For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எங்கேயோ செல்ல வேண்டிய கதை, எங்கோ போய்... அப்புறம் இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

  By
  |

  Rating:
  2.0/5

  Varalakshmi Opens up #MeeToo | Varalakshmi Sarathkumar | Neeya 2

  நடிகர்கள்: வரலட்சுமி, ரமேஷ் திலக், அர்ஜாய்

  இயக்கம்: மனோஜ்குமார் நடராஜன்

  காட்டுக்குள் வாழும் பழங்குடியினரின் வீடுகள் தீக்கிரையாக, அதற்குப் பின் இருக்கும் கார்ப்பரேட்டின் சூழ்ச்சியை வெளிக்கொண்டு வரும், வெல்வட் நகரம்.

  காட்டுக்குள் இருக்கும் பழங்குடியினரை அங்கிருந்து காலி செய்ய நினைக்கிறது காப்பரேட் நிறுவனம் ஒன்று. மறுக்க, தீக்கிரையாகிறது அந்தப் பகுதி. அதுபற்றிய ரகசிய டாக்குமென்ட், நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கஸ்தூரிக்கு கிடைக்கிறது.

  கொல்லப்படுகிறார்

  கொல்லப்படுகிறார்

  அதை வெளிக்கொண்டு வர, மீடியாவை சேர்ந்த அவர் தோழி வரலட்சுமி முயற்சிக்கிறார். அவருக்குத் தகவல்கள் தருவதாகச் சொல்லும் கஸ்தூரி, திடீரென கொல்லப்பட, மதுரையில் இருந்து சென்னை வருகிறார் வரலட்சுமி. தோழியின் வில்லாவில் தங்கிக் கொண்டு கஸ்தூரி சொன்ன அந்த டாக்குமென்ட்டை தேடுகிறார். அது கிடைத்ததா? கார்பரேட்டின் சூழ்ச்சியை வெளிக்கொண்டு வந்தாரா? இவருக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் படம்.

  பாதிப்பை ஏற்படுத்தாமல்

  பாதிப்பை ஏற்படுத்தாமல்

  இதை நோக்கி மட்டுமே கதை சென்றிருந்தால் சிறப்பான ஒரு படத்தைப் பார்த்திருக்க முடியும். ஆனால், இங்கிருந்து தடாலென, திருட்டு மோசடி கும்பல் ஏரியாவுக்குள் நுழைய, எங்கோ செல்ல வேண்டிய விஷயங்கள் எங்கெங்கோ சென்று 'அப்புறம் அவங்கள்லாம் செத்துட்டாங்களா, ஓகே' என்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், சப்பென்று முடிகிறது படம்!

  மோசடிக் கும்பல்

  மோசடிக் கும்பல்

  நாயகி வரலட்சுமி ஆவேசமாக என்ட்ரி ஆகிறார். அவ்வப்போது கோபப்படுகிறார். இரண்டாம் பாதியில் சிக்கலில் மாட்டிக்கொண்டு கண்ணீர் விடுகிறார். பிறகு ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால், அவரை ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது திரைக்கதை. அவர் தோழியாக வரும் மாளவிகா, கணவர் பிரதீப்பை மோசடிக் கும்பல் தாக்கும் போதும், என்ன நடக்கிறது என்பது தெரியாமல் அங்கும் இங்கும் ஓடும்போதும் பிரதீப் கொல்லப்படும் போதும் தனது பயத்தை, தவிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

  பலியாகி விடுகிறார்

  பலியாகி விடுகிறார்

  மோசடி கும்பல் லீடராக வரும் அர்ஜாய்க்கு அதிக வேலையில்லை. முறைப்பாக பார்க்கிறார், போன் பண்ணுகிறார். அதோடு அவர் வேலை முடிந்தது. சந்தோஷ் கிருஷ்ணா தன் பங்குக்கு துப்பாக்கியை வைத்துக்கொண்டு, 'என் மேலயே கை வைக்கியா?' என்று மிரட்டிவிட்டு பொட்டென்று பலியாகி விடுகிறார். சின்ன சின்ன திருட்டு செய்யும் ரமேஷ் திலக் இவர்களோடு மாட்டிக்கொண்டு மிரள்கிறார்.

  துப்பாக்கி முனையில்

  துப்பாக்கி முனையில்

  கண்ணன் பொன்னையா உட்பட இன்னும் சிலரும் இருக்கிறார்கள். படத்தில் இரண்டு ஆக்‌ஷன் பிளாக்குகள் மிரட்டுகின்றன. தவறு செய்த ஒருவனை, அடித்துவிட்டான் என்பதற்காக ஒரு கும்பலே வீட்டுக்குள் உட்கார்ந்து, துப்பாக்கி முனையில் மெகா கொள்ளை பிளான் போடுவதெல்லாம் வெல்வட் நகரத்தில் மட்டுமே சாத்தியம்!

  அப்பா போனை எடுப்பா

  அப்பா போனை எடுப்பா

  பகத் குமாரின் ஒளிப்பதிவில் ஓபனிங்கில் வரும் அந்த காடுகளின் காட்சி, குளிர்ச்சி. ஏகப்பட்ட ட்ரோன் ஷாட்களை பில்லர் மாதிரி பயன்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. அந்த போலீஸ்காரர் போனில் இருந்து வரும், 'அப்பா போனை எடுப்பா' என்ற ரிங்டோனைக் கணித்து வரலட்சுமி உஷாராகும் காட்சி மட்டும், ரசனையான ட்விஸ்ட். மொத்தப் படத்துக்கும் அதுமட்டும் போதாதே!

  English summary
  A journalist traces the mystery behind the murder of an actress, but she finds herself in a perilous situation after getting cornered by a bunch of goons
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X