twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Victim anthology Review..பா.ரஞ்சித்தின் ‘தம்மம்’ மூவி எப்படி இருக்கு

    |

    விக்டிம் ஆந்தாலஜி - தம்மம் மூவி
    நடிகர்கள்: குரு சோமசுந்தரம், கலையரசன்
    இயக்கம்: பா.ரஞ்சித்
    இசை தென்மாம்
    கேமரா: தமிழ் அழகன்

    Rating:
    3.0/5

    விக்டிம் ஆந்தாலஜியில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தம்மம் குறும்படம் நல்ல மெசேஜை சொல்லுகிறது.

    தம்மம் குறும்படம் சொல்லும் மெசேஜ் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதன் மாற்றான பலனைப்பாராமல் உதவி செய் என்பதே

    தனது குருநாதர் வெங்கட் பிரபு கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு குறும்படத்தை இயக்கி கொடுத்துள்ளார் பா.ரஞ்சித்.

    விருமன் இசைவெளியிட்டு விழா..சூர்யா இப்படி செய்திருக்கக்கூடாது..வருத்தத்தில் சினேகன்!விருமன் இசைவெளியிட்டு விழா..சூர்யா இப்படி செய்திருக்கக்கூடாது..வருத்தத்தில் சினேகன்!

    பா.ரஞ்சித் இயக்கத்தில் தம்மம் குறும்படம்

    பா.ரஞ்சித் இயக்கத்தில் தம்மம் குறும்படம்

    ஆந்தாலஜி கதையில் இரண்டாவதாக வருவது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'தம்மம்' குறும்படம். தம்மம் என்றால் புத்தருடைய சரணங்களில் முக்கியமானது. அதன் பொருள் பலனை எதிர்பார்க்காமல் உதவி செய்வது என்பதாகும். பா.ரஞ்சித் இயக்கம் என்பதால் வெகு யதார்த்தமாக இயல்பாக கதை ஆரம்பிக்கிறது. சுற்றிலும் பச்சை பசேல் வயல் வெளிகள், காணிநிலம் மட்டுமே வைத்துக்கொண்டு நாற்று நடுவதற்காக வயலில் தாண்ணீர் பாய்ச்சி தயார் செய்து கொண்டிருக்கிறார் மின்னல் முரளி பட வில்லன் குரு சோமசுந்தரம்.

    வசனத்தில் ட்விஸ்ட் வைத்த பா.ரஞ்சித்

    வசனத்தில் ட்விஸ்ட் வைத்த பா.ரஞ்சித்

    அருகில் அவரது செல்ல மகள் பள்ளி சீருடையில் அங்குள்ள புத்தர் சிலையின் தோல் மீது ஏறி விளையாடுகிறார். இதை பார்த்த அவர், "சாமி மேல ஏறி நிக்கிறியே கீழேஎ இறங்கு என்று சொல்ல சாமி இல்லைன்னு சொன்ன புத்தர் மீது நிற்கிறேன், நீ எப்படி சாமின்னு சொல்லுவே"ன்னு மகள் எதிர்கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் கீழே இறங்கு என இறக்கி விடுகிறார். (அங்கும் வசனத்தில் ட்விஸ்ட் வைத்துள்ளார் ரஞ்சித்) பின்னர் சிறுமி அங்குள்ள ஆலமரம், வாய்க்கா வரப்பு தண்ணியில் ஓடும் மீன்களுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறார்.

    தேவையற்ற வாக்குவாதம் படுகாயத்தில் முடிகிறது

    இந்த நேரத்தில் அங்கு வரும் பக்கத்து நிலத்து செல்வந்தரான கலையரசன் உயர் ஜாதித்தனத்தையும், செல்வ செழிப்பையும் காட்டுகிறார். காணி நிலத்த வச்சிக்கிட்டு இவன் ஆடுகிற ஆட்டம் எப்படி நெல்ல விளைவிச்சு அறுத்து எடுத்துட்டு போறான்னு பார்க்கிறேன் என்று கோபத்துடன் வயல் வரப்பின் மீது நடக்க எதிரில் வரும் சிறுமி இறங்காமல் நிற்க இறங்கச் சொல்லி மிரட்டுகிறார் கலையரசன். கீழே இறங்கச்சொல்லி சிறுமியை அதட்ட, நீ கீழே இறங்கு என்று சிறுமி சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் அவனை தள்ளி விட்டு செல்கிறாள் சிறுமி, இதனால் சிறுமியை கலையரசன் தாக்க முயல தந்தை வந்து தடுத்து தள்ளிவிடுகிறார் இதில் கலையரசனுக்கு கழுத்தில் காயம்பட்டு மயங்கிவிழுந்து உயிருக்கு போராடுகிறார்.

    தம்மம் என்பதை விளக்கும் கடைசி காட்சி

    காயத்துடன் உயிருக்கு போராடும் அறிவை மருத்துவமனை கொண்டுச் செல்ல குரு சோமசுந்தரம் குரல் கொடுத்து ஆட்களை அழைக்கிறார். மகள் துணையுடன் மேட்டுக்கு தூக்கி வர விஷயம் கேள்விப்பட்டு சொந்தக்காரர்கள் ஓடி வந்து குரு சோமசுந்தரத்தை கொல்ல முயல்கின்றனர். அதற்கு பின் நடப்பதுதான் கதை. தம்மம் என்பதற்கான உண்மையான அர்த்தத்தை சிறுமி மூலம் உணர்த்தியுள்ளார் இயக்குநர். சில நிமிடங்கள் ஆனாலும் கதை வேகமாக நகர்கிறது. படத்தில் யதார்த்தத்தை காட்டுகிறேன் என ஆபாச வசவுகள் சமீப காலங்களில் அதிகம் வருகிறது. இந்த படத்திலும் அதற்கு குறைவில்லாதது குறை. படத்தில் கேமரா இயக்குநர் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் விளையாடுகிறது.

    English summary
    The short film Dhammam directed by Pa Ranjith in Victim Anthology has a good message. The message of Dammam's short film is to help regardless of the alternative of doing duty without expecting the result.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X