»   »  பாட்டு எப்படி?

பாட்டு எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தின் ராக்கிளிப் பாட்டு, தமிழில் சினேகிதியே. பிரியர்ஷன் இயக்கம். வித்யா சாகர் இசை.

மலரே மெளனமா என்று மயக்கிய வித்யாசாகர், இதிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக "தேவதை வம்சம் நீயோ... புதிய கவிஞர் விஜய்எழுதியிருக்கிறார். நன்றாக இருக்கிறது. சித்ராவும், சுஜாதாவும் குரலில் கொஞ்சுகிறார்கள்.

மலையாளத்து ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஒரு பெயர் வித்யாசாகருக்கு உண்டு. பாடல்களும் ரஹ்மானின் சாயலிலேயே இருக்கிறது.

"தூரதேசம் .. கிராமத்து சாயலில், ஒரு பாட்டு. காதல் மதி எழுதியிருக்கிறார். சுஜாதாவுடன், வேணுகோபால் பாடியிருக்கிறார். தாலாட்டுகிறது.ஆற அமர உட்கார்ந்து கேட்கலாம்.

"கல்லூரி மலரே மலரே ... வைரமுத்துவின் வைர வரிகளுக்கு சித்ரா, சுஜாதா, சங்கீதா சாஜித் குரல் கொடுத்திருக்கிறார்கள். தாளம் போட வைக்கும்கல்லூரித் துடுக்குத் தனம் பாடலில் தெரிக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாமல், அட்டகாசத்தைக் காட்டியுள்ளார் வித்யாசாகர் இந்தப் பாடலில்.

ஸ்ரீனிவாஸின் காதல் குரலில் "கண்ணுக்குள் மின்னல் .. பாடலாகத் தெரியாமல், கவிதையாகத் தெரிகிறது. காதல் மதி எழுதியிருக்கிறார். துவக்கம்அழகாக இருந்தாலும் கூட போகப் போக லேசாக போரடிக்கிறது.

"ஒத்தையடிப் பாதையிலே .. வைரமுத்துவின் இன்னொரு பாட்டு. சுத்தமான அக்மார்க் ஏ.ஆர்.ரஹ்மான் சாயல். இருந்தாலும் ரஹ்மானைப் போலவித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறார் வித்யாசாகர் என்று எடுத்துக் கொள்ளலாம். நன்றாகவும் இருக்கிறது. இலா அருண், மானசி ஆகியோர்குரல்களைக் கேட்டால், உயிரே படத்தின் "தையா தையா ஞாபகத்திற்கு வரலாம்.

வைரமுத்துவின் மூன்றாவது பாட்டு "ராதையின் மனது .. கலக்கலாக இருக்கிறது. சித்ரா, சுஜாதா, சங்கீதா ஆகியோரின் குரல்களை மிக்ஸியில் அடித்துக்கொடுத்திருக்கிறார் வித்யாசாகர். மீண்டும் மீண்டும் கேட்டாலும் திகட்டாது.

கொஞ்சம் மலையாள சாயல் இருந்தாலும் கூட தமிழுக்கும் கூட சினேகிதமாகவே இருக்கிறது பாடல்கள்.

சினேகிதியே - கலர் மத்தாப்பு

புது டிரஸ்ஸோட, கையில் ஸ்வீட்டை வைத்துக் கொண்டு, குடும்பத்தோட, டிவியில் வரப் போகும் பாடல்களை ரசியுங்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

பிரியமானவளே ..கண்ணுக்கு கண்ணாக ...

சீனு ... வானவில் ...

வண்ணத் தமிழ் பாட்டு...தெனாலி ..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil