பார்ஸிலோனாவில் ஸ்ரேயாவிடம் திருட்டு!

By Sudha

Shriya Saran
படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நடிகை ஸ்ரேயா, ரயிலில் பயணம் செய்யும்போது, அவரது பொருள்களை யாரோ திருடி விட்டனர்.

ஆர்யாவுடன் சிக்குபுக்கு எனும் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு லண்டன் சென்ற ஸ்ரேயா, அப்படியே, டான் சீனு என்ற தெலுங்கு படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து சென்றார். அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'போக்கிரி ராஜா' என்ற மலையாளப் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் சென்றார்.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் ஸ்ரேயாவும், அவருடைய நண்பர்களும் அங்கு ஷாப்பிங் சென்றார்கள். அங்குள்ள கடை வீதிகளில் ஸ்ரேயா வீட்டு அலங்கார பொருட்கள், காலணிகள் மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கினார்.

ஷாப்பிங் முடிந்து அவரும், நண்பர்களும் ரெயிலில் ஓட்டலுக்கு திரும்பினார்கள். அப்போது, ஸ்ரேயாவின் 2 பைகளையும், அவர் வாங்கிய காலணிகளையும் யாரோ திருடிவிட்டார்கள். அவர் பறிகொடுத்த 2 பைகளிலும் வீட்டு அலங்கார பொருட்கள் இருந்தன. பெரிய விலைதான் என்றாலும் வெளிநாட்டுப் பொருள்கள் திருட்டு போய்விட்டதே என்று ஸ்ரேயா அலட்டிக்கொள்ளவில்லை.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுபோன்ற திருட்டுகள் நடைபெறுவது சகஜம்தான். ஸ்பெயின் ஒரு அழகான நாடு. பார்சிலோனா மிக அழகான நகரம். மீண்டும் இதே நகரத்துக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் மீண்டும் வரும்போது, என் பொருட்களை கழுத்தில் கட்டிக்கொள்வேன்'' என்றார் காமெடியாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X