Varisu Review: விஜய் சும்மா கண் கலங்க வச்சிட்டாரு.. வாரிசு படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: பீஸ்ட் படம் போல வாரிசு படத்தின் நிலைமையும் மோசமாகி விடுமா என்று சற்றே பயந்து கொண்டு இருந்த விஜய் ரசிகர்களுக்கு வாரிசு படத்தின் ப்ரீமியர் ஷோ ரிசல்ட்ஸ் தைரியத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

துணிவு படம் வெளியாவதற்கு முன்னாடியே வாரிசு படத்தை முதலில் இறக்க வேண்டும் என நினைத்த தயாரிப்பாளர் தில் ராஜு ஜனவரி 10ம் தேதி இரவு 8 மணிக்கே வாரிசு படத்தின் ப்ரீமியர் ஷோவை திரையிட்டு விட்டார்.

ப்ரீமியர் ஷோவில் படத்தை பார்த்த விமர்சகர்கள், பத்திரிகை நண்பர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

 வாரிசு பிளாக்பஸ்டர்

வாரிசு பிளாக்பஸ்டர்

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு படம் நடிகர் விஜய்க்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளன. வாரிசு படத்தின் ரிசல்ட் சொதப்பிவிடுமோ என சற்றே பயந்து கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் FDFS ஷோவை உற்சாகமாக கண்டுகளிக்க போகின்றனர். இந்த பொங்கல் வாரிசு பொங்கல் தான் நண்பா என பலரும் ட்வீட் போட்டு வருகின்றனர்.

 ஜெயிச்சிட்டோம் மாறா

ஜெயிச்சிட்டோம் மாறா

வாரிசு படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என படத்தை பார்த்த பல விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் வம்சி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை இந்த பொங்கலுக்கு கொடுத்துள்ளார். வாரிசு படத்தின் கதைக்களம் தெரிந்தது தான் என்றாலும் விண்டேஜ் விஜய்யின் நடிப்பு ரசிகர்களை கடைசி வரை ஹோல்ட் செய்து உள்ளது என்றும் ஜெயிச்சிட்டோம் மாறா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 மெட்டி ஒலி ரெஃபரன்ஸ்

மெட்டி ஒலி ரெஃபரன்ஸ்

வாரிசு படம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக இந்த முறை வெளியாகாமல் குடும்பம் மொத்தமும் சேர்ந்து பார்க்கக் கூடிய எமோஷனல் படமாக உருவாகி உள்ளது. ஆனால், நடிகர் விஜய்யின் பர்ஃபார்மன்ஸ் வேறலெவல் வெறித்தனம் என அபிஷேக் ராஜா விமர்சித்துள்ளார். ரப்பர் பேண்ட் போல வளையும் விஜய்யின் உடம்பு மற்றும் ட்ரோல் பண்றவங்களுக்கு இந்தா வச்சிக்கோ மெட்டி ஒலி ரெஃபரன்ஸ் என படம் வெயிட்டு காட்டுகிறது என ஏகப்பட்ட ட்வீட்களை போட்டுள்ளார்.

 ஒன் மேன் ஷோ

ஒன் மேன் ஷோ

அஜித்துக்கு சாதகமாக பாக்ஸ் ஆபிஸ் ட்வீட்களை போட்டு வருபவர் ரமேஷ் பாலா என சொல்லப்பட்டு வரும் நிலையில், வாரிசு படத்தை பார்த்து விட்டு ஒன் மேன் ஷோ வாரிசு திரைப்படம் என விமர்சித்து 3.25 ரேட்டிங்கையும் கொடுத்து நடிகர் விஜய்யின் கரிஷ்மாவை வெகுவாக பாராட்டி உள்ளார். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டருக்கு போகும் ரசிகர்களை இந்த முறை வாரிசு படம் ஏமாற்றாது என்பது மட்டும் நிச்சயம்.

 என்னத்த சொல்றது

என்னத்த சொல்றது

அதே சமயம் விஜய்யின் வாரிசு படத்தின் காமெடி காட்சிகள் கிரிஞ்சாக இருப்பதாக ட்ரோல்கள் வெளியாகி உள்ளன. வலைப்பேச்சு அந்தணன் தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னத்த சொல்றது" என ட்வீட் போட்டு இருப்பது படத்தின் நெகட்டிவ் விமர்சனமாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X