற விட்டு விட்டார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. முதல் பாதி நகரவே அய்யோ போதும்டா சாமி, பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க என்கிற ரேஞ்சுக்கு திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது. இரண்டாம் பாதியில் படத்தை கொண்டு முடித்த இடமும் வழக்கமான படமாகவே அமைந்து விட்ட நிலையில், படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை. புதிய முயற்சியை விரும்பி பார்க்கும் சினிமா விரும்பிகள் நிச்சயம் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்!

    English summary
    Sandeep Kishan and Vijay Sethupathi's Michael Movie Review in Tamil is here. Sandeep Kishan gives his best performance till date for this movie. Director Ranjith Jeyakodi's different attempt not pick up the audience pulse.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X