Don't Miss!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வினோதமான காரணத்துக்காக காதலிப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News
'ஓர் கன்னித் தமிழே வா'.. சொந்தமாக பாட்டு எழுதி ராகத்துடன் மேடையில் பாடிய அமைச்சர் எ.வ.வேலு!
- Automobiles
போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைத்த மாருதி! 2 புதிய கார்களுக்கு புக்கிங் குவியுது! மக்கள் போட்டி போட்றாங்க!
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
Thunivu Twitter Review: தூள் கிளப்பியதா துணிவு? அஜித்தின் நம்பிக்கையை காப்பாற்றினாரா எச். வினோத்?
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இரு படங்கள் இன்று வெளியாகி உள்ளன.
விஜய்யின் வாரிசு திரைப்படம் ஃபேமிலி என்டர்டெயினராக வெளியாகி உள்ள நிலையில், அஜித்தின் துணிவு படம் ஆக்ஷன் பிளஸ் கருத்து கொண்ட என்டர்டெயினராக தூள் கிளப்புகிறது.
துணிவு படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் அந்த படம் எப்படி இருக்கு என சொல்லியுள்ள ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..
அலகு குத்தி தொங்கியபடி துணிவு பட கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம்.. மாலை அணிவித்த அஜித் ரசிகர்கள்!

ரமேஷ் பாலா விமர்சனம்
அஜித் ரசிகரான ரமேஷ் பாலா வாரிசு படத்துக்கு 3.25 ரேட்டிங் கொடுத்திருந்தார். அதே நேரம் அஜித்தின் துணிவு படத்துக்கு 4 ரேட்டிங் கொடுத்துள்ளர். அஜித் குமாரின் ஆட்டிட்டியூட், 360 டிகிரி ஆக்ஷன், வசனங்கள் என அனைத்துமே தாறுமாறு என்றும் பணம் பற்றிய மெசேஜ் கூடுதல் போனஸ். கொடுத்த காசுக்கு மேலயே இந்த படம் நிறைவை தருகிறது என பதிவிட்டுள்ளார்.

துணிவு ஒன் மேன் ஷோ
வாரிசு படம் விஜய்யின் ஒன் மேன் ஷோ என பாராட்டப்பட்ட நிலையில், அஜித்தின் துணிவு படமும் ஒன் மேன் ஷோவாகவே இருப்பதாக இந்த ரசிகர் விமர்சித்துள்ளார். முன்னணி நடிகர்களுக்கான படங்களை இயக்கினாலே அது பெரும்பாலும் ஒன் மேன் ஷோவாக மாறுவதை தவிர்க்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

செகண்ட் ஹாஃப் சொதப்பல்
முதல் பாதி முழுவதும் புல்லட் வேகத்தில் சென்ற அஜித்தின் துணிவு திரைப்படம் இரண்டாம் பாதியில் கருத்து சொல்கிறேன் என ரொம்பவே ஸ்லோவாகி விட்டதாக இந்த நெட்டிசன் தனது கருத்தை முன் வைத்துள்ளார். துணிவு படத்துக்கு இவரது ரேட்டிங் 2.75 மட்டும் தானாம்.

பக்கா பொங்கல் விருந்து
அஜித்தின் அட்டகாசம் முதல் பாதி முழுவதுமே திரையை தீப்பிடிக்க வைத்தது. இரண்டாம் பாதியில் நல்ல கருத்துள்ள இளைஞர்களுக்கு தேவையான விழிப்புணர்வு கன்டென்ட் உள்ளது. இந்த பொங்கல் பக்கா பொங்கல் விருந்து காத்திருக்கு என இந்த ரசிகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

எச். வினோத் ஏமாத்திட்டாரு
தல அஜித், பிஜிஎம் சில மாஸ் காட்சிகள் படத்திற்கு பெரும் பலமாக உள்ளது. முதல் பாதி, தேவையில்லாத காட்சிகள், திரைக்கதை, இயக்கம், பிரடிக்டபிள் கிளைமேக்ஸ் என இயக்குநர் எச். வினோத் மீண்டும் ஒரு முறை முதுகில் குத்திட்டாரு என இந்த நெட்டிசன் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

இரண்டுமே பார்க்கலாம்
இந்த பொங்கலுக்கு வெளியான வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களுமே மெகா பிளாக்பஸ்டர் என சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், இரு படங்களும் ரசிகர்களையும் மக்களையும் நிச்சயம் திருப்திப்படுத்தும். பீஸ்ட் மற்றும் வலிமை போல ஏமாற்றாது என்றே ஏகப்பட்ட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.