twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    movie review : சுல்தான் படம் எப்படி இருக்கு?

    |

    நடிகர்கள் :

    கார்த்தி,
    ரஷ்மிகா மந்தனா,
    நெப்போலியன்,
    லால்
    சதிஷ்
    யோகிபாபு

    இயக்குனர்: பாக்யராஜ் கண்ணன்

    இசை : யுவன் ஷங்கர் ராஜா, விவேக் & மெர்வின்

    Rating:
    3.0/5

    சென்னை: கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான்.

    Recommended Video

    Sulthan Poster Pakiri Review |Filmibeat Tamil

    இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாடல்களுக்கு விவேக் & மெர்வின் இசையமைத்துள்ளனர்.

    யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார். ரூபன் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படம் வெளியாகியுள்ளது.

    பெரிய ரவுடி கும்பல்

    பெரிய ரவுடி கும்பல்

    பெரிய ரவுடி கும்பலின் தலைவனாக உள்ள நெப்போலியனுக்கு பிறக்கும் மகன் தான் சுல்தான் (கார்த்தி). சுல்தான் பிறக்கும் போதே தாயை இழக்க நேருவதால் ரவுடி கும்பலே சுல்தானை வளர்கிறது. பின்னர் சுல்தான் வெளியூருக்கு சென்று படித்து முடித்து விட்டு சில வருடங்கள் கழித்து வருகிறார். சுல்தான் வருகையை கொண்டாடும் போது நெப்போலியன் மீது துப்பாக்கி சூடு நடக்க, அதற்கு காரணம் போலீஸ் தான் என கண்டுபிடித்து சுல்தான் போலீசாரை சந்தித்து வாய்ப்பு கேட்க, 6 மாத காலம் தங்கள் கும்பல் மேலிருந்து எந்த வித கேஸ்-ம் வராமல் இருந்தால் அனைவரையும் விட்டுவிடுவதாக ஒரு வாய்ப்பை தருகிறார்.
    அந்த வாய்ப்பை எடுத்து கொண்ட சுல்தான் 6 மாத காலம் ரவுடி கும்பலை எப்படி சமாளித்து திருத்தினார், இதற்கிடையில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தனர் என்பதை வைத்து கதைக்களம் சுவாரசியமாக நகர்கிறது.

    இரண்டாவது படம்

    இரண்டாவது படம்

    இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். சுல்தான் பாக்யராஜுக்கு இரண்டாவது படமாகும். இதற்குமுன் 2016ம் ஆண்டு வெளியான ரெமோ படத்தை இயக்கியுள்ளார். ரெமோ படத்தை முழுக்க முழுக்க காதல் படமாக எடுத்தவர், சுல்தான் படத்தை நேர் மாறாக எடுத்துள்ளார். அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட படமாக இயக்கியுள்ள்ளார். கமர்ஷியல்/மசாலா ரீதியாக ஒரு மாஸ் என்டெர்டெய்னர் படத்தை சரியாக கையாண்டுள்ளார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். ஏப்ரல் இரண்டு தனது பிறந்த நாளன்று படம் வெளியாவது கூடுதல் சிறப்பு .

    ஆக்ஷன் ஹீரோ

    ஆக்ஷன் ஹீரோ

    நடிகர் கார்த்தி எப்போதும் தனித்துவமாக கதையை தேர்ந்தெடுத்து தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவர கூடியவர். இந்த படத்திலும் அதற்கு ஏற்றார் போல வித்யாசமான திரைகதையை தேர்வு செய்து தனது பங்கை சிறப்பாக அளித்துள்ளார். சண்டை காட்சிகளில் பெரிய ஆக்ஷன் ஹீரோ போல வியக்க வைக்கிறார். மொத்தத்தில் கார்த்திக்கு இதுவும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

    தமிழில் அறிமுகம்

    தமிழில் அறிமுகம்

    நேஷனல் க்ரஷ் ஆக ரசிகர்களால் முடி சூட்டப்பட்ட ரஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தனக்கே உரிய க்யூட் எக்ஸ்பிரேஷன்களை தந்து திரையில் சொக்க வைக்கிறார். கதாபாத்திரத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் தனது பங்கை சிறப்பாக அளித்துள்ளார். ரஷ்மிகாவிற்கு தமிழில் நல்ல தொடக்கமாகவே அமைந்துள்ளது. பல்லை கடித்து கொண்டு பேசுவதை இனி வரும் படங்களில் தவிர்த்தால் இன்னும் நிறைய நல்ல வாய்ப்புகள் வரும். சும்மா நின்னாலே அவரை ரசிக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு இனி வரும் படங்களில் நடிப்பையும் பலப்படுத்த வேண்டும் .

    முக்கிய கதாபாத்திரம்

    முக்கிய கதாபாத்திரம்

    முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நெப்போலியன் மற்றும் லால் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளனர். இருவரின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கதைக்கு ஏற்றார் போல மிகவும் பொருந்தி நடித்துள்ளனர். எமோஷனல் காட்சிகள் பெரிதும் இம்பாக்ட் ஏற்படுத்தாவிட்டாலும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து உள்ளனர் .வில்லனாக நடித்திருக்கும் ராமச்சந்திர ராஜு கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களாக இருப்பதோடு, அளவாகவும் நடித்திருக்கிறார்கள்

    சிறப்பாக பங்காற்றியுள்ளனர்

    சிறப்பாக பங்காற்றியுள்ளனர்

    தொழில்நுட்ப ரீதியாக சுல்தான் படக்குழுவினர் சிறப்பாக பங்காற்றியுள்ளனர். படத்தின் பாடல்கள் (விவேக் & மெர்வின் இசையில்) முன்னரே வெளியாகி ஹிட் அடித்த நிலையில் படத்தின் பின்னணி இசை (யுவன் ஷங்கர் ராஜா இசையில்) அசத்தலாக அமைந்துள்ளது. ஸ்டண்ட் காட்சிகள் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் சத்ய சூரியன் சண்டை காட்சிகளை சிறப்பாக படம்பிடித்துள்ளார். எடிட்டிங் பணிகளை ரூபன் சரிவர செய்து சிறப்பித்துள்ளார்.குறிப்பாக சண்டை காட்சிகளில் வரும் கிளோஸ் அப் ஷாட்ஸ் மற்றும் ஸ்லோ மோஷன் பில்ட் அப் காட்சிகள் பல இடங்களில் ரணகள படுத்தி உள்ளது .

    வெற்றிப்படமாக அமைந்துள்ளது

    வெற்றிப்படமாக அமைந்துள்ளது

    கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு கடந்த 4 மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்கில் கூட்டத்தை சேர்த்து ஹிட் அடித்த படம் மாஸ்டர் மட்டுமே. திரையரங்கங்களுக்கு மாஸ்டர் திரைப்படம் மாற்றத்தை தந்தது போலவே சுல்தான் திரைப்படம் தர வேண்டும் என்ற எண்ணத்துடன் படத்தின் தயாரிப்பாளரும் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார். பேராதரவு இல்லாவிட்டாலும் ரசிகர்கள் நல்ல ஆதரவையே கொடுத்துள்ளனர். படமும் வெற்றிப்படமாக பல விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள் .தேர்தல் நேரத்தில் எதை பற்றியும் கவலை படாமல் படத்தை தைரியமாக வெளியிட்ட எஸ்.ஆர் பிரபுவுக்கு நிறைய பாராட்டுக்கள் குவிந்து உள்ளது .

    தாடியுடன் திரிந்த

    தாடியுடன் திரிந்த

    சுல்தான் படத்தை பொறுத்த வரை , படத்தின் பல பிரேம்களில் கார்த்தியை சுற்றி இருக்கும் அடியாட்கள் ஏராளம் தாராளம் . ஹிந்தி பேசும் ஒரு தடி ஆள் மற்றும் அண்ணன் தம்பியாக 100 பேர் கொண்ட கும்பலை எங்கும் எதிலும் காட்டி நம்மை மிரளவைக்கிறார்கள். தாடியுடன் திரிந்த பல ஜிம் பாய்ஸ் தங்களது திறமையை காட்ட இந்த படத்தை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளனர். அவர்களுக்குள் இருக்கும் நடிப்பாற்றலை பயன்படுத்தி சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து பாக்கியராஜ் பாராட்டை பெறுகிறார் .

    ஜெய் சுல்தான் என்று

    ஜெய் சுல்தான் என்று

    கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து ஒரு சிறிய கிராமத்தின் விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் காப்பாற்றுவதற்காக மிகப்பெரிய ரவுடி கும்பலுடன் கார்த்தி மோத வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. தனது ரவுடி அண்ணன்கள் மீண்டும் அடிதடியில் இறங்கிவிட கூடாது, என்று நினைக்கும் கார்த்தி, எதிரிகளிடம் இருந்து விவசாயிகளை எப்படி காப்பாற்றுகிறார், என்பதை மாஸாக சொல்லியிருப்பது தான் 'சுல்தான்' கதை.
    ஜெய் சுல்தான் என்று அடிக்கடி சொல்லி "உ"" என்று சத்தமாக கோஷமிட்டு சுல்தானை வணங்கி சண்டை செய்யும் பாசக்கார ரவுடி அண்ணன்கள் வெறித்தனம் . கார்ப்பரேட் வில்லன் என்று அடிக்கடி சமீபத்திய தமிழ் சினிமாவில் காட்டுவது தான் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது .

    அனைத்து அம்சங்களும்

    அடிதடி, வெட்டு குத்து என்று முழுமையான ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், யாரையும் புண்படுத்தாத வகையில் மாஸான ஆக்‌ஷன் காட்சிகள், குறும்புத்தனமான காதல் காட்சிகள், எமோஷனல் குடும்ப காட்சிகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு ஜாலியான படத்தை பார்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சுல்தானை ஒரு முறை குடும்பத்துடன் காணலாம் .

    English summary
    Sultan Movie review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X