twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    The Legend Review: டான்ஸ், ஃபைட், ரொமான்ஸுன்னு கலக்கும் லெஜண்ட் சரவணன்.. தி லெஜண்ட் விமர்சனம்!

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுத்தேலா

    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

    இயக்கம்: ஜேடி ஜெர்ரி

    சென்னை: டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரொமான்ஸ் காட்சிகளிலிலும் பெரு முயற்சி செய்து நடித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

    நல்ல கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு மற்றும் சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் தெளிவாகவே தெரிகிறது.

    இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி விஷுவலாக தங்களது விளம்பரப் படங்களை போலவே பிரம்மாண்டத்தை காட்டி உள்ள தி லெஜண்ட் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்.

    The Legend Twitter Review: ஹீரோவான லெஜண்ட் சரவணன்.. எப்படி இருக்கு தி லெஜண்ட்?The Legend Twitter Review: ஹீரோவான லெஜண்ட் சரவணன்.. எப்படி இருக்கு தி லெஜண்ட்?

    தி லெஜண்ட் கதை

    தி லெஜண்ட் கதை

    உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் சரவணன் தனது கிராமத்தில் உயிர் நண்பராக இருந்து வந்த ரோபோ சங்கர் நீரிழிவு நோய் காரணமாக இறந்து விட, அதே போல் வேறு யாரும் நம்ம நாட்டில் இறக்கக் கூடாது என்பதற்காக புதிய மருந்து ஒன்றை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முயல்கிறார். ஆனால், அதற்கு எதிராக மருந்து மாஃபியா கும்பல் செய்யும் சதிகளை லெஜண்ட் சரவணன் எப்படி எதிர்த்தார் என்பது தான் தி லெஜண்ட் படத்தின் கதை.

    மருத்துவ மாஃபியா

    மருத்துவ மாஃபியா

    பூஞ்சோலை கிராமத்தில் மருத்துவ கல்லூரி எல்லாம் நடத்தி வரும் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக ஏகப்பட்ட ஆராய்ச்சிகளையும் செய்து உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு அப்படியே ஆப்போசிட்டாக சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சுமன் தப்பான மருந்துகளை கண்டுபிடித்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறார். இந்த மருந்து மாஃபியா கும்பலை எப்படி துவம்சம் செய்கிறார் லெஜண்ட் சரவணன் என்பதை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி பிரம்மாண்டமாக சொல்லி உள்ளனர்.

    பாலிவுட் ஹீரோயின்

    பாலிவுட் ஹீரோயின்

    ஆரம்பத்தில் வாத்து மேய்க்கும் பெண்ணாக வரும் பாலிவுட் ஹீரோயினான ஊர்வசி ரவுத்தேலா கட் பண்ணா, சரவணனின் கல்லூரியில் MPhil முடித்த லெக்சரராக வந்து பாடம் எடுக்கிறார். அவருக்கும் லெஜண்ட் சரவணனுக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் வேறலெவல். ஊர்வசி ரவுத்தேலாவின் வீட்டை மோசமான கல்லூரி மாணவர்கள் எரித்து விட, அவர்களை அடித்து பிரிக்கும் லெஜண்ட் சரவணா, பின்னர் அட்வைஸ் பண்ணும் காட்சிகள் அப்ளாஸ் அள்ளுகின்றன.

    பிளஸ்

    பிளஸ்

    ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை, ஜேடி ஜெர்ரி இயக்குநர்களின் கலர்ஃபுல்லான மேக்கிங், ஊர்வசி ரவுத்தேலாவின் கவர்ச்சி, யோகி பாபு சில இடங்களில் செய்யும் காமெடி, நல்ல மெசேஜ் உள்ளிட்ட பல பிளஸ்கள் உள்ளன. யாஷிகா ஆனந்த் உடன் ஆடும் மொசலு மொசலு பாடல் மற்றும் ராய் லக்‌ஷ்மியுடன் நடனமாடும் வாடி வாசல் வாடி பாடல்களும் கலர்ஃபுல்லாக உள்ளன.

    மைனஸ்

    லெஜண்ட் சரவணனின் முதல் படம் என்பதால், பல இடங்களில் அவரது பேச்சும், நடிப்பும் படத்தோடு ஒட்டவில்லை என்பது படத்திற்கு பலவீனமாக மாறி உள்ளது. திரைக்கதையை பிரெடிக்டபிளாக இல்லாமல், சில ட்விஸ்ட்களுடன் இயக்குநர்கள் எழுதி இருந்தால், தி லெஜண்ட் திரைப்படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். நாசர், விஜயகுமார், லதா, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தேவதர்ஷினி, சுமன் என நட்சத்திர பட்டாளமே இருந்தாலும், பலருக்கும் ஸ்கோப் ஏதும் கொடுக்காமல் ஹீரோயிசம் அதிகமாக இருப்பது வேகத்தடையாக அமைந்துள்ளது.

    English summary
    The Legend Movie Review in Tamil (தி லெஜண்ட் விமர்சனம்): Legend Saravanan's debut movie released today in a big manner. Bollywood heroine Urvashi Rautela paired apposite to Legend Saravanan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X