»   »  சுள்ளான்: பட விமர்சனம்

சுள்ளான்: பட விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தூள் போல பட்டையைக் கிளப்பும் ஆக்ஷன் கதையை பண்ண நினைத்து சுள்ளான் படத்தைஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு பிடித்த கதையாக ஒரு காமெடி படம் தான்வந்திருக்கிறது.

இப்போது வரும் எல்லா ஆக்ஷன் படங்களின் கதாநாயகர்களைப் போல, தொட்டவுடன் கோபம் பற்றிக்கொள்ளும் ஹீரோவாக தனுஷ் நடித்திருக்கிறார். இவரது அம்மாவை வில்லன் பசுபதி கெட்ட வார்த்தை பேசிதிட்டிவிட, தனுஷ் அவரது சட்டையைப் பிடித்து சண்டைக்குப் போய்விடுகிறார்.

இதனால் கோபமான பசுபதி, தனுஷ் மீது பாசமாக இருக்கும் காலேஜ் சீனியரைப் போட்டுத்தள்ளி விடுகிறார்.உடனே தனுஷ் நடுரோட்டில் அந்தப் பிணத்துடன் போராட்டம் நடத்தி, கலாட்டா செய்து பசுபதியை கைது செய்யவைக்கிறார். இதனையடுத்து பசுபதியின் ஆட்கள் தனுஷின் அப்பா மணிவண்ணனைக் கொலை செய்துவிடுகிறார்கள்.

கடைசியில் தனுஷ் ஜெயிலுக்குப் போய், பசுபதியைக் கொலை செய்து படத்தை முடித்து வைக்கிறார்.

முதல் பாதியில் தனுஷ் எவ்வளவு பொறுப்பில்லாத பையன் என்பதையும், பார்ப்பதற்கு சுள்ளான் மாதிரிஇருந்தாலும் சண்டையில் நெருப்பு என்பதையும் காட்ட சில அடிதடிக் காட்சிகளை வைத்து கேரக்டர் பில்ட் அப்செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.

அதேபோல் பசுபதி கொடுமையான வில்லன் என்பதையும் கூற வேண்டுமே. வட்டிக்காசு தராத போலீஸை நடுவீதியில் வைத்து அடிப்பதையும், தன்னை எதிர்த்துக் கூட்டம் போட்டு பேசுகிற கம்யூனிஸ்ட் ஆளை பட்டப் பகலில்மேடை மீது ஏறிக் கொல்வதையும் காட்டுகிறார்கள். இது போன்ற காட்சிகள் இப்போது எல்லா படங்களிலும்வருவதால், படம் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பை விட சலிப்புதான் வருகிறது.

சரி, இயக்குனர் மீது பரிதாபப்பட்டு அவர் விருப்பப்படியே, ஹீரோ பெரிய சுள்ளான்தான், வில்லன் பெரியரெளடிதான் என்று நாம் ஒத்துக் கொண்டு மேலே படம் பார்த்தால், அப்போதாவது நமக்கு ஒரு ஆறுதல்கிடைக்கிறதா? வில்லனை அழிக்க ஹீரோ அசகாய சூரத்தனம் எல்லாம் செய்வார் என்று எதிர்பார்த்தால்ஜெயிலுக்குப் போய் பொசுக்கென ஒரே சண்டையிலேயே கொன்று விடுகிறார்.

காதல் கொண்டேன், திருடா திருடி படங்களில் தனக்கேற்ற கேரக்டர்களில் அசத்திய தனுஷ், இந்த ஒரே படத்தில்,ரஜினி, விஜயகாந்த் ரேஞ்சுக்குப் போக நினைத்திருக்கிறார். அவர் உடல்வாகுக்கு சற்றும் பொருந்தாமல், 10, 15தடியர்களை பறந்து பறந்து அடிக்கும்போது தியேட்டரே சிரிக்கிறது.

அதேபோல் நரம்பு புடைக்க அவர் பஞ்ச் டயலாக்கைப் பேசும்போது, பாவம் ரொம்பவும் கஷ்டப்படுது புள்ளே,கொஞ்சம் பயந்துருங்க என்று வில்லன்களிடம் ரெகமண்ட் செய்யத் தோன்றுகிறது.

கதாநாயகி சிந்து துலானி அரைகுறை ஆடையில் வருவதைத் தான் நடிப்பு என்று எண்ணுகிறார் போல. எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்துக்கு இவரை புக் செய்துள்ளாராமே. நடிக்கும் கதாநாயகி வேண்டும் என்றால், அந்தமுடிவை சூர்யா மறுபரிசீலனை செய்வது நல்லது.

வில்லன் பசுபதி இன்னும் விருமாண்டி பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபடவில்லை. அதே டயலாக் டெலிவரி,அதே பாடி லாங்க்வேஜ், எதுக்கெடுத்தாலும் முறைப்பு . இது உங்க வளர்ச்சிக்கு நல்லதா பசுபதி?

வித்யாசாகரின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. கோர்வையில்லாத காட்சியமைப்புகள், தத்து பித்துவசனங்கள், சிரிப்பை வரவழைக்கும் ஆக்ஷன் காட்சிகள் என நீண்டு கொண்டே போகும் குறைகளைத் தவிர்த்துஇப்படத்தில் பாராட்டும்படி ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

தனுஷ் அடிக்கடி வில்லன்களைப் பார்த்து, சுள்ளான்டா... வந்தா நாறிடுவே என்று கூறுகிறார். படம் பார்க்கவருபவர்களுக்கும் இந்த டயலாக் பொருந்துவது தான் வேதனை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil