twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விடியும் முன்- விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    Rating:
    4.0/5

    நடிகர்கள்: பூஜா உமாசங்கர், மாளவிகா மணிகுட்டன், வினோத் கிஷன், ஜான் விஜய்

    இசை: கிரீஷ் கோபாலகிருஷ்ணன்

    ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்

    தயாரிப்பு: ஜாவேத் கயூம்

    இயக்கம்: பாலாஜி கே குமார்

    பாலாவின் பரதேசி படத்தில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு விடியும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன், என நடிகை பூஜா சொல்லியிருந்தார். அவரது முடிவு எத்தனை சிறந்தது என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் படம்.

    சமீபத்தில் வெளிவந்த கச்சிதமான த்ரில்லர் படங்களில் ஒன்று விடியும் முன்.

    கதை உண்மையிலேயே வித்தியாசமானது, தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்க்காதது.

    முன்னணி விலைமாதான பூஜா, தன்னை கொஞ்சம் சுருக்கிக் கொண்டு தொழில் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு ஒரு அசைன்மென்ட். பிள்ளைக் கறி கேட்கும் ஒரு பெரும் புள்ளிக்கு (வினோத் கிஷன்) 12 வயது சிறுமியை 'ஏற்பாடு' செய்து தருமாறு பூஜாவைக் கட்டாயப்படுத்துகிறான் ஒரு புரோக்கர்.

    பூஜாவும் 12 வயசுப் பெண்ணை ஏற்பாடு செய்து பெரும்புள்ளியிடம் அழைத்துப் போகிறார். போன இடத்தில் புள்ளியைக் கொன்றுவிட்டு தப்பிவிடுகிறார்கள் இருவரும். அவர்களைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள் புரோக்கர், செத்துப் போன புள்ளியின் மகன் மற்றும் சிறுமியை உண்மையில் ஏற்பாடு செய்த தாதா ஆகிய மூவரும்.

    இந்தத் துரத்தலில் எப்படித் தப்புகிறார்கள் பூஜாவும் சிறுமியும் என்பது செம த்ரில்லிங் க்ளைமாக்ஸ்.

    உண்மையில் கதையை ஒரு கோர்வையாக சொல்ல வேண்டுமே என்பதற்காக நாம் இப்படி தொகுத்துச் சொன்னாலும், யாரும் கணிக்க முடியாத வகையில் திரையில் கதை முடிச்சுகளை அவிழ்க்கும் புது இயக்குநர் பாலாஜி கே குமாரின் பாணி மெச்சத்தக்கது.

    நீ...ண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றினாலும், நடிப்பில் இன்னும் ப்ரெஷ்ஷாகவே இருக்கிறார் பூஜா. நிச்சயம் இன்றைக்குள்ள வேறு எந்த நடிகையாவது இந்தப் பாத்திரத்தை இந்த அளவு மெனக்கெட்டுச் செய்திருப்பாரா சந்தேகமே!

    புரோக்கராக வரும் அமரேந்தரனிடம் ரேட் பேசும் காட்சி, ரயில் நிலையத்தில் அந்த சின்னப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்யுமிடம், புரோக்கரிடம் சிறுமிக்காக அடிவாங்குமிடம் என ஒவ்வொரு காட்சியிலும் புதிய நடிப்பைப் பார்க்க முடிகிறது. சொந்தக் குரல் கொஞ்சம் பிசிறு தட்டினாலும், கேட்க வித்தியாசமாகத்தான் உள்ளது.

    பூஜாவுக்கு அடுத்து பார்வையாளர்களைக் கவர்பவர் சிறுமியாக வரும் மாளவிகா. வயதை மீறிய தேர்ந்த நடிப்பு தெரிகிறது.

    புரோக்கராக வரும் அமரேந்திரன், பெரும்புள்ளியாக வரும் வினோத் கிஷன், லங்கனாக வரும் ஜான் விஜய், சில காட்சிகளில் வந்தாலும் மனதைக் கவரும் லட்சுமி ராமகிருஷ்ணன்... அத்தனைப் பாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. ரொம்ப நாளைக்குப் பிறகு உதிரிப் பாத்திரங்களின் பெயர்கள் கூட நினைவில் நிற்குமளவு, கச்சிதமான திரைக்கதை!

    இந்தத் திரைக்கதை குறித்து நிறைய எழுத நினைத்தாலும், அது படம் பார்க்கும்போது சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதால், இத்துடன் நிறுத்திக் கொள்வதே நலம்!

    கொஞ்சம் அடல்ட் கன்டென்ட் என்றாலும், இந்த மாதிரிக் கதைகளை இதைவிட 'சுத்தமாக' எடுப்பது கஷ்டம்தான்.

    பாடல்களில் சுவாரஸ்யமில்லை. ஆனால் பின்னணி இசையில் ஜெயித்திருக்கிறார் கிரீஷ் கோபாலகிருஷ்ணன். அர்த்தமுள்ள பின்னணி இசை!

    Vidiyum Munn Review

    அதேபோல ஒளிப்பதிவு... எக்ஸலன்ட். கதை நடக்கும் களங்களைத் தேர்வு செய்த விதமும் பாராட்டுக்குரியது.

    நிச்சயம் தியேட்டர்களில் போய் பார்த்து ரசியுங்கள்... அதுதான் பாலாஜி கே குமார் போன்ற புதிய, ஆக்கப்பூர்வமான படைப்பாளிக்கு ரசிகர்கள் செய்யும் மரியாதை!

    இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கான நல்ல விடியலுக்கு கட்டியம் கூறும் படம் என்றால்.. நிச்சயம் மிகையில்லை!

    English summary
    Pooja's comeback film Vidiyum Munn is an excellent thriller and must watchable movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X